பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கிடைக்கும் டாப் 5 கார்கள்! 10லட்ச ரூபாக்குள்ளவே கிடைக்குது!
இந்தியாவில் பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் ஐந்து கார்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். அவைகுறித்த விரிவான தகவல்களைக் கீழே பார்க்கலாம், வாங்க.

நவீன கால கார்களில் வழங்கப்படும் மிக முக்கியமான தொழில்நுட்ப அம்சங்களில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (Touchscreen Infotainment System)-ம் ஒன்று. இந்த அம்சத்தை சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் கஞ்ச தனமின்றி பெரியளவில் வழங்கி வருகின்றன. மிக சுவாரஷ்யமான பயண அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக வாகன உற்பத்தியாளர்கள் இவ்வாறு செய்கின்றனர்.

விலை உயர்ந்த கார்களில் மட்டுமின்றி சற்று குறைவான விலைக் கொண்ட கார்களிலும் பெரிய அளவிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகின்றது. அந்தவகையில், ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களின் பட்டியலையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். டாப் ஐந்து கார்கள் பற்றிய தகவலை வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் காணலாம்.

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20)
ஹூண்டாய் ஐ20 காரில் 10.25 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இது நிறுவனத்தின் ப்ளூலிங்க் இணைப்பு வசதிக் கொண்டது. இத்துடன், 7 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டமும் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐ20 காரில் கொடுக்கப்பட்டிருக்கும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் கூடுதல் சிறப்பு வசதியாக ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார்பிலே இணைப்பு வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஐ20 கார் மாடலின் ஸ்போர்ட் வேரியண்டில் இந்த அம்சங்களை ஒயர்கள் இல்லாமலேயே இணைக்க முடியும்.

இதுமட்டுமின்றி இன்னும் பல சிறப்பு வசதிகள் கொண்ட காராகவே ஹூண்டாய் ஐ20 விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 6,98,000 தொடங்கி ரூ. 11,48,500 வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. பிரீமியம் அம்சங்கள் நிரப்பப்பட்ட வாகனமாக இது காட்சியளிக்கின்றது. எனவேதான் ஐ20 இத்தகைய அதிகபட்ச விலையில் விற்பனைச் செய்யப்படுகின்றது.

கியா சொனெட் (Kia Sonet)
கியா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக சொனெட் இருக்கின்றது. இந்த காரில் 10.25 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, ஸ்பீக்கர்கள் செட்-அப், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதி உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றது.

சொனெட்டின் எச்டிகே (HTK) மற்றும் எச்டிகே-ப்ளஸ் (HTK+) தேர்வுகளில் ஒயர்லெஸ் இணைப்பு வசதிக் கொண்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. கியா சொனெட் இந்தியாவில் ரூ. 6,95,000 தொடங்கி ரூ. 12,35,000 வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

நிஸான் மேக்னைட் (Nissan Magnite)
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை கார் மாடல்களில் நிஸான் மேக்னைட்-ம் ஒன்று. மலிவு விலையில் இது விற்கப்பட்டாலும் கவர்ச்சிக்கும், சிறப்பு வசதிகளுக்கும் குறைச்சலின்றி காட்சியளிக்கின்றது. அந்தவகையில், இக்காரில் பெரியளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகின்றது.

ஆனால், மேக்னைட் காரில் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமே வழங்கப்பட்டுள்ளது. மேலே பார்த்த இரு கார்களைக் காட்டிலும் இது அளவில் சிறியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியர்கள் மத்தியில் இக்காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. மாதம் 3 ஆயிரம் யூனிட்டுகள் வீதம் இக்கார் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.

நிஸான் மேக்னைட் காரில் கூடுதல் சிறப்பு வசதிகளாக 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஜேபிஎல் பிரீமியம் ஸ்பீக்கர்கள், ஏர் ஃப்யூரிஃபையர் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் இக்கார் ரூ. 5.76 லட்சம் என்ற தொடக்க விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ரெனால்ட் கைகர் (Renault Kiger)
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மற்றுமொரு விலைக் குறைவான கார் மாடல் இதுவாகும். இந்த காரிலும் 8 அங்குல தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்ட தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கைகர் கார் மாடலின் ஆர்எக்ஸ்இசட் வேரியண்டில் மட்டுமே வழங்கப்படுகின்றது.

ரெனால்ட் கைகர் ஓர் அதிக பாதுகாப்பு தரம்மிக்க வாகனமாகும். குளோபல் என்சிஏபி நடத்தி மோதல் ஆய்வில் பெரியவர்களுக்கு பாதுகாப்பில் ஐந்திற்கு நான்கு ஸ்டார்களையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் இரண்டு ஸ்டார்களையும் பெற்றது. ரூ. 5.79 லட்சம் என்ற தொடக்க விலையில் இருந்து இந்த கார் தற்போது இந்தியாவில் விற்கப்படுகின்றது.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz)
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக அதிக பாதுகாப்பான கார் மாடல்களில் டாடா அல்ட்ராஸும் ஒன்று. இந்த கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றிருக்கின்றது. இதேபோல் ரூ. 6 லட்சம் என்கிற குறைவான ஆரம்ப விலையில் இருந்தும் இக்கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அல்ட்ராஸில் 7 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் வழங்கப்படுகின்றது. இது ஹர்மன் நிறுவனத்தால் டிசைன் செய்யப்பட்டதே இந்த அம்சம் ஆகும். இத்துடன், ஜேபிஎல், ஐஆர்ஏ இணைப்பு மற்றும் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்படுகின்றன. இதுதவிர இன்னும் பல அம்சங்களும் இக்காரில் டாடா வழங்குகின்றது.


Click it and Unblock the Notifications








