டாடா சிஎன்ஜி கார்களிலேயே விலை குறைவானது... டியாகோ பற்றி அறிய வேண்டிய 5 முக்கிய விபரங்கள்!

டாடா (Tata) விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதிலேயே மிகக் குறைவான விலைக் கொண்ட சிஎன்ஜி காராக காட்சியளிக்கும் டியாகோ (Tiago CNG) ஹேட்ச்பேக் காரை பற்றி அறிய வேண்டிய ஐந்து முக்கிய தகவல்களை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

டாடா சிஎன்ஜி கார்களிலேயே விலை குறைவானது... டியாகோ பற்றி அறிய வேண்டிய 5 முக்கிய விபரங்கள்!

மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors), டியாகோ சிஎன்ஜி (Tiago CNG) காரை இந்தியாவில் மிக சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. நாட்டில் சிஎன்ஜி கார்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் இக்காரை விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது, டாடா. இத்துடன், டிகோர் சிஎன்ஜியையும் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கியது குறிப்பிடத்தகுந்தது.

டாடா சிஎன்ஜி கார்களிலேயே விலை குறைவானது... டியாகோ பற்றி அறிய வேண்டிய 5 முக்கிய விபரங்கள்!

இதில், டாடாவின் மிகக் குறைவான விலைக் கொண்ட சிஎன்ஜி காராக டியாகோ ஹேட்ச்பேக் காட்சியளிக்கின்றது. இந்த கார் பற்றி அறிய வேண்டிய ஐந்து முக்கிய தகவல்களையே இந்த செய்தியில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த முக்கிய தகவல்களைக் கீழே பார்க்கலாம்.

டாடா சிஎன்ஜி கார்களிலேயே விலை குறைவானது... டியாகோ பற்றி அறிய வேண்டிய 5 முக்கிய விபரங்கள்!

டிசைன்:

சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் இரு வெர்ஷன் டியாகோ கார்களும் உருவ தோற்றத்தில் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன. அதே நேரத்தில் ஒரு சில மாற்றங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதுவும், அணிகலன்கள் வாயிலாகவே அந்த மாற்றங்களை டாடா வழங்கியிருக்கின்றது. சிஎன்ஜி வாகனம் என்பதை குறிக்க வேண்டும் என்பதற்காக ஐ-சிஎன்ஜி என்ற பேட்ஜ்கள் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

டாடா சிஎன்ஜி கார்களிலேயே விலை குறைவானது... டியாகோ பற்றி அறிய வேண்டிய 5 முக்கிய விபரங்கள்!

இதைத்தொடர்ந்து, மிட்நைட் ப்ளம் எனும் புதிய நிற சேர்ப்பு எக்ஸ்இசட்-ப்ளஸ் ட்ரிம்மிற்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், எல்இடி டிஆர்எல்கள், புரஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் புதிய குரோம்பூச்சு அணிகலன்கள் காரின் முன் மற்றும் பின் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், புதிய சுவிட்ச் ஒன்று சிஎன்ஜி காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. சிஎன்ஜி அல்லது பெட்ரோல் தேர்வை மாற்றிக் கொள்ள இது உதவும். ஆமாங்க, தேவைப்பட்டால் இந்த காரை பெட்ரோலாலும் ஓட்டிக் கொள்ள முடியும்.

டாடா சிஎன்ஜி கார்களிலேயே விலை குறைவானது... டியாகோ பற்றி அறிய வேண்டிய 5 முக்கிய விபரங்கள்!

அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு

சிஎன்ஜி வேரியண்ட் டாடா டியோகோ காரில் புரெஜக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், பின் பக்கத்தில் வைப்பர் டிஃபாக்கர் வசதி உடன் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், 7 இன்ச் அளவுள்ள ஹர்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 8 ஸ்பீக்கர்களுடனும், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியும் இக்காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

டாடா சிஎன்ஜி கார்களிலேயே விலை குறைவானது... டியாகோ பற்றி அறிய வேண்டிய 5 முக்கிய விபரங்கள்!

டாடா டியாகோ ஓர் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட காராகும். இது நான்கு நட்சத்திர ரேட்டிங் பெற்ற வாகனம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதே திறனையே சிஎன்ஜி தேர்வும் பெற்றிருக்கின்றது. இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ட்யூவல் ஏர் பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், கார்னரிங் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஸ்பீடு சென்சிடீவ் ஆட்டோ டூர் லாக் உள்ளிட்டவை பாதுகாப்பு அம்சங்களாக இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

டாடா சிஎன்ஜி கார்களிலேயே விலை குறைவானது... டியாகோ பற்றி அறிய வேண்டிய 5 முக்கிய விபரங்கள்!

எஞ்ஜின்

டாடா டியாகோ காரில் 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பயரேடட் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பெட்ரோல் மோட்டாராகும். இதனையே டாடா நிறுவனத்தின் பொறியாளர்கள் சிஎன்ஜியிலும் இயங்கும் வகையில் மாற்றத்தைச் செய்திருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 73 பிஎச்பி மற்றும் 95 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இது, பெட்ரோல் எஞ்ஜின் வெளிப்படுத்தும் திறனைக் காட்டிலும் மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா சிஎன்ஜி கார்களிலேயே விலை குறைவானது... டியாகோ பற்றி அறிய வேண்டிய 5 முக்கிய விபரங்கள்!

பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 84.82 பிஎச்பியையும், 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. சிஎன்ஜி டியாகேவில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டிருக்கின்றது. இதே டிரான்ஸ்மிஷனே வழக்கமான டியாகோவிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, சிஎன்ஜி சிலிண்டர் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பதால் டாடா மோட்டார்ஸ் இக்காரின் சஸ்பென்ஷனில் லேசான மாற்றத்தை செய்திருக்கின்றது.

டாடா சிஎன்ஜி கார்களிலேயே விலை குறைவானது... டியாகோ பற்றி அறிய வேண்டிய 5 முக்கிய விபரங்கள்!

போட்டி

டாடா டியாகோ சிஎன்ஜி கார் இந்தியாவில் ஏற்கனவே விற்பனைக்குக் கிடைக்கும் மாருதி சுசுகி செலிரியோ சிஎன்ஜி, வேகன்ஆர் மற்றும் ஹூண்டாய் சேன்ட்ரோ சிஎன்ஜி ஆகிய கார்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

டாடா சிஎன்ஜி கார்களிலேயே விலை குறைவானது... டியாகோ பற்றி அறிய வேண்டிய 5 முக்கிய விபரங்கள்!

விலை

டாடா டியாகோ சிஎன்ஜி நான்கு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும். எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி மற்றும் எக்ஸ்இசட்-ப்ளஸ் ஆகிய ட்ரம்களிலேயே சிஎன்ஜி தேர்வு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதில் ஆரம்ப நிலை வேரியண்டாக காட்சியளிக்கும் எக்ஸ்இ தேர்விற்கு ரூ. 6.09 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் உயர்நிலை வேரியண்ட் 7.52 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனைச் செய்யப்படும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

Article Published On: Saturday, January 22, 2022, 10:20 [IST]
English summary
Here is list top five things to know about tata tiago cng
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+