இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான கார் பரிசளிப்பு நிகழ்வுகள்... இத்தன கோடி ரூபா காரை பரிசா கொடுத்திருக்காங்களா!!

இந்தியாவில் இதுவரை அரங்கேறிய மிகவும் காஸ்ட்லியான கார் பரிசளிப்பு நிகழ்வுகள் என்று கருதப்படக் கூடிய சம்பவங்களின் தொகுப்பை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம்.

இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான கார் பரிசளிப்பு நிகழ்வுகள்... இத்தனை கோடி ரூபா மதிப்புள்ள காரை பரிசா கொடுத்திருக்காங்களா!

நம் நாட்டில் வாகனங்களை பரிசளிக்கும் நிகழ்வு சற்றே அதிகமாக அரங்கேற தொடங்கியிருக்கின்றது. சிலர் சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக வாகனங்களை பரிசளித்து, அதுகுறித்த வீடியோவை வெளியிட்டு தங்களைத் தாங்களே பெருமைப் படுத்திக் கொள்கின்றனர்.

இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான கார் பரிசளிப்பு நிகழ்வுகள்... இத்தனை கோடி ரூபா மதிப்புள்ள காரை பரிசா கொடுத்திருக்காங்களா!

அதே வேலையில், தங்களின் அன்பானவர்களிடம் இருந்து கூடுதல் அன்பை பெற வேண்டும் என்பதற்காகவும் பலர் வாகனங்களை பரிசளிக்கின்றனர். அந்தவகையில், நாட்டில் இதுவரை செய்யப்பட்ட விலையுயர்ந்த கார் பரிசளிப்பு நிகழ்வுகளின் தொகுதப்பையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான கார் பரிசளிப்பு நிகழ்வுகள்... இத்தனை கோடி ரூபா மதிப்புள்ள காரை பரிசா கொடுத்திருக்காங்களா!

அமிதாப் பச்சன்

ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் (Rolls Royce Phantom)

பாலிவுட் திரையுலகின் ஜாம்பவனாக அறியப்படும் அமிதாப் பச்சன் இவருக்கு இந்தி திரைப்பட இயக்குநர் விது வினோத் சோப்ரா ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் சொகுசு காரை பரிசாக வழங்கினார். எகல்வ்யா திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வெற்றி கரமாக நடைபெற்று முடிந்ததை அடுத்து இந்த கார் பரிசளிப்பு நிகழ்வு அரங்கேறியது.

இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான கார் பரிசளிப்பு நிகழ்வுகள்... இத்தனை கோடி ரூபா மதிப்புள்ள காரை பரிசா கொடுத்திருக்காங்களா!

ஆனால், இந்த காரை தற்போது அமிதாப் பச்சன் செகண்ட் ஹேண்ட் கார் சந்தையில் விற்பனைச் செய்துவிட்டார். இப்போதைய நிலவரப்படி இந்த கார் இந்திய சந்தையில் ரூ. 8.99 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. அதி நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சொகுசு வசதிகளைக் கொண்ட காராக இது இருக்கின்றது.

இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான கார் பரிசளிப்பு நிகழ்வுகள்... இத்தனை கோடி ரூபா மதிப்புள்ள காரை பரிசா கொடுத்திருக்காங்களா!

ட்விங்கிள் கண்ணா

பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் (Bentley Flying Spur)

அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கண்ணா. இவர்களின் பத்தாம் ஆண்டு திருமண தினத்தை முன்னிட்டே அக்ஷய் குமார் தனது மனைவிக்கு பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் சொகுசு காரை பரிசாக வழங்கினார். இந்த கார் ஓர் ஸ்போர்ட்ஸ் வாகன தோற்றம் கொண்ட சொகுசு வாகனமாகும். ரூ. 3 கோடிக்கும் அதிகமான விலையைக் கொடுத்தே இக்காரை அக்ஷய் வாங்கியிருக்கின்றார். இக்காரில் 6 லிட்டர் டபிள்யூ 12 டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான கார் பரிசளிப்பு நிகழ்வுகள்... இத்தனை கோடி ரூபா மதிப்புள்ள காரை பரிசா கொடுத்திருக்காங்களா!

