ஃபாஸ்ட் & ஃபன்னுக்கு கொஞ்சமும் குறைச்சல் இருக்காது! இந்த 5 கார்கள் இவ்ளோ சூப்பரானதா! மைலேஜ் திறனும் செம்ம!
மைலேஜ், வேடிக்கை மற்றும் சிறந்த திறன் ஆகியவற்றைக் கொண்ட டாப் ஐந்து கார்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். அவை பற்றிய முக்கிய தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் ஐந்து அதிக வேகத்தில் செல்லக் கூடிய மற்றும் மிக சிறந்த பயண அனுபவத்தை வழங்கக் கூடிய கார்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். இந்த கார்கள் அதிக வேகம் மற்றும் சிறந்த பயண அனுபவத்தை வழங்கக் கூடியவை மட்டுமல்ல, அவை, சிறந்த மைலேஜ் தரக் கூடியவையும் கூட. வாருங்கள் அவை எந்த நிறுவனத்தின் என்ன கார் மாடல்கள் என்பது பற்றிய தகவலை விரிவாகப் பார்க்கலாம்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 NIOS)
ஹூண்டாய் நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக கிராண்ட் ஐ10 நியோஸ் இருக்கின்றது. இந்த கார் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்தகைய பன்முக எஞ்ஜின் தேர்விலேயே கிராண்ட் ஐ10 நியோஸ் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதில், கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலின் உயர்நிலை வேரியண்ட் வெறும் 9.82 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. அதேநேரத்தில் இந்த கார் மாடல் ஒரு லிட்டருக்கு 20.3 கிமீ தொடங்கி 26.2 கிமீ வரை மைலேஜை வழங்கக் கூடியதாகவும் இருக்கின்றது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் இந்தியாவில் ரூ. 5,29,990 தொடங்கி ரூ. 8,37,350 வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், இக்கார் மாடலில் ஹூண்டாய் நிறுவனம் சிஎன்ஜி தேர்வை வழங்குகின்றது. அது ரூ. 7,07,010 தொடங்கி ரூ. 760,750 வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20)
அதிக ஃபன்னான அனுபவத்தை வழங்கும் கார்களின் பட்டியலில் அடுத்ததாக நாம் பார்க்க இருப்பது ஹூண்டாய் நிறுவனத்தின் மற்றுமொரு புகழ்பெற்ற தயாரிப்பாக இருக்கும் ஐ20 மாடலை ஆகும். இந்த காரும் பன்முக எஞ்ஜின் தேர்வில் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பயர்டு பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஆகிய மோட்டார் தேர்வுகளில் ஐ20 விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்த மாடல் வெறும் 11 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. இந்த திறன் அதிக உற்சாகமான பயண அனுபவத்தை வழங்கும் என்பதனை யாராலும் மறுக்க முடியாது. இந்த காரின் மைலேஜ் திறன் 20.28 கிமீ தொடங்கி 25 கிமீட்டராக இருக்கின்றது.

ரூ. 6,98,000 தொடங்கி ரூ. 11,48,500 வரையிலான விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இந்த கார் மாடலில் ஐ20 என் லைன் எனும் பிரத்யேக தேர்வையும் ஹூண்டாய் விற்பனைக்கு வழங்குகின்றது. இது வழக்கமான வேரியண்டுகளைக் காட்டிலும் அதிக செயல் திறன்மிக்கதாக காட்சியளிக்கின்றன. இந்த தேர்வின் ஆரம்ப விலையே ரூ. 9,90,900 ஆக இருக்கின்றது.

ஹோண்டா சிட்டி (Honda City)
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற சி-பிரிவு செடான் காராக பல ஆண்டுகளாக ஹோண்டி சிட்டி இருந்து வருகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான மோட்டார் தேர்வுகளிலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 15 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஹோண்டா சிட்டி பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை வெறும் 10.20 செகண்டுகளில் தொட்டு விடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் திறனை மட்டுமின்றி உச்சபட்சமாக லிட்டருக்கு 24.1 கிமீ வரை ஹோண்டா சிட்டி மைலேஜ் வழங்குகின்றது.

கியா செல்டோஸ் (Kia Seltos)
தென் கொரியாவைச் சேர்ந்த கியா நிறுவனம் நாட்டில் அதன் கால் தடத்தை பதித்து விற்பனைக்குக் கொண்டு வந்த முதல் கார் மாடல் இதுவே ஆகும். ஹூண்டாய் க்ரெட்டாவை போல் பன்முக எஞ்ஜின் தேர்வில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அது, 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் தேர்வுகளிலேயே செல்டோஸ் விற்கப்படுகின்றது.

இதன் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் வெறும் 9.97 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, அதிகபட்சமாக 16.5 கிமீ வரை மைலேஜ் தரும் திறனையும் கியா செல்டோஸ் கொண்டுள்ளது.

ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar)
ஃபன் லோட் செய்யப்பட்ட வாகனமாக ஹூண்டாய் அல்கஸார் காட்சியளிக்கின்றது. ஆனால், இதன் விலை சற்று அதிகமானதாக காட்சியளிக்கின்றது. இதன் ஆரம்ப விலையே ரூ. 16,34,300 ஆக காட்சியளிக்கின்றது. ஆறு மற்றும் ஏழு என இரு விதமான இருக்கைகள் தேர்வில் இக்கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதுமட்டுமின்றி 1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல் மற்றும் 2.0 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வுகளிலும் அல்கஸார் எஸ்யூவி விற்பனைக்குக் கிடைக்கிறது. அதேநேரத்தில், இந்த கார் வெறும் 9.5 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறனையும் இக்கார் கொண்டுள்ளது. அல்காஸார் எஸ்யூவியின் உச்சபட்ச மைலேஜ் திறன் லிட்டருக்கு 14.5 கிமீ ஆக இருக்கின்றது.

மேலே பார்த்த இந்த ஐந்து கார்களே அதிக ஃபன், அதிக ஸ்பீடு மற்றும் அதிகம் மைலேஜை வழங்கும் கார்களாக காட்சியளிக்கின்றன. இவற்றைப் போலவே இன்னும் சில கார்கள் இயக்கத்தின்போது அதிக சுவாரஷ்யமான அனுபவத்தை வழங்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றன. அவைகுறித்த தகவல்களை வரும் காலங்களில் நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








