இந்தியாவின் டாப் 10 ஏழு இருக்கை கார்களின் பட்டியல்... குடும்பத்தோட ஜாலியா போக இந்த கார்கள்தான் பெஸ்ட்!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் 10 ஏழு இருக்கைகள் வசதிக் கொண்ட எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

இந்தியாவில் பெரிய குடும்பங்கள் பயணம் செய்வதற்கு ஏற்ப அதிக இருக்கை வசதிகளுடன் பன்முக கார்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றில் மிக சிறந்த டாப் 10 கார்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். குறிப்பாக, எஸ்யூவி மற்றும் எம்பிவி பிரிவிகளில் ஏழு இருக்கைகள் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களின் பட்டியலையே இந்த பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV700)
இந்தியாவின் மிக அதிக பாதுகாப்பான காராக மஹிந்திரா எக்ஸ்யூவி 700 மாடல் கார் காட்சியளிக்கின்றது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் ஐந்திற்கு 5 ஸ்டார்கள் ரேட்டிங்கையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பில் ஐந்திற்கு நான்கு ஸ்டார்கள் ரேட்டிங்கையும் பெற்றிருக்கின்றது. இத்தகைய மிக தரமான காராகவே எக்ஸ்யூவி700 காட்சியளிக்கின்றது.

இந்த கார் நாட்டின் அதிக பாதுகாப்பான கார் மட்டுமில்லைங்க, அதிக இருக்கை வசதிக் கொண்ட வாகனமும்கூட. ஐந்து மற்றும் ஏழு இருக்கைகள் வசதியுடன் இக்கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் மூன்றாவது வரிசை இருக்கைகூட அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்றது. இதுபோன்ற எக்கசக்க சிறப்பு வசதிகளை எக்ஸ்யூவி700 கொண்டிருப்பதால், இந்த புதுமுக காருக்கு நாட்டில் மிக அமோகமான வரவேற்பு நிலவி வருகின்றது.

சமீபத்தில் வெளியாகிய தகவல்களின்படி, இக்காருக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான புக்கிங் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் நாட்டில் ரூ. 12.95 லட்சம் தொடங்கி ரூ. 23.79 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த உச்சபட்ச விலையில் விற்பனைச் செய்யப்படுகின்ற போதிலும் இந்தியர்கள் மத்தியில் இக்காருக்கு மிக சூப்பரான டிமாண்ட் நிலவி வருகின்றது.

கியா கேரன்ஸ் (Kia Carens)
கியா கேரன்ஸ் மிக மிக சமீபத்திய அறிமுகமாக காட்சியளிக்கின்றது. பெருத்த எதிர்பார்ப்பு இந்த காருக்கு நிலவி வந்த நிலையில் பிப்ரவரி 15ம் தேதி அன்று கேரன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. சிறப்பம்சங்கள் நிரம்பி வழியும் எம்பிவி காராகவும் இது காட்சியளிக்கிறது. ரூ. 8.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து இக்கார் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் உச்சபட்ச விலை ரூ. 16.99 லட்சம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

கியா கார்னிவல் (Kia Carnival)
கியா நிறுவனத்தின் மற்றுமொரு அதிக இருக்கைகள் வசதிக் கொண்ட காரே இந்த கார்னிவல். இக்கார் ஓர் பிரீமியம் தர எம்பிவி காராகும். இதுவே கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்த முதல் எம்பிவி ரக காராகும். இந்த கார் தற்போது இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் வி-கிளாஸ் காருக்கு போட்டியளிக்கும் வகையில் விற்பனையில் இருக்கின்றது. ரூ. 25.49 லட்சம் தொடங்கி ரூ. 34.49 லட்சம் வரையிலான விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இக்கார் ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio)
அதிக இருக்கைகள் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஸ்கார்பியோவும் ஒன்று. இந்த கார் ஓர் மிக சிறந்த ஆஃப்-ரோடு வாகனமாக காட்சியளிக்கின்றது. ஆகையால், இந்திய இளைஞர்கள் மத்தியில் இக்காருக்கு நல்ல வரவேற்பு நிலவுகின்றது. பல ஆண்டுகளாக நல்ல டிமாண்டுடன் நாட்டில் விற்பனையில் இருக்கும் காராகவும் இது காட்சியளிக்கின்றது. ரூ. 13.38 லட்சம் தொடங்கி ரூ. 18.14 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் ஸ்கார்பியோ விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரில் அதிகபட்சமாக ஏழு பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner)
பிரீமியம் எஸ்யூவி ரக கார்களில் அதிகம் விற்பனையாகும் காராக ஃபார்ச்சூனர் காட்சியளிக்கின்றது. அதிக இருக்கைகள் மற்றும் பெரிய இட வசதி என பல பிரிவுகளில் மிக சிறப்பான தயாரிப்பாக இது காட்சியளிக்கின்றது. ஆகையால், இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் தனித்துவமான டிமாண்ட் நிலவுகின்றது. இந்த கார் ரூ. 31.39 லட்சம் தொடங்கி ரூ. 43.43 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இக்காரில் ஏழு பேர் வரை அமர்ந்து பயணிக்கலாம்.

