"அடாஸ்" பாதுகாப்பு அம்சங்களிலேயே மிக பெஸ்டானது.. இதனுடன் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 கார் மாடல்களின் லிஸ்ட்!
இந்தியாவில் அடாஸ் (ADAS) அம்சத்துடன் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் 5 கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ரேடார் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு இயங்கும் அம்சமே இந்த அடாஸ் (ADAS). மேம்பட்ட டிரைவர் உதவி அமைப்பு (Advanced Driver Assistance System) என்றும் இது அழைக்கப்படுகின்றது. டிரைவரின் உதவியே இல்லாமல் சில வேலைகளை தன்னிச்சையாக செய்ய இந்த தொழில்நுட்பம் உதவியாக இருக்கும்.

சிறு உதாரணத்துடன்கூற வேண்டுமானால். நம்மில் பலர் ஸ்மார்ட் போன் பயன்படுத்திக் கொண்டிருப்பீர்கள். அந்த போனின் வாயிலாக மற்றொருவருக்கு கால் செய்யும் போது டிஸ்பிளே ஆனாகி இருக்கும். அதேவேலையில், காதுக்கு அருகில் கொண்டு செல்லும்போது லைட் தானாக அணைந்து விடும். பிரத்யேக சென்சார் இதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கும்.

அது காதுக்கு அருகில் கொண்டு சென்ற உடனே டிஸ்பிளேவை ஆஃப்பாக்கிவிடும். இதனால், டிஸ்பிளே ஆஃபாவது மட்டுமின்றி தேவையில்லாமல் வேறு நம்பர்கள் அழுத்தப்படுவது, பிற செயலிகளை ஓபன் செய்தல் போன்றவை தவிர்க்கப்படும். இதுபோன்று தானாக செயல்படும் மிக முக்கியமான ஓர் தொழில்நுட்பமாகவே அடாஸ் காட்சியளிக்கின்றது.

இது எதிரில் வரும் வாகனம், முன் செல்லும் வாகனம் ஆகியவற்றை தானே கண்டறிந்து வேகத்தைக் குறைத்தல், பிரேக் பிடித்தல் போன்ற சில மிக முக்கியமான பணிகளை மேற்கொள்ளும். இதற்காக பிரத்யேக கேமிராக்கள் மற்றும் சென்சார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் வாயிலாக தன்னை சுற்றியிருக்கும் அனைத்து நிகழ்வுகளையும் கண்டறிந்து அந்த தொழில்நுட்பம் அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இத்தகைய அம்சம் கொண்ட கார்கள் சமீக காலமாக இந்தியாவில் அதிகளவில் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. அந்தவகையில், இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அடாஸ் தொழில்நுட்பம் கொண்ட கார்களில் எவை எல்லாம் சற்று குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

எம்ஜி ஆஸ்டர் (MG Astor):
எம்ஜி நிறுவனம் அதன் ஆஸ்டர் கார் மாடலில் அடாஸ் தொழில்நுட்பத்தை வழங்குகின்றது. ஆனால், இக்கார் மாடலின் உயர்நிலை தேர்வான ஷார்ப் (ஓ) (சேவி) வேரியண்டில் மட்டுமே வழங்குகின்றது. இதன் விலை ரூ. 16.50 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

அடாஸ் எம்ஜி ஆஸ்டர் காரில் எவ்வாறெல்லம் செயல்படுகின்றது?
கார் ஒவ்வொரு முறையும் லேனை விட்டு மாறி செல்லும்போது எச்சரிக்கையை வழங்கும். டிரைவரை காரை இயக்காத நிலையில் குறிப்பிட்ட லேனுக்குள் மட்டுமே காரை செலுத்த அது உதவியாக இருக்கும். முன் பக்கத்தில் ஏதேனும் வாகனம் மிக நெருக்கமாக இருக்கும் எனில் அது குறித்த எச்சரிக்கையை வழங்கும்.

அவசர காலத்தில் தன்னிச்சையாக அது பிரேக்கை பிடிக்கும். பாதசாரிகள் யாரேனும் குறுக்கே வந்தாலும்கூட அது தானாக பிரேக்கை பிடிக்கும். இதுமட்டுமின்றி ஹை பீம் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்சன், ரியர் கிராஷ் டிராஃபிக் அலர்ட் மற்றும் அடாப்டீப் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றையும் அது வழங்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV700):
மஹிந்திரா நிறுவனம் அதன் எக்ஸ்யூவி 700 காரில் அடாஸ் தொழில்நுட்பத்தை வழங்குகின்றது. நிறுவனம் இந்த அம்சத்தை வழங்கும் முதல் வாகனம் இதுவே ஆகும். ஏஎக்ஸ் 7 எனும் உயர்நிலை வேரியண்டில் மட்டுமே அடாஸ் தொழில்நுட்பத்தை மஹிந்திரா வழங்குகின்றது. இந்த வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ. 19.20 லட்சம் ஆகும்.

