மாருதி சுஸுகியின் எந்த சிஎன்ஜி கார் மிக அதிக மைலேஜை தரும்?.. இதோ உங்கள் கேள்விக்கான பதில்!
மாருதி சுஸுகியின் எந்த சிஎன்ஜி கார் அதிகம் மைலேஜ் தரும் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பெட்ரோல் கார்கள் விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்திருப்பதைப் போலவே சிஎன்ஜி கார்கள் விற்பனையிலும் மாருதி சுஸுகி நிறுவனமே முன்னணி வகிக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போதைய நிலவரப்படி தங்கள் வசம் 1.2 லட்சம் யூனிட்டுகள் சிஎன்ஜி வாகனங்களுக்கான ஆர்டர் பேக்லாக்காக இருப்பதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக நிறுவனத்திடம் 4 லட்சம் ஆர்டர்கள் நிலுவையில் உள்ளன. இதில், 33 சதவீதம் சிஎன்ஜி வாகனங்களுக்கானவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் சிஎன்ஜி வாகன விற்பனையில் மாருதி சுஸுகி மட்டுமே ஈடுபட்டு வரவில்லை என்பதை நாம் இங்கு கவனத்தில்கொள்ள வேண்டும். இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களும் சிஎன்ஜி வாகனங்களின் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், மாருதி சுஸுகியின் சிஎன்ஜி வாகனங்களுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சூப்பரான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதற்கு அந்நிறுவனத்தின் சிஎன்ஜி வாகனங்கள் விலை குறைவானதாகவும், பயன்பாடு மற்றும் பிற சிறப்பு வசதிகளில் கவரக் கூடியதாகவும் மாருதியின் சிஎன்ஜி வாகனங்கள் இருக்கின்றன. இதனால்தான் இந்தியர்கள் மத்தியில் மாருதியின் சிஎன்ஜி வாகனங்களுக்கு பேராதரவு வழங்கிக் கொண்டிருக்கின்றனர். பலர் மாருதி சிஎன்ஜி கார்களை வாங்க திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு மாருதி கார்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையிலேயே அந்நிறுவனம் தற்போது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் அதிக மைலேஜ் தரக் கூடிய சிஎன்ஜி கார்களின் பட்டியலை இந்த பதிவில் வழங்கியிருக்கும். டாப் 5 அதிக மைலேஜ் தரக் கூடிய மாருதி சுஸுகி சிஎன்ஜி கார்களின் லிஸ்டையே வழங்கியுள்ளோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio)
மாருதி சுஸுகி செலிரியோ இதுவே இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரக் கூடிய சிஎன்ஜி காராகும். இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 35.06 கிமீ வரை மைலேஜ் தரும். மாருதி நிறுவனம் செலிரியோவின் சிஎன்ஜி தேர்வில் 1.0 லிட்டர் கே10சி பெட்ரோல் மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டாரே வேகன்ஆர் கார் மாடலிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது 57 எச்பி பவரையும், 82 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. மாருதி நிறுவனம் செலிரியோவின் விஎக்ஸ்ஐ எனும் வேரியண்டில் மட்டுமே சிஎன்ஜி ஆப்ஷனை வழங்குகின்றது. இதன் விலை ரூ. 6.69 லட்சம் ஆகும்.

இது ஓர் நடுநிலை வேரியண்ட் ஆகும். ஆகையால், ஆரம்ப நிலை வேரியண்டைக் காட்டைக் காட்டிலும் சற்று அதிக விலையை அதுக் கொண்டிருக்கின்றது. அதாவது, சற்று அதிக வசதிகளைக் கொண்டதாக விஎக்ஸ்ஐ வேரியண்ட் காட்சியளிக்கின்றது. அதேபோல், மாருதி சுஸுகி செலிரியோ பெட்ரோல் வெர்ஷனே இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் காராக உள்ளது. இந்த லிட்டருக்கு 26 கிமீ வரை மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki Wagon R)
செலிரியோவிற்கு அடுத்தபடியாக அதிக மைலேஜ் தரும் மாருதி சுஸுகி சிஎன்ஜி காராக வேகன்ஆர் இருக்கின்றது. இத்தனைக்கும் இவையிரண்டிலும் அதே 1.0 லிட்டர் கே10சி மோட்டார் பயன்படுத்தியிருக்கின்ற வேலையிலும் இது செலிரியோவைக் காட்டிலும் சற்று குறைவான மைலேஜை வழங்குகின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் 34.5 கிமீ மைலேஜையே ஒரு கிலோ சிஎன்ஜிக்கு அது வழங்கும்.

