ரொம்ப பேருக்கு பிடிச்ச அம்சமுங்க இது... Electrically Adjustable இருக்கையுடன் விற்பனைக்கு கிடைக்கும் 6 கார்கள்!

இந்தியாவில் எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் இருக்கை (Electrically Adjustable Seats) உடன் சற்று குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரொம்ப பேருக்கு பிடிச்ச அம்சமுங்க இது... Electrically Adjustable இருக்கையுடன் விற்பனைக்கு கிடைக்கும் 6 கார்கள்!

இந்தியாவில் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்களின் எண்ணிக்கை சற்றே அதிகரித்துக் காணப்படுகின்றது. டாடா பஞ்ச், நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர் உள்ளிட்டவை மிக சிறந்த பட்ஜெட் கார்களாக காட்சியளிக்கின்றன. குறைந்த விலையில் அதிக சிறப்பு வசதிகளை வாரி வழங்கும் வாகனங்களாகவும் இவை இருக்கின்றன.

ரொம்ப பேருக்கு பிடிச்ச அம்சமுங்க இது... Electrically Adjustable இருக்கையுடன் விற்பனைக்கு கிடைக்கும் 6 கார்கள்!

மக்கள் மத்தியில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. எனவேதான் குறைவான விலையுடைய கார்களையும் அதிக வசதிகள் கொண்டவையாக வாகன உற்பத்தியாளர்கள் விற்பனைக்கு வழங்கி வருகின்றனர்.

ரொம்ப பேருக்கு பிடிச்ச அம்சமுங்க இது... Electrically Adjustable இருக்கையுடன் விற்பனைக்கு கிடைக்கும் 6 கார்கள்!

அந்தவகையில், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மூன்று ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், தானியங்கி கியர்பாக்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் குறைந்த விலை கார்களில் சமீப காலமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று, வாகன ஆர்வலர்களின் மனம் கவர் அம்சங்களில் ஒன்றான எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் வசதிக் கொண்ட இருக்கை அம்சம் (Electrically Adjustable Seats)-ம் சற்றே குறைவான விலையுடைய கார் மாடல்களில் வழங்கப்பட்டு வருகின்றது.

ரொம்ப பேருக்கு பிடிச்ச அம்சமுங்க இது... Electrically Adjustable இருக்கையுடன் விற்பனைக்கு கிடைக்கும் 6 கார்கள்!

அவற்றின் பட்டியலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். அதாவது, எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் இருக்கையுடன் சற்று குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஆறு கார் மாடல்களின் பட்டியலை பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ரொம்ப பேருக்கு பிடிச்ச அம்சமுங்க இது... Electrically Adjustable இருக்கையுடன் விற்பனைக்கு கிடைக்கும் 6 கார்கள்!

நாம் பார்க்க இருப்பவை டாடா பஞ்ச், ரெனால்ட் கைகர் போல ரொம்ப கம்மியான விலைக் கொண்ட கார்கள் என எண்ணி விட வேண்டாம். ஏனெனில், அது பிரீமியம் அம்சங்கள் கொண்ட கார் மாடல்களிலேயே தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. ஆகையால், பட்ஜெட் வாகனங்களைக் காட்டிலும் சற்று அதிக விலையிலேயே அவை விற்பனைக்குக் கிடைக்கின்றன.

சரி, வாங்க என்ன மாதிரியான தொடக்க விலையில் இருந்து இந்த அம்சம் கார்களில் வழங்கப்படுகின்றது என்பதை பார்த்துவிடலாம்.

ரொம்ப பேருக்கு பிடிச்ச அம்சமுங்க இது... Electrically Adjustable இருக்கையுடன் விற்பனைக்கு கிடைக்கும் 6 கார்கள்!

ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta)

சிறப்பம்சங்கள் நிரப்பப்பட்ட வாகனமாக ஹூண்டாய் க்ரெட்டா காட்சியளிக்கின்றது. ஆகையால், இக்காரின் ஆரம்ப விலையே ரூ. 10.23 லட்சமாக காட்சியளிக்கின்றது. இதன் உயர்நிலை தேர்வின் விலை ரூ. 17.94 லட்சமாக உள்ளது. இக்காரின் எஸ்எக்ஸ் (ஓ) எனும் ட்ரிம்மிலேயே எலெக்ட்ரானிக் அட்ஜஸ்டபிள் இருக்கை வசதி வழங்கப்படுகின்றது.

