புதிய விலைகளின்படி இந்தியாவில் தற்போதும் மலிவு விலையில் விற்பனைக்கு கிடைக்கும் 5 எஸ்யூவி கார்கள்!
இந்தியாவில் குறைவான விலையில், சூப்பரான அம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் ஐந்து எஸ்யூவி கார்கள் பட்டியலைக் கீழே உள்ள பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் அவைகுறித்த விரிவான தகவலைப் பார்க்கலாம்.

இந்தியாவில் எஸ்யூவி ரக கார் மாடல்களுக்கு ஏகபோகமான வரவேற்புக் கிடைத்து வருகின்றது. குறிப்பாக, குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் காம்பேக்ட் மற்றும் மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களுக்கு மிக மிக சூப்பரான டிமாண்ட் மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

ஆகையால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்த பிரிவை இலக்காகக் கொண்டு புதுமுகங்களைத் தொடர்ச்சியாகக் களமிறக்கி வருகின்றன. இதனால், இந்தியாவில் மிக தாரளமாக காம்பேக்ட் மற்றும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் விற்பனைக்குக் கிடைக்கும் சூழல் நாட்டில் நிலவுகின்றது.

விலை குறைவான கார்களும் இந்த பிரிவில் அதிகளவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவை என்னென்ன மாடல்கள் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, இந்திய சந்தையில் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஐந்து எஸ்யூவி கார்களின் பட்டியலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டாடா பஞ்ச் (Tata Punch)
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிக மிக குறைவான விலையில் விற்பனைக்கு வழங்கும் எஸ்யூவி ரக கார் மாடலாக பஞ்ச் இருக்கின்றது. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். அதிக பாதுகாப்பான அம்சங்கள் கொண்ட காராகவும் இது காட்சியளிக்கின்றது. இக்காரின் ஆரம்ப விலை ரூ. 5.67 லட்சம் ஆகும். அதேநேரத்தில் இக்காரின் உச்சபட்ச மாடல் ரூ. 9.18 லட்சமாக இருக்கின்றது.

டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த மோட்டார் 86 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளும் இக்காரில் வழங்கப்படுகின்றது.

நிஸான் மேக்னைட் (Nissan Magnite)
நிஸான் மேக்னைட், இதுவும் இந்தியாவின் மலிவு விலை எஸ்யூவி ரக காராகும். இது ஓர் க்ராஸோவர் எஸ்யூவி ரக வாகனம். செலவழிக்கக் கூடிய பணத்திற்கு உகந்த வாகனமாக இது காட்சியளிக்கின்றது. எண்ணற்ற பிரீமியம் அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன. இது ரூ. 5.76 லட்சம் தொடங்கி ரூ. 10.15 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

நிஸான் மேக்னைட் இரு விதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வுகளிலேயே அது கிடைக்கும். இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆகிய இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளும் இக்காரில் வழங்கப்படுகின்றன. இதில், சிவிடி தேர்வானது டர்போசார்ஜட் மோட்டார் கொண்ட தேர்வில் மட்டுமே வவங்கப்படுகின்றது.

ரெனால்ட் கைகர் (Renault Kiger)
இந்தியாவில் ரெனால்ட் கைகர் எஸ்யூவி கார் ரூ. 5.79 லட்சம் தொடங்கி ரூ. 10.22 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இதுவும், நிஸான் மேக்னைட் கார் மாடலை போல் செலவழிக்கும் பணத்திற்கு உகந்த வாகனமாகக் காட்சியளிக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, எஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்விலும் மேக்னைட் கார் மாடலை போலவே கைகர் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

கியா சொனெட் (Kia Sonet)
கியா சொனெட் ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் மாடலாகும். பன்முக எஞ்ஜின் தேர்வுகள், எக்கசக்க பிரீமியம் தர அம்சங்கள் என அனைத்திலும் சிறந்த தயாரிப்பாக இந்த எஸ்யூவி கார் காட்சியளிக்கின்றது. 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் ஆகிய மூன்று வகையிலான மோட்டார் தேர்வுகளிலேயே சொனெட் கிடைக்கின்றது. இதன் ஆரம்ப நிலை தேர்வு ரூ. 6.95 லட்சத்திற்கும், உயர் நிலை தேர்வு ரூ. 13.79 லட்சத்திற்கும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue)
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக சூப்பரான அம்சங்கள் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஹூண்டாய் வென்யூ-வும் ஒன்று. இந்த கார் மாடலும் கியா சொனெட்டை போலவே பன்முக எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ டீசல் ஆகிய மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளிலேயே வென்யூவும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஹூண்டாய் வென்யூவி காரின் ஆரம்ப விலை ரூ. 6.99 லட்சம் ஆகும். இக்கார் ரூ. 11.71 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலே பார்த்த அனைத்து விலைகளும் விலை உயர்விற்கு பின்னர் அப்டேட் செய்யப்பட்ட விலைகள் ஆகும். அதேநேரத்தில் அவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. பிற மாநிலங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் இந்த விலை மாறுபட்டு காணப்படலாம் என்பதைக் கவனத்தில் கொள்க.


Click it and Unblock the Notifications








