கார் இருக்கையை சூப்பரானதாக மாற்ற இத்தன அலங்கார பொருட்கள் இருக்கா!! எல்லாமே ஆன்லைன் ஷாப்பிங்லையே கிடைச்சிரும்!

நீண்ட தூர பயணங்களை சுவாரஷ்யமானதாக மாற்றும் வகையில் விற்பனைக்குக் கிடைக்கக் கூடிய சில பொருட்களின் பட்டியலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்து காணலாம்.

கார் இருக்கையை சூப்பரானதாக மாற்ற இத்தன அலங்கார பொருட்கள் இருக்கா!! எல்லாமே ஆன்லைன் ஷாப்பிங்லையே கிடைச்சிரும்!

வாகனங்களை அழகுப்படுத்தும் விதமாக பன்முக அலங்காரப் பொருட்கள் சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆன்லைன் மற்றும் வாகன உதிரிபாக விற்பனையகங்கள் என இரு நிலைகளில் அவை விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதேவேலையில், ஒரு சில நிறுவனங்கள் 'கிட்' எனும் பெயரில் ஒட்டுமொத்த வாகனத்தையும் அலங்காரம் செய்யக் கூடிய அக்சஸெரீஸ்களை விற்பனைக்கு வழங்குகின்றன.

கார் இருக்கையை சூப்பரானதாக மாற்ற இத்தன அலங்கார பொருட்கள் இருக்கா!! எல்லாமே ஆன்லைன் ஷாப்பிங்லையே கிடைச்சிரும்!

காரின் வெளிப்புறம், உட்புறத்தை முழுமையாக மாற்றிக் கொள்ள இந்த கிட் உதவியாக இருக்கும். இதுமட்டுமின்றி, சில முக்கிய கருவிகளை சிறப்புமிக்கதாக மாற்றிக்கொள்ள கூடிய நவீன கால கருவிகளும் இந்த கிட் வாயிலாக வழங்கப்படுகின்றன. இதேபோல், ஒவ்வொரு பாகத்தையும் தனி தனியாக அலங்காரம் செய்துக் கொள்ளக் கூடிய அக்சஸெரீஸ்கள் நம் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அந்தவகையில், காருக்குள் இருக்கும் இருக்கைகளை அலங்காரம் செய்யும் விதமாக விற்பனைக்குக் கூடிய முக்கிய அலங்காரப் பொருட்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கார் இருக்கையை சூப்பரானதாக மாற்ற இத்தன அலங்கார பொருட்கள் இருக்கா!! எல்லாமே ஆன்லைன் ஷாப்பிங்லையே கிடைச்சிரும்!

கூலிங் சீட்:

வழக்கமான கார்களில் இருக்கக் கூடிய இருக்கைகள் முதுகுபுறத்திற்கு சரியான காற்றோட்டத்தை வழங்காது. இந்த நிலை வியர்வையை வரவழைத்து அதிக இன்னல்களுக்கு ஆளாக்கிவிடும். இதனால் ஒரு சிலர் விரைவில் சோர்வடைந்தும் காணப்படுவர். இத்தகைய அவல நிலையைப் போக்கும் விதமாகவே சந்தையில் கூலிங் சீட் விற்பனைக்கு வழங்கப்படுகின்றது.

கார் இருக்கையை சூப்பரானதாக மாற்ற இத்தன அலங்கார பொருட்கள் இருக்கா!! எல்லாமே ஆன்லைன் ஷாப்பிங்லையே கிடைச்சிரும்!

இது முதுகு மற்றும் பயணிகளின் பின்புறத்திற்கு அதிக காற்றோட்டத்தை ஏற்படுத்தி குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். சில நவீன கால கார்களில் இந்த அம்சம் ஃபேக்டரி ஃபிட்டட் அம்சமாகவே விற்பனைக்கு வழங்கப்படுகின்றது. ஆஃப்டர் மார்கெட்டில் வாங்கப்படும் இந்்த கூலிங் இருக்கையை இயக்க 12வோல்ட் சாக்கெட்டில் இணைக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கார் இருக்கையை சூப்பரானதாக மாற்ற இத்தன அலங்கார பொருட்கள் இருக்கா!! எல்லாமே ஆன்லைன் ஷாப்பிங்லையே கிடைச்சிரும்!

சீட் பேக் ஆர்கனைசர்:

பின்னிருக்கையாளர்கள் தங்களின் உடைமைகளை சீராக வைத்துக் கொள்ளும் ஓர் பொருளே இந்த ஆர்கனைசர். இதில், குளிர்பானம், புத்தம், செல்போன், டேப் உள்ளிட்ட பொருட்களை வைத்துக் கொள்ள முடியும். தேவைப்படும்போது மிக சுலபமாக எடுத்துக்கொள்ள முடியும். பன்முக வெரய்டியில் இது ஆன்லைனில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

கார் இருக்கையை சூப்பரானதாக மாற்ற இத்தன அலங்கார பொருட்கள் இருக்கா!! எல்லாமே ஆன்லைன் ஷாப்பிங்லையே கிடைச்சிரும்!

காற்று மெத்தை:

காற்றடித்து பயன்படுத்தக் கூடிய மெத்தையே உங்களது கார்களில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தற்போது சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த அம்சம் இருந்தால் வீட்டில் இருப்பதைப் போன்ற அனுபவத்தைக் காரில் பயணிக்கும்போது நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக, நீண்ட தூர பயணங்களின்போது ஓய்வெடுத்த வண்ணம் இதில் பயணிக்க முடியும்.