ரொம்ப பேருக்கு பிடிச்ச அம்சமுங்க இது... Electrically Adjustable இருக்கையுடன் விற்பனைக்கு கிடைக்கும் 6 கார்கள்!

எஸ்எக்ஸ் (ஓ) ஓர் உயர்நிலை தேர்வாகும். இதன் விலை எக்ஸ்-ஷோரூமிலேயே ரூ. 16.89 லட்சமாக காட்சியளிக்கின்றது. 1.5 லிட்டர் நேட்சுரல் அஸ்பையர்ட் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய மூன்று விதமான மோட்டார் தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ரொம்ப பேருக்கு பிடிச்ச அம்சமுங்க இது... Electrically Adjustable இருக்கையுடன் விற்பனைக்கு கிடைக்கும் 6 கார்கள்!

ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar)

ஹூண்டாய் க்ரெட்டாவின் மூத்த சகோதரன் என்றே இக்காரை கூறலாம். ஆம், க்ரெட்டாவின் ஸ்டைலை தழுவியே இக்காரை ஹூண்டாய் தயாரித்து வருகின்றது. ஆகையால், இரு கார்களுக்கும் இடையில் கணிசமான ஒத்துப்போக கூடிய அம்சங்களை நம்மால் காண முடிகின்றது. அந்தவகையில், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் இருக்கை வசதி இக்காரில் வழங்கப்பட்டுள்ளது.

ரொம்ப பேருக்கு பிடிச்ச அம்சமுங்க இது... Electrically Adjustable இருக்கையுடன் விற்பனைக்கு கிடைக்கும் 6 கார்கள்!

பிளாட்டினம் ட்ரிம்மிலேயே இந்த அம்சம் வழங்கப்படுகின்றது. இவ்வேரியண்டின் விலை ரூ. 18.29 லட்சம் ஆகும். இதுமட்டுமின்றி பல்வேறு அதிநவீன அம்சங்களும் அல்கஸாரில் வழங்கப்படுகின்றது. மேலும், பெரிய குடும்பங்களுக்கு ஏற்றவாறு ஏழு இருக்கை வசதியும் இக்காரில் வழங்கப்படுகின்றது. ஹூண்டாய் அல்கஸார் ரூ. 16.34 லட்சம் தொடங்கி ரூ. 20.14 லட்சம் வரையிலான விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ரொம்ப பேருக்கு பிடிச்ச அம்சமுங்க இது... Electrically Adjustable இருக்கையுடன் விற்பனைக்கு கிடைக்கும் 6 கார்கள்!

டாடா ஹாரியர் (Tata Harrier)

டாடா நிறுவனத்தின் அதிக கவர்ச்சியான காராக ஹாரியர் எஸ்யூவி காட்சியளிக்கின்றது. இக்காரில் பன்முக பாதுகாப்பு அம்சங்களையும், அதி நவீன தொழில்நுட்ப வசதிகளையும் டாடா மோட்டார்ஸ் வழங்குகின்றது. அந்தவகையில், நிறுவனம் வழங்கும் மிக சூப்பரான அம்சங்களில் ஒன்றே எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்ட் செய்யக் கூடிய இருக்கை அமைப்பு.

ரொம்ப பேருக்கு பிடிச்ச அம்சமுங்க இது... Electrically Adjustable இருக்கையுடன் விற்பனைக்கு கிடைக்கும் 6 கார்கள்!

ஹாரியர் எஸ்யூவி காரின் டாப் ஸ்பெக் மாடல்களான எக்ஸ்இசட்-ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்ஏ-ப்ளஸ் ஆகிய வேரியண்டுகளிலேயே இந்த அம்சம் வழங்கப்படுகின்றது. இவை ரூ. 19.74 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேவேலையில், டாடா ஹாரியர் ரூ. 14.49 லட்சம் தொடங்கி ரூ. 21.70 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ரொம்ப பேருக்கு பிடிச்ச அம்சமுங்க இது... Electrically Adjustable இருக்கையுடன் விற்பனைக்கு கிடைக்கும் 6 கார்கள்!

