இந்த டாப்5 மேட்டர பத்தி தெரிஞ்சுக்கிட்டீங்க... மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க!

மஹிந்திரா அண்மையில் வெளியீடு செய்த எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் பற்றிய டாப் 5 முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்த டாப்5 மேட்டர பத்தி தெரிஞ்சுக்கிட்டீங்க... மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க!

உலக மின் வாகன தினத்தை முன்னிட்டு வாகன உற்பத்தியாளர்கள் சிலர் தங்களின் எதிர்கால மின்வாகன தயாரிப்புகளை வெளியீடு செய்துக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (Mahindra and Mahindra), அதன் எக்ஸ்யூவி 400 (XUV400) எலெக்ட்ரிக் காரை அண்மையில் வெளியீடு செய்தது.

இந்த டாப்5 மேட்டர பத்தி தெரிஞ்சுக்கிட்டீங்க... மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க!

இது ஓர் எஸ்யூவி ரக மின்சார காராகும். டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் இவி (Tata Nexon EV) மற்றும் எம்ஜி இசட்எஸ் இவி (MG ZS EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக இப்புதுமுக எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது மஹிந்திரா நிறுவனம். இந்த மின்சார வாகனம் கார் பற்றிய ஐந்து முக்கியமான தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்த டாப்5 மேட்டர பத்தி தெரிஞ்சுக்கிட்டீங்க... மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க!

இந்தியாவில் தயாரிக்கப்படும் அதிக வேகமான எலெக்ட்ரிக் கார்:

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் முதல் அதிக வேக காராக எக்ஸ்யூவி400 காரை மஹிந்திரா நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. இந்த வாகனம் வெறும் 8.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் வேறு எந்தவொரு எலெக்ட்ரிக் காரும் இத்தகைய குறுகிய இடைவெளியில் மணிக்கு 100கிமீ எனும் வேகத்தை எட்டாது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 150 கிமீட்டராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதன் போட்டியாளனான நெக்ஸான் இவி-யைக் காட்டிலும் சற்று அதிக வேகம் ஆகும்.

இந்த டாப்5 மேட்டர பத்தி தெரிஞ்சுக்கிட்டீங்க... மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க!

இந்த செக்மெண்டின் அதிகம் ரேஞ்ஜ் தரும் கார்:

மஹிந்திரா நிறுவனம் அதன் எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரை அதிக வேகத்தில் செல்லும் காராக மட்டுமே தயாரிக்கவில்லை. ஒற்றை சார்ஜில் மிக அதிக ரேஞ்ஜை தரும் காராகவும் தயாரித்திருக்கின்றது. தற்போது நிறுவனம் தெரிவித்திருப்பதன்படி, 456 கிமீ ரேஞ்ஜை தரும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 39.4 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த டாப்5 மேட்டர பத்தி தெரிஞ்சுக்கிட்டீங்க... மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க!

இந்த பேட்டரி பேக் ரியல் லைஃபில் 380க்கும் அதிகமான கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இந்த எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாளரான நெக்ஸான் இவி-யில் 40.5 kWh பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 430க்கும் அதிகமான கிமீ தூரம் பயணிக்க முடியும். நெக்ஸான் இவி மேக்ஸ் மாடலிலேயே இந்த சூப்பரான பவர்கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த டாப்5 மேட்டர பத்தி தெரிஞ்சுக்கிட்டீங்க... மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க!

மின் மோட்டார்:

எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரில் மணிக்கு 150 கிமீ செல்லுவதற்கு ஏதுவாக சிங்கிள் மின் மோட்டார் முன் பக்க வீலை இயங்கச் செய்யும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 149 பிஎஸ் பவரையும், 310 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

இந்த டாப்5 மேட்டர பத்தி தெரிஞ்சுக்கிட்டீங்க... மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க!

பாதுகாப்பு வசதிகள் ஏராளம்:

மஹிந்திரா நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் அதிக பாதுகாப்பானவை என்ற புகழைச் சூடியிருக்கின்றன. அந்தவகையில், தற்போதைய புதுமுக தயாரிப்பான எக்ஸ்யூவி400-ம் மிக சூப்பரான மற்றும் அதிக உறுதியான கார் என்ற மகுடத்தைச் சூடும் என நம்பப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இக்காரில் பன்முக பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த டாப்5 மேட்டர பத்தி தெரிஞ்சுக்கிட்டீங்க... மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க!

அதேவேலையில், ஐந்து ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற எக்ஸ்யூவி 300 காரை தழுவியே மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரை உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், இந்த வாகனமும் பாதுகாப்பு ரேட்டிங்கில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைக் குவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த டாப்5 மேட்டர பத்தி தெரிஞ்சுக்கிட்டீங்க... மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க!

சார்ஜிங் தேர்வுகள்:

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரை பன்முக வழிகளில் சார்ஜ் செய்துகொள்ள முடியும். 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் முதற்கொண்டு வீட்டில் உள்ள சார்ஜிங் பாயிண்டான 3.3 kW AC சாக்கெட் வரை என அனைத்திலும் இக்காரை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இந்த பாயிண்டுகள் மாறுபாட்டைக் கொண்டு சார்ஜாகும் நேரம் வேறுபடும்.

இந்த டாப்5 மேட்டர பத்தி தெரிஞ்சுக்கிட்டீங்க... மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க!

அதாவது, 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும் போது எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் 0-80 சதவீத சார்ஜை வெறும் 50 நிமிடங்களில் எட்டிவிடும். அதேவேலையில், 3.3 kW AC வீட்டு சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது முழு சார்ஜை எட்ட அக்கார் 13 மணி நேரங்களை எடுத்துக் கொள்ளும். இது மிக அதிக நேரம் என கருதினால் வாடிக்கையாளர்கள் 7.2 kW/32A சார்ஜிங் கருவியை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த டாப்5 மேட்டர பத்தி தெரிஞ்சுக்கிட்டீங்க... மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்தான் வேணும்னு அடம்பிடிப்பீங்க!

இதன் வாயிலாக எக்ஸ்யூவி400 காரை வெறும் 30 நிமிடங்களிலேயே முழுமையாக சார்ஜ் செய்துகொள்ள முடியும். இந்த சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் காரணத்தினாலேயே ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காருக்கு எக்ஸ்யூவி400-இன் வருகை மிகப் பெரிய போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, September 12, 2022, 15:50 [IST]
English summary
Here is list of top five things about mahindra xuv 400 electric suv
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+