நம்ப முடியாத வேகத்தில் சார்ஜாகும் எலெக்ட்ரிக் கார்கள்! லிஸ்ட்ல இருக்க 5 இ-கார்களுக்குமே ஃபேன்ஸ் மிக அதிகம்!
நம்ப முடியாத வேகத்தில் சார்ஜாகும் எலெக்ட்ரிக் கார்களின் லிஸ்ட்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் செம்ம ஃபேமஸாகிக் கொண்டிருக்கின்றன. மிக தெளிவாகக் கூற வேண்டும் என்றால் இந்தியாவைக் காட்டிலும் பிற உலக நாடுகளே மின் வாகனங்களை அதிக வேகத்தில் தத்தெடுத்துக் கொண்டிருக்கின்றன. இதனால்தான், நம் நாட்டைக் காட்டிலும் மற்ற நாடுகளில் அதிகளவில் புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களின் போர்க்காலங்களில் படையெடுக்கும் வீரர்களைப் போல் திரள்திரளமாக அணிவகுப்பு எடுத்து அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.

அதேவேலையில் இந்தியாவிலும் புதுமுக மின்சார வாகனங்களின் அறிமுகம் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. மக்களை ஈர்க்கும் பொருட்டு அதிக தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் வாகனங்களை வாகன உற்பத்தியாளர்கள் அறிமுகப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மின்சார கார் உற்பத்தியாளர்கள் ஒரு படி மேலே சென்று அதிக வேகத்தில் சார்ஜ் செய்யும் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் வாகனங்களில் எரிபொருளை நிரப்புவதைப் போல் அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல மின்சார வாகனங்களை முழுமையாக சார்ஜ் செய்வது. ஓர் எலெக்ட்ரிக் காரை முழுமையாக சார்ஜ் செய்ய வேண்டும் எனில் பல மணி நேரங்கள் நாம் செலவிட வேண்டியிருக்கும். எலெக்ட்ரிக் கார் மாடல்களை பொருத்து சார்ஜேற்றும் நேரமும் 4,5,6 மணி நேரங்கள் என காலம் அதிகரித்துக் காட்சியளிக்கின்றது.

அதேநேரத்தில், குறைவான நேரத்தில் சார்ஜாகும் எலெக்ட்ரிக் கார்களும் விற்பனைக்குக் கிடைத்த உள்ளன. அதாவது, குறைவான நேரத்தில் அதிக வேகமாக சார்ஜாகும் மின்சார கார்களும் உலகில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஐந்து மின்சார கார் மாடல்களையே இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். இவை அனைத்தும் குறைவான சார்ஜ் நேரத்தில், அதிக தூரம் பயணிக்கும் மின்சார கார்கள் ஆகும். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

போர்ஷே டேகேன் பிளஸ் (Porsche Taycan Plus)
போர்ஷே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் இதுவாம். இது ஓர் வழக்கமான எலெக்ட்ரிக் கார் அல்ல. ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டுகள் நிறைந்த மின்சார காராகும். இந்த எலெக்ட்ரிக் காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஆயிரத்திற்கும் அதிகமான கிமீ வரை பயணிக்க முடியும். இக்காரில் அதிக வேகத்தில் சார்ஜாகும் தொழில்நுட்பத்தை போர்ஷே நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தில் சார்ஜ் செய்யும்பட்சத்தில் வெறும் ஒரு மணி நேரத்தில் 1,046 கிமீ தூரம் வரை இக்காரில் பயணிக்க முடியும். அதேநேரத்தில், ஏசி சார்ஜரில் ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் வெறும் 53 கிமீ தூரம் வரை மட்டுமே பயணிக்க முடியும். இந்த கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. இந்தியாவில் டேகேன், டேகேன் 4எஸ், டேகேன் 4எஸ் கிராஸ் டூரிஸ்மோ, டேகேன் ஜிடிஎஸ், டேகேன் டர்போ கிராஸ் டூரிஸ்மோ, டேகேன் டர்போ எஸ் ஆகிய கார் மாடல்களை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