மன்யட்டா தத்

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost)

சஞ்ஜய் தத்தின் மனைவி மன்யட்டா தத். தங்களுக்கு இரட்டை பிள்ளை பிறந்ததை முன்னிட்டு ரோல்ஸ் ராய்ஸ் காரை மனைவி மன்யட்டா தத்திற்கு பரிசாக வழங்கி மகிழ்வித்தார் சஞ்ஜய் தத். இந்த கார் இந்தியாவில் ரூ. 2.5 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்தகைய அதிகபட்ச தொகையிலேயே இக்காரை தனது மனைவிக்கு சஞ்ஜய் தத் பரிசாக வழங்கினார். இந்த காரை மேலும் சிறப்பு வாய்ந்த காராக மாற்றும் விதமாக கூடுதல் சிறப்பு வசதிகள் சேர்ப்பையும் அவர் செய்திருக்கின்றார். இத்துடன், அதிக விலைக் கொண்ட ஃபேன்சி நம்பரும் அக்காருக்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான கார் பரிசளிப்பு நிகழ்வுகள்... இத்தனை கோடி ரூபா மதிப்புள்ள காரை பரிசா கொடுத்திருக்காங்களா!

அர்பிதா கான்

ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் (Rolls Royce Phantom)

சல்மான் கானின் தங்கை அர்பிதா கான். இவரின் திருமணத்தை முன்னிட்டு ரோல்ஸ் ராஸ் பேந்தம் காரை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தினார் சல்மான் கான். இந்த காரை மட்டுமின்றி திருமணம் முடிந்த மூன்று நாட்கள் கழித்து மற்றுமொரு சொகுசு காரையும் அவர் பரிசாக வழங்கினார்.

இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான கார் பரிசளிப்பு நிகழ்வுகள்... இத்தனை கோடி ரூபா மதிப்புள்ள காரை பரிசா கொடுத்திருக்காங்களா!

பிஎம்டபிள்யூ 7 செரீஸ் சொகுசு செடான் காரையே அவர் வழங்கினார். ரூ. 2 கோடிக்கும் அதிகமான விலைக் கொடுத்தே இக்காரை தனது தங்கைக்கு பரிசாக வழங்கியிருக்கின்றார் சல்மான் கான். ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் ரூ. 9 கோடிக்கும் விலைக் கொண்டதாக இருக்கின்றது.

இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான கார் பரிசளிப்பு நிகழ்வுகள்... இத்தனை கோடி ரூபா மதிப்புள்ள காரை பரிசா கொடுத்திருக்காங்களா!

ஷீதல் துக்கர்

லம்போர்கினி ஹூராகேன் (Lamborghini Huracan)

ஷீதல் துக்கர் இந்தியாவில் லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரை வாங்கிய முதல் இளம் பெண் ஆவார். இந்தியாவில் சூப்பர் காரை பயன்படுத்தும் பெண்களிலும் இவர் ஒருவராக இருக்கின்றார். இவரின் தொழிலதிபர் கணவரே இக்காரை பரிசளித்தவர் ஆவார். இந்த காரின் விலை ரூ. 3 கோடிக்கும் அதிகம் ஆகும்.

இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான கார் பரிசளிப்பு நிகழ்வுகள்... இத்தனை கோடி ரூபா மதிப்புள்ள காரை பரிசா கொடுத்திருக்காங்களா!

இத்தகைய விலையுயர்ந்த சூப்பர் காரின் உரிமையாளராக ஷீத்தல் துக்கர் இருக்கின்றார். இந்த சூப்பர் காரில் வி10 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 610 பிஎச்பி பவர் மற்றும் 560 என்எம் டார்க்கை இது வெளியேற்றும். இதன் உச்ச வேகம் மணிக்கு 325 கிமீ ஆகும். மேலும், வெறும் 3.2 செகண்டுகளில் இக்கார் மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை தொடும் திறனை இந்த எஞ்ஜின் கொண்டிருக்கின்றது.

இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான கார் பரிசளிப்பு நிகழ்வுகள்... இத்தனை கோடி ரூபா மதிப்புள்ள காரை பரிசா கொடுத்திருக்காங்களா!

ராம் சரண்

அஸ்டன் மார்டின் வி8 விண்டேஜ் (Aston Martin V8 Vantage)

தெலுங்கு திரை உலகைச் சேர்ந்த இவருக்கு அவரின் மாமியார் வீட்டு பரிசாக அஸ்டன் மார்டின் வி8 வேண்டேஜ் சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டது. அவரின் திருமணத்தின்போதே இக்கார் பரிசாக வழங்கப்பட்டது. டோலிவுட்டில் மிக அதிக சம்பளத்தைப் பெறும் ஓர் நடிகரா ராம் சரண் இருக்கின்றார். இந்த காரின் இந்திய மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும்.

இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான கார் பரிசளிப்பு நிகழ்வுகள்... இத்தனை கோடி ரூபா மதிப்புள்ள காரை பரிசா கொடுத்திருக்காங்களா!

ஜான்வி மாணிக்சந்த்

மெர்சிடிஸ் மேபேக் (Maybach)

மணிக்சந்த் குழுமத்தின் உரிமையாளர் மறைந்த ரசிக்லால் தரிவாலின் மகளே ஜான்வி மாணிக்சந்த். இவரின் திருமணத்தின்போதே மெர்சிடிஸ் மேபேக் கார் பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது. 2004ம் ஆண்டில் அரங்கேறிய இந்நிகழ்வு தற்போது இந்திய வாகன வரலாற்றில் மிக பெரிய சம்பவமாக பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான கார் பரிசளிப்பு நிகழ்வுகள்... இத்தனை கோடி ரூபா மதிப்புள்ள காரை பரிசா கொடுத்திருக்காங்களா!

ஏனெனில் இந்த காரை பிரத்யேகமாக ஜெர்மனியில் இருந்து அவர் இந்தியா இறக்குமதி செய்தார். இந்த ஒற்றை காரை கட்டமைக்க 6 மாதங்கள் ஆகியிருக்கின்றன. மேலும், இந்த காரை அப்போதே ரூ. 4 கோடிக்கும் அதிகமான விலையைக் கொடுத்து ரசிக்லால் தரிவால் வாங்கியிருக்கின்றார்.

இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான கார் பரிசளிப்பு நிகழ்வுகள்... இத்தனை கோடி ரூபா மதிப்புள்ள காரை பரிசா கொடுத்திருக்காங்களா!

சுமன் மேதா

லம்போர்கினி ஹூராகேன் (Lamborghini Huracan)

இந்தியாவில் சூப்பர் காரை பயன்படுத்தும் பெண்களில் சுமன் மேதாவும் ஒருவர். இவர் பயன்படுத்தும் லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் கார் அவரது தொழிலதிபர் கணவரால் பரிசாக வழங்கப்பட்டது. இந்த வாகனத்தை ஆட்டோ ரிக்ஷா மீது மோதியதன் வாயிலாக ஃபேமஸான நபராக அவர் மாறினார்.

இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான கார் பரிசளிப்பு நிகழ்வுகள்... இத்தனை கோடி ரூபா மதிப்புள்ள காரை பரிசா கொடுத்திருக்காங்களா!

இவரின் கணவர் பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். இவரே தனது மனைவிக்காக அரன்சியோ போரியலிஸ் நிற ஹூராகேன் காரை வாங்கி கொடுத்தார். இதன் வாயிலாக இந்தியாவில் சூப்பர் காரை பயன்படுத்தும் ஓர் பெண்ணாக சுமன் மேதா மாறினார். இக்கார் நாட்டில் ரூ. 4 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைத்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான கார் பரிசளிப்பு நிகழ்வுகள்... இத்தனை கோடி ரூபா மதிப்புள்ள காரை பரிசா கொடுத்திருக்காங்களா!

நீதா அம்பானி

மெர்சிடிஸ் மேபேக் 62 (Maybach 62)

முகேஷ் அம்பானி, நீதா அம்பானியின் 50வது பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக மெர்சிடிஸ் மேபேக் 62 சொகுசு காரை பரிசாக வழங்கினார். ரூ. 5 கோடிக்கும் அதிகமான விலைக் கொடுத்து இக்கார் வாங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் இந்த காரை 62 நபர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் ஒருவராக நீதா அம்பானி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான கார் பரிசளிப்பு நிகழ்வுகள்... இத்தனை கோடி ரூபா மதிப்புள்ள காரை பரிசா கொடுத்திருக்காங்களா!

ஷில்பா ஷெட்டி

லம்போர்கினி கல்லர்டோ (Lamborghini Gallardo)

ஷில்பா ஷெட்டிக்கு அவரது தொழிலதிபர் கணவரான ராஜ் குந்த்ரா இக்காரை பரிசாக வழங்கியிருக்கின்றார். இது ஓர் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இந்த காரை சுமார் 3.4 கோடி ரூபாய் செலவில் வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகின்றது. இந்த தற்போது விற்பனையில் இல்லை. லம்போர்கினி கல்லர்டோவிற்கு பதிலாக நாட்டில் ஹூராகேன் கார் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

Source: Cartoq

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here is list of india s most expensive car gifts
Story first published: Saturday, January 1, 2022, 11:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X