டாடா சஃபாரி (Tata Safari)

டாடா மோட்டார்ஸ் மற்றுமொரு கவர்ச்சியான காராக சஃபாரி காட்சியளிக்கின்றது. இந்த பெயர் மட்டுமே பழையது என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆம், சஃபாரி காருக்கு புதிய அவதாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், பன்முக நவீன கால அம்சங்களும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

ரொம்ப பேருக்கு பிடிச்ச அம்சமுங்க இது... Electrically Adjustable இருக்கையுடன் விற்பனைக்கு கிடைக்கும் 6 கார்கள்!

அவற்றில், ஒன்றாகவே எலெக்ட்ரிக் அட்ஜஸ்டபிள் இருக்கைகள். இந்த அம்சம் சஃபாரியின் எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட்ஏ ஆகிய ட்ரிம்களில் மட்டுமே வழங்கப்படுகின்றது. இவற்றின் விலை ரூ. 19.80 லட்சம் ஆகும். அதேவேலையில், டாடா சஃபாரி ரூ. 14.99 லட்சம் முதல் ரூ. 23.29 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ரொம்ப பேருக்கு பிடிச்ச அம்சமுங்க இது... Electrically Adjustable இருக்கையுடன் விற்பனைக்கு கிடைக்கும் 6 கார்கள்!

எம்ஜி ஹெக்டர் (MG Hector)

எம்ஜி நிறுவனத்தின் புகழ்பெற்ற எஸ்யூவி ரக காராக ஹெக்டர் காட்சியளிக்கின்றது. இந்த காரில் டிரைவருக்கு மட்டுமின்றி முன்பக்க பயணிக்கும் எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் இருக்கை வசதி வழங்கப்படுகின்றது. ஷார்ப் எனும் ட்ரிம்மிலேயே இந்த சிறப்பான வசதி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இன்னும் பன்முக சிறப்பு வசதிகளையும் இக்காரில் எம்ஜி வழங்குகின்றது. இதன் விலை ரூ. 19.27 லட்சம் ஆகும்.

ரொம்ப பேருக்கு பிடிச்ச அம்சமுங்க இது... Electrically Adjustable இருக்கையுடன் விற்பனைக்கு கிடைக்கும் 6 கார்கள்!

அதேவேலையில், டிரைவருக்கு மட்டும் அட்ஜெஸ்டபிள் இருக்கை வசதியை வழங்கக் கூடிய தேர்வையும் நிறுவனம் வழங்குகின்றது. ஸ்மார்ட் எனும் பெயரிலேயே அந்த தேர்வு விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் விலை ரூ. 17.54 லட்சம் ஆகும். அதேநேரத்தில் இக்கார் மாடல் ரூ. 13.94 லட்சம் தொடங்கி ரூ. 19.90 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ரொம்ப பேருக்கு பிடிச்ச அம்சமுங்க இது... Electrically Adjustable இருக்கையுடன் விற்பனைக்கு கிடைக்கும் 6 கார்கள்!

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700)

தார் எஸ்யூவி காருக்கு அடுத்தபடியாக மகத்தான வரவேற்பை இந்தியாவில் பெற்று வரும் மஹிந்திரா தயாரிப்பாக எக்ஸ்யூவி700 இருக்கின்றது. இக்காரில் ஸ்மார்ட் டூர் ஹேண்டில், மிக அதிக பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பன்முக சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இக்காரில் எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் இருக்கை அமைப்பு, மெமரி ஃபங்க்ஷனுடன் வழங்கப்படுகின்றது.

ரொம்ப பேருக்கு பிடிச்ச அம்சமுங்க இது... Electrically Adjustable இருக்கையுடன் விற்பனைக்கு கிடைக்கும் 6 கார்கள்!

இந்த வசதியை ஏஎக்ஸ்7 எனும் ட்ரிம்மிலேயே மஹிந்திரா வழங்குகின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 18.63 லட்சம் ஆகும். மஹிந்திரா எக்ஸ்யூவி700 ரூ. 12.95 லட்சம் தொடங்கி ரூ. 23.79 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, March 11, 2022, 17:36 [IST]
English summary
Here is list of six cars with electrically adjustable seats
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+