கியா இவி 6 லாங் ரேஞ்ஜ் 2 வீல் டிரைவ் (Kia EV6 LongRange 2WD)
போர்ஷே டேகேன் பிளஸ் எலெக்ட்ரிக் காரை அடுத்து அதிக வேகத்தில் சார்ஜாகும் காராக கியா இவி 6 இருக்கின்றது. இந்த காரின் 2வீல் டிரைவ் வசதிக் கொண்ட வெர்ஷனை ஒரு மணி நேரம் டிசி சார்ஜிங்கில் வைத்து சார்ஜ் செய்யும் பட்சத்தில் 1,046 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இத்தகைய அதிக வேகத்தில் சார்ஜாகும் வசதியே கியா இவி6 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

கியா நிறுவனம் இவி6 எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங்கை மிக சமீபத்திலேயே இந்தியாவில் தொடங்கியது. ஆனால், முழு சார்ஜில் 528 கிமீ ரேஞ்ஜ் திறனிலேயே இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இக்காரை இந்தியாவின் முதல் நடிகராக கேத்தரின் தெரசா வாங்கியிருக்கின்றார். கார்த்திக் நடிப்பில் வெளியாகிய மெட்ராஸ் படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மெர்சிடிஸ் இக்யூஎஸ் 580 4மேட்டிக் (Mercedes EQS 580 4MATIC)
மெர்சிடிஸ் நிறுவனத்தின் இக்யூஎஸ் 580 4மேட்டிக் எலெக்ட்ரிக் காரே உலகின் அதி வேகத்தில் சார்ஜாகும் கார்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த கார் வெறும் ஒரு மணி நேர டிசி ஃபாஸ்ட் சார்ஜில் 788 கிமீ ரேஞ்ஜையும், வழக்கமான ஏசி சார்ஜரில் 53 கிமீ ரேஞ்ஜை வழங்கும் திறன் கொண்டது. இது ஓர் லக்சூரி அம்சங்கள் நிறைந்த செடான் ரக காராகும்.

மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் இப்போதைக்கு இக்யூசி எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் விலை ரூ. 99.50 லட்சம் ஆகும். இது முழுமையான சார்ஜில் 383 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இக்காரைத் தொடர்ந்து விரைவில் இக்யூஎஸ் எலெக்ட்ரிக் காரையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது பென்ஸ் நிறுவனம். இதன் அறிமுகம் வெகு விரைவில் அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓர் முழு சார்ஜில் 770 கிமீ ரேஞ்ஜ் எனும் திறனில் இந்திய சந்தையில் அது களமிறங்க இருக்கின்றது.

டெஸ்லா மாடல் ஒ லாங் ரேஞ்ஜ் டூயல் மோட்டர் (Tesla Model 3 Long Range Dual Motor)
டெஸ்லா மாடல் ஒய் நிறுவனத்தின் இரண்டாம் அதிகம் விற்பனையாகும் காராகும். குறிப்பாக அமெரிக்க சந்தையில் இக்காருக்கு மிக மிக சூப்பரான டிமாணட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இக்காரை ஒரு மணி நேரம் டிசி சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் 595 கிமீ தூரமும், ஏசி சார்ஜிங் பாயிண்டில் வைத்து ஒரு மணி நேரம் சார்ஜ் செய்யும்போது 54 கிமீ தூரமும் பயணிக்க முடியும்.

ஹூண்டாய் ஐயோனிக் 5 லாங் ரேஞ்ஜ் 2வீல் டிரைவ் (Hyundai IONIQ 5 Long Range 2WD)
நம்முடைய இந்த அதி-வேகமாக சார்ஜாகும் கார்களின் பட்டியலில் கடைசியாக பார்க்க இருக்கும் காரே இந்த ஹூண்டாய் ஐயோனிக் 5 லாங் ரேஞ்ஜ் 2வீல் டிரைவ். இதனை ஒரு மணி நேரம் டிசி சார்ஜிங் மையத்தில் வைத்து சார்ஜ் செய்தால் 933 கிமீ தூரம் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேலையில் ஏசி சார்ஜிங் மையத்தில் ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் வெறும் 59 கிமீ தூரம் வரை மட்டுமே பயணிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