அடாஸ் அம்சத்தின் வாயிலாக எக்ஸ்யூவி 700 காரில் கிடைக்கும் வசதிகள் என்ன?
அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், அவசர கால பிரேக்கிங், லேன் டிபார்ச்சர் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட், ஃபார்வார்டு கொள்ளிசன் வார்னிங், ஹை பீம் அசிஸ்டம் மற்றும் டிராஃபிக் சிக்னல் ரெகாக்னிஷன் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

ஹோண்டா சிட்டி ஹைபிரிட் (Honda City Hybrid)
ஹோண்டா நிறுவனம் அதன் சிட்டி காரை சற்று அதிக தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த வாகனமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விற்பனைக்குக் கொண்டு வந்தது. ஹைபிரிட் மற்றும் அடாஸ் ஆகிய அம்சங்களை அதில் வழங்கியது. இசட்எக்ஸ் சென்சிங் இ:எச்இவி (ZX Sensing e:HEV) எனும் வேரியண்டிலேயே ஹோண்டா நிறுவனம் அடாஸ் அம்சத்தை வழங்குகின்றது.

அடாஸ் அம்சத்தின் வாயிலாக ஹோண்டா சிட்டி ஹைபிரிட்டில் கிடைக்கும் அம்சங்கள்:
லேன் கீப் அசிஸ்ட், அவசர கால பிரேக்கிங் வசதி, ரோட் டிபார்ச்சர் மிடிகேஷன் சிஸ்டம், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹைபீம் அம்சம் ஆகிய வசதிகளை ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் சென்சிங் இ:எச்இவி வேரியண்டின் பயன்பாட்டாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட் ஆகிய அம்சம் இக்காரில் வழங்கப்படவில்லை.

எம்ஜி குளோஸ்டர் (MG Gloster):
எம்ஜி நிறுவனம் அஸ்டர் கார் மாடலைத் தொடர்ந்து மற்றுமொரு கார் மாடலில் அடாஸ் தொழில்நுட்பத்தை வழங்கும் என்றால் அது குளோஸ்டர் எஸ்யூவி ரக கார்தான். இந்த காரின் உயர்நிலை தேர்விலேயே நிறுவனம் அடாஸ் அம்சத்தை வழங்குகின்றது. ரூ. 39.50 லட்சம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சேவி எனும் தேர்விலேயே அந்த அம்சம் வழங்கப்படுகின்றது.

ஆஸ்டர் காரில் இருப்பதைப் போலவே குளோஸ்டரில் இந்த அம்சம் பன்முக பயன்பாட்டுக்களை வழங்குகின்றது. அவசர காலத்தில் தான்னிச்சையாக பிரேக் பிடித்தல், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் டிபார்ச்சர் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட், ஹைபீம் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்சன் மற்றும் ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட் ஆகியவற்றை அடாஸ் வாயிலாக குளோஸ்டர் கார் பயன்பாட்டாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும்.

இதுதவிர, தானாகவே பார்க் செய்தல் போன்ற மிக முக்கியமான தானியங்கி வசதியும் குளோஸ்டர் காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதனால், குளோஸ்டர் காரின் விலை பல மடங்கு அதிகமானதாகக் காட்சியளிக்கின்றது.

ஹூண்டாய் டக்சன் (Hyundai Tucson):
ஹூண்டாய் நிறுவனம் அண்மையில் டக்சன் எனும் புதுமுக காரை இந்திய சந்தையில் வெளியீடு செய்தது. இந்த காரில் நிறுவனம் அடாஸ் அம்சத்தை வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்காரின் விலை மற்றும் முக்கிய தகவல்கள் பல வரும் ஆகஸ்டு மாதம் அறிவிக்கப்பட இருக்கின்றன.

இந்த அம்சம் டக்சன் காரில் மோதலை தவிர்க்கும் கருவியாகவும், பிளைண்ட் ஸ்பாட்டுகளில் ஏற்படும் மோதலை தவிர்த்தல், குறிப்பிட்ட லேனுக்குள் மட்டுமே செல்லுதல், பாதுகாப்பாக லேனை விட்டு வெளியேறுதல், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஹை பீம் அசிஸ்ட், லீடிங் வெயிக்கிள் டிபார்ச்சர் அலர்ட் உள்ளிட்ட பன்முக அம்சங்கள் டக்சனில் எதிர்பார்க்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








