குறைவான விலையில் கிடைக்கும் ஏஎம்டி கார்கள்... என்ன இவ்ளோ கம்மியான விலையில கிடைக்குதா! 10 கார்களின் பட்டியல்!
இந்தியாவில் குறைவான ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் ஏஎம்டி வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களின் பட்டியலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

காஸ்ட்லியான சொகுசு கார்களில் மட்டுமே கிடைத்து வந்த அம்சங்கள் பல தற்போது பட்ஜெட் கார்களில் இடம் பெற தொடங்கியிருக்கின்றன. மக்கள் மத்தியில் புதிய தொழில்நுட்பங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதன் காரணத்தினால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ச்சியாக நவீன வசதிகளைப் புதுமுக வாகனங்களில் வழங்க ஆரம்பித்திருக்கின்றன.

அந்தவகையில், முன்னதாக ஆடம்பர ரக கார்களில் மட்டுமே கிடைத்து வந்த அம்சங்களில் ஒன்றாகத் தானியங்கி டிரான்ஸ்மிஷன் இருக்கின்றது. இந்த அம்சத்தை வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது விலைக் குறைவான கார்களிலும் வழங்கத் தொடங்கியிருக்கின்றன.

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்கள் மைலேஜ் குறைவாக வழங்கும் என்கிற தவறான எண்ணம் தற்போது மறைய தொடங்கியிருக்கின்றது. ஆகையால், மக்கள் மத்தியில் இந்த வசதிக் கொண்ட கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. எனவே அவற்றிற்கு வரவேற்பும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

ஆகையால், முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை பட்ஜெட் கார் மாடல்களில் வழங்க தொடங்கியுள்ளன. அந்தவகையில், எந்தெந்த நிறுவனங்கள் எந்த பட்ஜெட் கார் மாடலில் தானியங்கி டிரான்ஸ்மிஷனை வழங்குகின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். ஒட்டுமொத்தமாக 10 பட்ஜெட் தானியங்கி டிரான்ஸ்மிஷன் வசதிக் கொண்ட கார்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்கவுள்ளோம்.

டட்சென் ரெடி கோ (Datsun redi-Go)
குறைவான விலைக் கொண்ட கார்களுக்குப் பெயர்போனதே டட்சன் நிறுவனம். இந்நிறுவனத்தின் மலிவு விலைக் கார் மாடலாக ரெடி-கோ காட்சியளிக்கின்றது. இந்த கார் ஒட்டுமொத்தமாக 6 விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், 1.0 லிட்டர் எஞ்ஜின் கொண்ட வேரியண்டிலேயே ஏஎம்டி (Automated Manual Transmission) வசதி வழங்கப்படுகின்றது. இந்த வசதிக் கொண்ட தேர்வின் விலை ரூ. 5 லட்சமாக இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ரெனால்ட் க்விட் (Renault Kwid)
இந்தியாவின் மலிவு விலை கார்களில் ஒன்றே ரெனால்ட் க்விட். ரெனால்ட் நிறுவனத்தின் வெற்றி மாடலாக இது காட்சியளிக்கின்றது. கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் அதிக சிறப்பம்சங்களுக்காக இக்கார் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அந்தவகையில், இக்காரில் வழங்கப்படும் மிக சிறப்பான ஓர் அம்சமாக இருக்கின்றது 5 ஸ்பீடு வசதிக் கொண்ட ஏஎம்டி கியர்பாக்ஸ். ஆர்எக்ஸ்எல் தேர்விலேயே தானியங்கி கியர்பாக்ஸ் வசதி வழங்கப்படுகின்றது. இதன் விலை ரூ. 5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இதன் உயர்நிலை தேர்வாக காட்சியளிக்கும் க்ளிம்பர் ரூ. 5.80 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலே பார்த்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

மாருதி சுசுகி எஸ்-ப்ரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso)
மாருதி சுசுகி நிறுவனத்தின் மிக சிறப்பாக விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக எஸ்-ப்ரெஸ்ஸோ இருக்கின்றது. இந்த காரின் 1.0 லிட்டர் எஞ்ஜினிலேயே 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதி வழங்கப்படுகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 68 எச்பி பவரை வெளியேற்றும். எஸ்-ப்ரெஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஏடி இந்தியாவில் ரூ. 5.05 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக விஎக்ஸ்ஐ ப்ளஸ் எனும் வேரியண்டிலும் தானியங்கி கியர்பாக்ஸ் வசதி வழங்கப்படுகின்றது. இதன் விலை ரூ. 5.21 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலையே ஆகும்.