கார் இருக்கையை சூப்பரானதாக மாற்ற இத்தன அலங்கார பொருட்கள் இருக்கா!! எல்லாமே ஆன்லைன் ஷாப்பிங்லையே கிடைச்சிரும்!

முதியவர்கள் மற்றும் சிறுவர்களுடன் வெளியூர் பயணம் செல்பவர்களுக்கு நிச்சயம் இந்த மெத்த பல மடங்கு உதவியாக இருக்கும். இதேபோல் தலையணைகளும் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. குஷன் ஸ்டைல் மற்றும் காற்று நிரப்பிக்கும் கொள்ளும் ஸ்டைல் ஆகிய இரு விதமாகவும் அவை விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

கார் இருக்கையை சூப்பரானதாக மாற்ற இத்தன அலங்கார பொருட்கள் இருக்கா!! எல்லாமே ஆன்லைன் ஷாப்பிங்லையே கிடைச்சிரும்!

சீட் நெக் பில்லோ:

இதனை கழுத்துக்கான பில்லோ என கூறலாம். நீண்ட நேரமாக வாகனத்தில் பயணிக்கும்போது அனைவரும் சந்திக்கக் கூடிய மிகப் பெரிய பிரச்னையாக கழுத்து வலி இருக்கின்றது. இந்த வலியைக் குறைக்கும் பொருட்டு சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் பொருளே சீட் நெக் பில்லோ. அமர்ந்தபடியே உறங்கவும் இந்த பில்லோ உதவியாக இருக்கும். சீட் நெக் பில்லோவைப் போல் கழுத்துக்கான குஷனும் சந்தையில் பிரத்யேகமாக விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

கார் இருக்கையை சூப்பரானதாக மாற்ற இத்தன அலங்கார பொருட்கள் இருக்கா!! எல்லாமே ஆன்லைன் ஷாப்பிங்லையே கிடைச்சிரும்!

முதுக்கான சப்போர்டை வழங்கும் பேட்:

என்னதான் சொகுசான இருக்கைகள் நம்முடை காரில் இருந்தாலும், அது முதுகுக்கு போதுமான சொகுசை வழங்குவதில்லை. இப்படியாகய உணர்பவர்களுக்கு ஏற்பவே தற்போது சந்தையில் முதுக்கான சப்போர்ட்டை வழங்கக் கூடிய பேட் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது முதுகு வலியைக் குறைத்து ரைடிங் அனுபவத்தை சுவாரஷ்யமானதாக மாற்ற உதவியாக இருக்கும்.

கார் இருக்கையை சூப்பரானதாக மாற்ற இத்தன அலங்கார பொருட்கள் இருக்கா!! எல்லாமே ஆன்லைன் ஷாப்பிங்லையே கிடைச்சிரும்!

கார் பெட்ஷீட்டுகள்:

கார்களில் இருக்கும் இருக்கைகள் ரொம்ப சாஃப்ட்டாக இருந்தாலும் சரி, மிகவும் இருக்கமாக இருந்தாலும் சரி ரெண்டுமே தலைவலியைதான் தரும். குறிப்பாக, இதனால் ஏற்படும் அசதியை யாராலும் தாங்கிக் கொள்ளவே முடியாது. இதைப் போக்கக் கூடிய ஓர் அம்சமாகவே இந்த பெட்ஷீட் உள்ளது. இது நீண்ட தூர பயணங்களின்போது ஏற்படும் அசதியை குறைக்க உதவும். குறிப்பாக, ரத்த ஓட்டத்தை சீராக்க இந்த அம்சம் பெரும் உதவியாக இருக்கும்.

கார் இருக்கையை சூப்பரானதாக மாற்ற இத்தன அலங்கார பொருட்கள் இருக்கா!! எல்லாமே ஆன்லைன் ஷாப்பிங்லையே கிடைச்சிரும்!

கார் கோட் ஹேங்கர்:

நம்மில் பலர் தொழில்துறை காரணமாக வெளிநாட்டு உடையான கோட்-ஷூட் உடை பயன்பாட்டிற்கு மாறியிருக்கின்றோம். அலுவலகத்தில் இருக்கும்போது இந்த உடையணிந்திருப்பது சரி. ஆனால், வெளியில் வந்த பின்னரும் அதை அணிந்திருப்பது முடியாதது. இத்தகையோருக்கு உதவும் பொருட்டு கார்களில் துணியை மாற்றி வைத்துக் கொள்ளும் விதமாக கோட் ஹேங்கர்கள் சந்தையில் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. இது நம்முடைய துணியை சுருக்கமில்லாமல் வைத்துக் கொள்ள பெரும் உதவியாக இருக்கும்.

கார் இருக்கையை சூப்பரானதாக மாற்ற இத்தன அலங்கார பொருட்கள் இருக்கா!! எல்லாமே ஆன்லைன் ஷாப்பிங்லையே கிடைச்சிரும்!

வளர்ப்பு நாய்களுக்கான தடுப்பு:

இதை இருக்கையில் மாட்டுவது மற்றும் கழட்டுவது இரண்டும் சுலபமானது. வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவராக நீங்க இருந்தால் நிச்சயம் இந்த தடுப்பு உங்கள் காரில் இருப்பது நல்ல பலனை அளிக்கும். குறிப்பாக, உங்கள் செல்லப் பிராணி அதிக சுட்டித் தனம் செய்யக் கூடியதாக இருக்குமானால், வாகனத்தை ஓட்டும்போது இந்த தடுப்பு உங்களது வளர்ப்பு நாயை சற்று தள்ளி வைத்திருக்க உதவியாக இருக்கும்.

Article Published On: Friday, August 26, 2022, 12:12 [IST]
English summary
Here is list of car seat accessories
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+