மாருதி சுசுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga)
இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எம்பிவி என்று இக்காரை கூறலாம். புதுமுக கார் கியா கேரன்ஸைக் காட்டிலும் குறைவான விலையில் இக்கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 8.12 லட்சமே இதன் ஆரம்ப விலை ஆகும். இதன் உச்சபட்ச விலை ரூ. 10.85 லட்சமாக உள்ளது. இக்கார் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மற்றும் கியா கேரன்ஸ் உள்ளிட்ட கார்களுக்கு விலை மற்றும் சிறப்பம்சங்களில் கடுமையாக போட்டியளிக்கும் வகையில் இருக்கின்றது. இந்த எம்பிவி காரில் ஏழு பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா (Toyota Innova Crysta)
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, நிறுவனத்திற்கு அதிகம் லாபம் ஈட்டி தரும் கார் மாடல்களில் இதுவும் ஒன்று. ஆரம்பத்தில் இன்னோவா என்ற பெயரில் விற்பனைக்குக் கிடைத்து வந்த இக்கார் தற்போது இன்னோவா க்ரிஸ்டா எனும் பெயரில் மிகவும் கவர்ச்சியான எம்பிவி காராக விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரீமியம் தர எம்பிவிக்களில் இதுவும் ஒன்று. இக்கார் தற்போது இந்தியாவில் ரூ. 17.30 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் உச்சபட்ச விலை ரூ. 25.32 லட்சமாக இருக்கின்றது. இந்த காரிலும் ஏழு பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.

டாடா சஃபாரி (Tata Safari)
புதிய அவதாரத்தில் மீண்டும் எஸ்யூவி கார் பிரிவில் சஃபாரி விற்பனைக்கு வந்திருக்கின்றது. இம்முறை முற்றிலும் புதிய தோற்றத்துடன் இக்கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் அதிகபட்சமாக ஏழு பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். ரூ. 14.99 லட்சம் தொடங்கி ரூ. 23.29 லட்சம் வரையிலான விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90)
வால்வோ எக்ஸ்சி90 மிக அதிக விலைக் கொண்ட ஏழு இருக்கை சொகசு கார் இதுவாகும். இந்த கார் இந்தியாவில் ரூ. 90.90 லட்சம் தொடங்கி ரூ. 1.31 கோடி என்ற உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த சொகுசு கார் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எக்ஸ், பிஎம்டபிள்யூ எக்ஸ்7 ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஓர் அதிக சொகுசு அம்சங்கள் கொண்ட கார் மட்டுமில்லைங்க அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட எஸ்யூவி காரும்கூட.

ஜாகுவார் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Jaguar Land Rover Defender)
இந்த பட்டியலில் நாம் பார்க்கும் கடைசி கார் இதுவாகும். இந்த கார் மிக அதிக ஆடம்பர வசதிகளைக் கொண்ட ஏழு இருக்கை காராகும். மேலும், இந்த கார் மிக சிறந்த ஆஃப்-ரோடு எஸ்யூவியாகும் காட்சியளிக்கின்றது. இந்தியாவில் இந்த காரின் ஆரம்ப விலையே ரூ. 80.72 லட்சம் ஆகும். இதன் உயர்நிலை தேர்வின் விலை ரூ. 1.22 கோடிகள் ஆகும். இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.


Click it and Unblock the Notifications