ஹூண்டாய் சேன்ட்ரோ (Hyundai Santro)
ஹூண்டாய் சேன்ட்ரோவின் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினிலேயே நிறுவனம் ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதியை வழங்குகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 69 எச்பி பவரை வெளியேற்றும். இந்த கியர்பாக்ஸ் நகர பகுதிகளின் இயக்கத்திற்கு ஏற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மிகவும் ஸ்மூத்தான இயக்கம் கொண்ட வாகனமாகவும் இது காட்சியளிக்கின்றது. மேக்னா ஏஎம்டி மற்றும் ஆஸ்தா ஏஎம்டி என இரு விதமான தேர்வுகளில் தானியங்கி கியர்பாக்ஸ் வசதி வழங்கப்படுகின்றது. ரூ. 5.80 லட்சம் மற்றும் ரூ. 6.50 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இவை விற்பனைக்குக் கிடைக்கின்றன.

மாருதி சுசுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR)
வேகன்ஆர் இந்தியாவின் பெஸ்ட்-செல்லிங் ஹேட்ச்பேக் காராகும். இந்த காரில் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகின்றது. இந்த கியர்பாக்ஸ் அதிக மைலேஜை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், சுறு சுறுப்பான இயக்க அனுபவத்தை இதில் பெற முடியாது. இக்காரின் தானியங்கி தேர்வுகள் ரூ. 6 லட்சம் தொடங்கி ரூ. 6.25 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

மாருதி சுசுகி செலிரியோ (Maruti Celerio)
இந்தியாவின் மிக அதிகம் மைலேஜ் தரும் காராக செலிரியோ இருக்கின்றது. புதிய தலைமுறை செலிரியோவிற்கு இந்தியர்கள் மத்தியில் மிக சூப்பரான டிமாண்ட் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த அப்டேட் செய்யப்பட்ட செலிரியோ நவம்பர் 2021-லேயே விற்பனைக்கு வந்தது. இக்கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 26 கிமீ வரை மைலேஜ் தரும். செலிரியோ ஏஎம்டி இந்தியாவில் ரூ. 6.15 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டட்சன் கோ (Datsun Go)
டட்சன் கோ காரில் ஏஎம்டி-யைக் காட்டிலும் மிக சிறப்பாக செயல்படும் சிவிடி வசதி வழங்கப்படுகின்றது. இந்த டிரான்ஸ்மிஷன் மிகவும் ஸ்மூத்தானதாக இருக்கும். இந்த வசதிக் கொண்ட டட்சன் கோ இந்தியாவில் ரூ. 6.30 லட்சம் தொடங்கி ரூ. 6.50 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

டாடா டியாகோ (Tata Tiago)
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிக பாதுகாப்பான கார் மாடல்களில் டியாகோவும் ஒன்று. இந்த காரின் மூன்று விதமான வேரியண்டுகளில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியை டாடா வழங்குகின்றது. அவை ரூ. 6.30 லட்சம் தொடங்கி ரூ. 7.20 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மிக சமீபத்திலேயே இக்கார் மாடலில் நிறுவனம் சிஎன்ஜி தேர்வை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி சுசுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis)
நகரத்தில் வசிக்கும் இளம் தலைமுறையினர்களின் மிகவும் விருப்பமான கார் மாடலாக மாருதி சுசுகி இக்னிஸ் இருக்கின்றது. இந்த கார் மாடலில் 5 ஸ்பீடு ஏஎம்டி தேர்வை நிறுவனம் வழங்குகின்றது. 1.2 லிட்டர் எஞ்ஜினிலேயே இந்த கியர்பாக்ஸ் வசதி வழங்கப்படுகின்றது. இந்த வசதிகள் கொண்ட இக்னிஸ் ரூ. 6.50 தொடங்கி ரூ. 7.60 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது.

ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber)
இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான கார் மாடல்களில் ட்ரைபரும் ஒன்று. ஐந்திற்கு நான்கு ஸ்டார் ரேட்டிங்கை இக்கார் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இது, ஓர் பட்ஜெட் விலைக் கொண்ட எம்பிவி காராகும். இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினை ரெனால்ட் பயன்படுத்தியிருக்கின்றது. இத்துடன், 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதியையும் அது வழங்குகின்றது. இந்த வசதிக் கொண்ட ட்ரைபர் ரூ. 7.50 லட்சம் தொடங்கி ரூ. 8.25 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.


Click it and Unblock the Notifications