மாருதி நிறுவனம் வேகன்ஆர் காரின் எல்எக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ ஆகிய ட்ரிம்களிலும் சிஎன்ஜி தேர்வை வழங்குகின்றது. இவற்றின் விலை ரூ. 6.42 லட்சம் - ரூ. 6.86 லட்சம் ஆகும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த காரில் ஐடில் ஸ்டார்ட் -ஸ்டாப் வசதியை மாருதி வழங்குவது குறிப்பிடத்தகுந்தது. வேகன்ஆர் காரே இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி சுஸுகி ஆல்டோ 800 (Maruti Suzuki Alto 800)
மாருதி சுஸுகியின் மூன்றாவது அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜி வசதிக் கொண்ட காராக ஆல்டோ 800 இருக்கின்றது. ஆமாங்க, மாருதி சுஸுகி ஆல்டோ 800 காரிலும் சிஎன்ஜி தேர்வை வழங்கிக் கொண்டிருக்கின்றது. மிக சமீபத்திலேயே நிறுவனம் மூன்றாம் தலைமுறை ஆல்டோ கே10 காரை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், இப்போதும் இரண்டாம் தலைமுறை மாடல் 0.8 லிட்டர் மோட்டாருடன் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இதிலேயே மாருதி சுஸுகி நிறுவனம் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரு தேர்வுகளும் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இது ஓர் மோட்டார் 796 சிசி திறன் கொண்ட 3 சிலிண்டர் மோட்டார் ஆகும். இந்த மோட்டார் 40 எச்பி மற்றும் 60 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 31.59 கிமீ வரை மைலேஜ் தரும். மாருதி சுஸுகி நிறுவனம் ஆல்டோ800 காரின் எல்எக்ஸ்ஐ (ஓ) ட்ரிம்மில் மட்டுமே சிஎன்ஜி தேர்வை வழங்குகின்றது. இதன் விலை ரூ. 5.03 லட்சம் ஆகும்.

மாருதி சுஸுகி டிசையர் சிஎன்ஜி (Maruti Suzuki Dzire CNG)
அராய் வெளியிட்டிருக்கும் தகவலின்படி இக்கார் ஒரு கிலோவிற்கு 31.12 கிமீ வரை மைலேஜ் தரும். இந்த காரில் மாருதி சுஸுகி நிறுவனம் 1.2 லிட்டர் கே12சி மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது. இதுவே அதிக மைலேஜிற்கு உதவியாக இருக்கின்றது. மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரை இந்தியாவில் ஹூண்டாயின் அவுரா சிஎன்ஜிக்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

இந்த அவுரா சிஎன்ஜி கார் ஒரு கிலோவிற்கு 28.5 கிமீ மட்டுமே மைலேஜ் தரும். டிசையர் கார் மாடலின் விஎக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ ஆகிய ட்ரிம்களில் சிஎன்ஜி தேர்வை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் விலை ரூ. 8.23 - 8.91 லட்சம் ஆகும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி (Maruti Suzuki Swift CNG)
மாருதி சுஸுகி நிறுவனம் அண்மையிலேயே சிஎன்ஜி ஸ்விஃப்ட் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அறிமுகமாக இக்காருக்கு ரூ. 7.77 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது விஎக்ஸ்ஐ ட்ரிம்மில் கிடைக்கும் சிஎன்ஜி தேர்வின் விலையாகும். ஸ்விஃப்ட் காரின் இசட்எக்ஸ்ஐ ட்ரிம்மிலும் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. இந்த தேர்வின் விலை ரூ. 8.45 லட்சம் ஆகும்.

இந்த இரு தேர்வுகளிலும் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் எஞ்ஜினையே மாருதி சுஸுகி பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 30.90 கிமீ மைலேஜை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஸ்விஃப்ட் சிஎன்ஜி ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் காருக்கும், டாடா டியாகோ சிஎன்ஜிக்கும் போட்டியாக விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை இரண்டைக் காட்டிலும் அதிக பவர்ஃபுல் மற்றும் அதிக மைலேஜ் தரக் கூடியதாக ஸ்விஃப்ட் சிஎன்ஜி காட்சியளிக்கின்றது.


Click it and Unblock the Notifications








