ஆம்பிசயன்ட் லைட் வசதியுடன் விற்பனைக்கு கிடைக்கும் டாப் 5 கார் மாடல்கள்! எல்லாமே கொஞ்சம் குறைவான விலை கொண்டவை!
பிரீமியம் அம்சங்களில் ஒன்றான ஆம்பிசயன்ட் மின் விளக்கு (Ambient Lighting Feature) அம்சத்துடன் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் 5 குறைந்த விலை கார்கள் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

இந்திய வாகன சந்தை பல மடங்கு வளர்ச்சியடைந்து காணப்படுகின்றது. கடந்த காலங்களில் அதிக விலைக் கொண்ட கார்களில் மட்டுமே காணப்பட்ட சிறப்பம்சங்கள் பல தற்போது விலை குறைவான, அதாவது, பட்ஜெட் வாகனங்களிலும் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளன. பாதுகாப்பு அம்சங்கள் தொடங்கி பிரீமியம் அம்சங்கள் வரை பல விலைக் குறைவான கார் மாடல்களிலும் இடம் பெற ஆரம்பித்திருக்கின்றன.

குறிப்பாக, சன் ரூஃப், வாய்ஸ் கன்ட்ரோல் வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அதி-நவீன அம்சங்களும் குறைந்த விலை மற்றும் நடுத்தர பட்ஜெட் கார் மாடல்களில் கொடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், ஆம்பிசயன்ட் மின் விளக்கு (Ambient Lighting Feature) என்றழைக்கப்படும் சூப்பரான பிரீமியம் தர அம்சமும் சற்று விலை குறைவான கார் மாடல்களில் காட்சியளிக்கத் தொடங்கியிருக்கின்றது.

இந்த கார்களின் பட்டியலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, ஆம்பிசயன் மின் விளக்கு அம்சத்துடன் சற்று குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் 5 கார் மாடல்கள் எவை என்பது பற்றி பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ரெனால்ட் கைகர் (Renault Kiger)
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஒன்றே இந்த கைகர். இதன் உயர்நிலை வேரியண்டான ஆர்எக்ஸ்இசட்-இல் ரெனால்ட் நிறுவனம் எண்ணற்ற சிறப்பு வசதிகளை வழங்கியிருக்கின்றது. அந்தவகையில், ஆம்பிசயன்ட் மின் விளக்கையும் அதில் வழங்குகின்றது. இந்த அம்சம் கொண்ட கைகர் சற்று அதிக விலையில் விற்கப்படுகின்றது.

ரூ. 8.09 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்யப்படுகின்றது. ஆம்பிசயன்ட் மின் விளக்கு மட்டுமின்றி இன்னு பல அதி நவீன மற்றும் பிரீமியம் தர அம்சங்கள் இந்த உயர் நிலை தேர்வில் ரெனால்ட் வழங்குவது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான் இக்காருக்கு தற்போது இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun)
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்த தயாரிப்பிற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால், நிறுவனத்தின் நட்சத்திர வாகனமாக இது மாறியிருக்கின்றது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த டைகுன் கார் மாடலில் எக்கசக்க சிறப்பு வசதிகளை வாரி வழங்கி இருக்கின்றது.

அந்தவகையில் நிறுவனம் வழங்கும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக ஆம்பிசயன்ட் மின் விளக்கும் இருக்கின்றது. இதனை என்ட்ரீ லெவல் தேர்வான கம்ஃபோர்லைன் ட்ரிம்மிலேயே நிறுவனம் வழங்குவது குறிப்பிடத்தகுந்தது. இதன் விலை ரூ. 10.99 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமை ஆகும்.

ஸ்கோடா ஸ்லேவியா (Skoda Slavia)
ஸ்கோடா நிறுவனத்தின் லேட்டஸ்ட் கார் மாடல் ஸ்லேவியா ஆகும். இந்த செடான் ரக காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்தியா என்றால் எஸ்யூவி வாகனங்களுக்கான சந்தை என வாகன உலகத்தால் கூறப்படுகின்றது. ஆனால், அப்படி இல்லை இந்தியா பன்முக வாகனங்களுக்கான சந்தை என்பதை ஸ்லேவியாவிற்குக் கிடைத்து வரும் வரவேற்பு உறுதிப்படுத்தியிருக்கின்றது.

இந்த கார் மாடலில் ஆம்பிசயன்ட் மின் விளக்கு போல் இன்னும் பல சிறப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆம்பிசயன்ட் மின் விளக்குடன் கிடைக்கும் ஸ்லேவியாவின் விலை ரூ. 12.39 லட்சமாக இருக்கின்றது. பன்முக பிரீமியம் அம்சங்களை இது கொண்டிருக்கின்ற காரணத்தினால் இத்தகைய அதிக விலையைக் கொண்டதாக ஸ்லேவியா இருக்கின்றது.

ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq)
ஸ்கோடா குஷாக் ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இந்த பிரிவின் அரசனாகவும் இக்கார் காட்சியளிக்கின்றது. இதனை காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் அரசன் என குறிப்பிடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக, எண்ணற்ற பிரீமியம் அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டிருப்பதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

குஷாக் காரில் இடம் பெற்றிருக்கும் பன்முக பிரீமியம் அம்சங்களில் ஒன்றாக ஆம்பிசயன்ட் மின் விளக்கு காட்சியளிக்கின்றது. ஆம்பிசன் எனும் ட்ரிம்மிலேயே இந்த வசதி வழங்கப்படுகின்றது. இதன் விலை ரூ.12.79 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹோண்டா சிட்டி (Honda City)
ஹோண்டா சிட்டி சி-பிரிவு செடான் கார் பிரிவின் ராணியாக காட்சியளிக்கின்றது. 5ம் தலைமுறை சிட்டி காரே தற்போது விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. அதிக இட வசதி மற்றும் பன்முக சிறப்பு வசதிகள் என அனைத்திலும் சிறந்த தயாரிப்பாக ஹோண்டா சிட்டி காட்சியளிக்கின்றது.

இதன் உயர் நிலை தேர்வான இசட்எக்ஸ் ட்ரிம்மிலேயே ஆம்பிசயன்ட் மின் விளக்கு போன்ற அதிக பிரீமியம் தர அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் விலை ரூ. 13.68 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








