என்ன மாதிரியான வெயில் அடிச்சாலும் அசால்ட் செஞ்சுரலாம்... ஆன, அதுக்கு இந்த அக்ஸசெரீஸ்கள் உங்க காருல இருக்கணும்!
கோடை கால பயணங்களுக்கு உதவக் கூடிய டாப் ஐந்து அக்ஸசெரீஸ்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு இன்னும் பல நாட்கள் இருக்கின்றன. இருப்பினும், இப்போதே கோடை வெயில் நம்மைச் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி மே 4ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. பார்க்கப்போனால் இப்போதே கத்தரி வெயில் தொடங்கிவிட்டதைப் போல் வெயில் வாட்டி வதைக்க ஆரம்பித்திருக்கின்றது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் பயணங்களை மேற்கொள்வது நல்லது அல்ல. குறிப்பாக, வெயில் சுட்டெரிக்கும் நேரங்கள் லாங் டிராவல் செய்வதைத் தவிர்ப்பது சிறந்தது. ஆனால் அத்தியாவசிய பயணங்களை நம்மால் தவிர்க்க முடியாது. இதுபோன்ற பயணங்களின்போது நம்முடை கார்களில் சில முக்கிய அம்சங்கள் இருத்தல் அவசியமானது.

அந்த முக்கிய அக்ஸசெரீஸ்கள் பயணத்தை சுவாரஷ்யமானதாக மாற்றுவதற்கு பெரும் உதவியாக இருக்கும். அப்படி என்னங்க அக்ஸசெரீஸ்கள் அவைனு கேக்குறீங்களா?, இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

சன் ஷேட் (Sun Shades)
சூரியன் உச்சியில் இருக்கும்போது சூரிய கதிர்கள் நேரடியாக காரின் மேற்கூரையின் மீது விழும். ஆனால், சிறிது நேரத்தில் அதே சூரியன் மறையும்போது சூரிய ஒளி பக்காவட்டு பகுதி அல்லது முன் மற்றும் பின் புறங்களில் விழும். இந்த நேரங்களில் சூரிய ஒளியிடம் இருந்து காக்கவே இந்த சன் ஷேடுகள் உதவுகின்றன.

இது சூரிய ஒளி ஊடுருவலை தடுத்து கார் கேபின் வெப்பமயமாதலையும் குறைக்கின்றது. ஆகையால், கோடை வெயில் காலத்தில் கார்களில் செல்லும்போது இந்த அம்சத்தை வைத்திருப்பது கட்டாயமானதாக பார்க்கப்படுகின்றது. சில ஆடம்பர ரக கார்களில் யுவி எதிர்ப்பு திறன் கொண்ட ஜன்னல் கண்ணாடிகள் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற கார்களுக்கு சன் ஷேட் பெரியளவில் தேவைப்படுவதில்லை.

கழுத்து மற்றும் இடுப்புக்கான ஓய்வளிப்பான்கள் (Neck Rests and Lumbar Pillow Accessories)
வெயில் காலம் நம்மை விரைவில் சோர்வடைய செய்யும். குறிப்பாக, நேராகவும், நிமிர்ந்தபடியும் அமர்ந்துக் கொண்ட வாகனத்தை இயக்கும்போது கழுத்து மற்றும் இடுப்பு பகுதிகளில் மிக அதிகளவில் சோர்வும், வலியும் ஏற்படும். இதுபோன்று ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக பயணிப்பது என்பது ஆவாத காரியமாகும்.

இத்தகைய நேரங்களை சமாளிக்கும் வகையில் சில குஷன்கள் சந்தையில் விற்கப்படுகின்றன. கழுத்து மற்றும் இடுப்பு பகுதிகளுக்கு அவை ஓய்வளிக்க உதவும். இவற்றின் வாயிலாக தேவையற்ற எரிச்சல் மற்றும் சோர்வை குறைத்துக் கொள்ள முடியும். ஆகையால், எவ்வளவு நீளமான பயணமாக இருந்தாலும் கம்போர்டான ஃபீலை பெற்றுக் கொள்ள முடியும்.

கார்களுக்கான வாசனை பொருட்கள் (Car Fragrance Accessories)
வியர்வை வடிவது என்பது வாடிக்கையான செயல்தான். ஆனால், வெயில் காலங்களில் நம்முடைய உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வடியும். இது நாம் காருக்குள் நுழையும் அதிக துர்நாற்றத்தை வீச செய்யும். இதனை சமாளிக்க நம்முடைய கார்களில் நறுமணத்தை வெளியேற்றக் கூடிய வாசனை திரவியங்களை வைத்திருத்தல் அவசியமானதாக பார்க்கப்படுகின்றது.

இது நறுமணத்தை வெளியேற்றுவதோடு, நம்மையும் புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள உதவுகின்றது. அதேநேரத்தில் சில வாசனை திரவியங்கள் சிலருக்கு தலை வலியை ஏற்படுத்தக் கூடும். ஆகையால், மைல்டான வாசனை திறன் கொண்ட திரவியங்களைப் பயன்படுத்துவது மிக சிறந்தது.

ஸ்மார்ட் கூலண்ட் (Smart Coolants)
காரை எஞ்ஜினை கூலாக வைத்திருத்தல் அவசியமானது. சாதாரணமாகவே எஞ்ஜின்கள் அதிக வெப்பத்தை வெளியேற்றக் கூடியதாக காட்சியளிக்கின்றன. அவற்றை இன்னும் பல மடங்கு கூடுதலாக இந்த கோடை வெயில் வெப்பமடைய செய்கின்றது. இதனை சமாளிக்க ஸ்மார்ட் கூலண்ட் உதவுகின்றது. மேலும், பிரச்னை இல்லா ஏசியை பெறவும் இது உதவும்.

கார் கவர் (Car Cover)
கார் கவர் கோடை வெயிலின்போது தேவைப்படக் கூடிய மிக முக்கியமான அக்ஸசெரீஸ்களில் இதுவும் முக்கியமான ஒன்றுங்க. காரை நிறுத்திய உடன் கவரைக் கொண்டு கார்களை மூடுவதன் வாயிலாக பல்வேறு விதமான பலன்களை பெற்றுக் கொள்ள முடியும். புது பொலிவு இழத்தலை தவிர்ப்பது, தூசி படிதலை தவிர்ப்பது போன்ற பன்முக பயன்கள் காரை கவர் கொண்டு போர்த்துவதன் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும்.

இதேபோல், சுட்டெரிக்கும் வெயிலினால் கார் கேபின் உஷ்னமாவதையும் நம்மால் தடுக்க முடியும். எனவேதான் எப்போதும் வாகனங்களை பார்க்க செய்த உடன் அவற்றை கவர் கொண்டு மூட வேண்டும் என வாகன துறை வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால், நேரமின்மை காரணத்தினால் பலர் இதை கடைப்பிடிப்பதே இல்லை.


Click it and Unblock the Notifications








