இந்த வாரம் அறிமுகமாவதற்கு ரெண்டு கார்கள் தயாரா இருக்கு! ஒன்னு அதிக மைலேஜ் தரும்... இன்னொன்னோட லெவலே வேற!
இந்த வாரம் இந்தியாவில் அறிமுகவாதற்கு தயாராக இருக்கும் இரு கார் மாடல்கள் பற்றிய தகவலைக் கீழே உள்ள பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான தகவலைக் காணலாம்.

இந்திய சந்தையை அலங்கரிக்கும் வகையில் புதுமுக வாகனங்களும், புதுப்பிக்கப்பட்ட வாகன மாடல்களும் படையெடுத்துக் கொண்டிருக்கின்றன. அதாவது, தொடர்ச்சியாக நாட்டில் புதிய வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில வாகன மாடல்களும் நாட்டில் விரைவில் விற்பனைக்கு வரவையும், வெளியீட்டையும் பெற இருக்கின்றன.

அந்தவகையில், சில முக்கிய கார் மாடல்கள் விரைவில் அறிமுகவாதற்கான வரிசையில் உள்ளன. அந்தவகையில், இந்த வாரம் ஒரு சில முக்கிய கார் மாடல்கள் நாட்டில் விற்பனைக்காக களம் காண இருக்கின்றன. அவற்றில் பெரிதும் எதிர்பார்ப்பைத் தூண்டி வரும் இரு கார் மாடல்களை பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

அதாவது, இந்தியர்களின் கவனத்தில் மிக பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் ஹோண்டா சிட்டி இ:எச்இவி மற்றும் 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ஆகிய கார் மாடல்கள் பற்றிய சுவாரஷ்யமான தகவல்களையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த பதிவிற்குள் போகலாம்.

ஹோண்டா சிட்டி இ:எச்இவி (Honda City e:HEV)
ஹோண்டா நிறுவனம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி சிட்டி இ:எச்இவி காரை வெளியீடு செய்தது. அன்றைய தினமே இக்காருக்கான புக்கிங் பணிகளை தொடங்கியது. ரூ. 21 ஆயிரம் முன் தொகையில் புக்கிங் பணிகள் தொடங்கின. இது ஓர் ஹைபிரிட் வெர்ஷன் ஆகும். இக்காரின் அறிமுகம் வரும் 4ம் தேதி அரங்கேற இருக்கின்றது.

அன்றைய தினத்தில் இருந்தே இக்காரின் டெலிவரி பணிகளும் தொடங்கப்பட இருக்கின்றன. இக்காரில் 37க்கும் அதிகமான இணைப்பு வசதிகள் வழங்கப்பட இருக்கின்றன. இத்துடன், ஒன் டச் சன் ரூஃப், எல்இடி இன்டீரியர் ரூம் மின் விளக்குகள் மற்றும் ஆம்பியன்ட் மின் விளக்குகளும் இக்காரில் இடம் பெற இருக்கின்றது.

ஹோண்டா சிட்டி இ:எச்இவி ஹைபிரிட் வெர்ஷனில் பிரத்யேகமாக 1.5 லிட்டர் அட்கின்ஷன் சைக்கிள் டிஓஎச்சி ஐ-விடெக் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், இரு எலெக்ட்ரிக் மோட்டாரும் இக்காரில் வழங்கப்படும். இந்த மோட்டார்களை இயக்குவதற்கென பிரத்யேகமாக லித்தியம் அயன் பேட்டரியும் கொடுக்கப்படும்.

இந்த பேட்டரி பிரேக் ரீஜெனரஷேன் மற்றும் பெட்ரோல் எஞ்ஜின் வாயிலாக சார்ஜாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பெட்ரோல் எஞ்ஜினுடன் சேர்ந்து மின்மோட்டாரையும் இயங்க செய்யும் வகையில் மின்சார திறனை வழங்கும். இதன் பெட்ரோல் மோட்டார் 97 பிஎச்பி பவரையும், 127 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

அதேநேரத்தில் இதன் மின்சார மோட்டார்கள் 107 பிஎச்பி மற்றும் 253 என்எம் டார்க்கை வெளியேற்றும். இரு திறன்களை சேர்த்தோமேயானால் ஹோண்டா சிட்டி இ:எச்இவி ஹைபிரிட் வெளியேற்றும் திறன் 125 பிஎச்பி மற்றும் 253 என்எம் டார்க்காக இருக்கின்றது. இத்தகைய மிக சிறப்பான திறனுடன் சேர்ந்து லிட்டருக்கு 26.5 கிமீ மைலேஜையும் அவை (மோட்டார்கள்) வழங்கும். இவ்வளவு சூப்பரான ஹோண்டா சிட்டியே இன்னும் சில நாட்களில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் (2022 Mercedes-Benz C-Class)
இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் கார் மாடல்களின் பட்டியலில் 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் மாடலும் ஒன்று. இந்த காரின் வரும் 5 ம் தேதி வெளியீட்டைப் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதைத்தொடர்ந்து, வரும் மே 10ம் தேதி அன்று அது விற்பனைக்காக அறிமுகத்தைப் பெறும் என கூறப்படுகின்றது.

பன்முக சிறப்பு வசதிகள், சொகுசு அம்சங்கள், காஸ்மெட்டிக் மாற்றங்கள் உள்ளிட்டவற்றுடன் பென்ஸ் சி கிளாஸ் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை மூன்று விதமான வேரியண்டுகளில் நிறுவனம் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. எதிர்பார்க்கப்படுகின்றது. சி200, சி220டி மற்றும் சி300டி ஆகியவையே அந்த வேரியண்டுகள் ஆகும்.

அப்டேட் செய்யப்பட்ட மெல்லிய ஹெட்லேம்ப், ஹெட்லேம்புடன் கூடிய எல்இடி டிஆர்எல்கள், புதிய ஸ்பிளிட் எல்இடி டெயில்லைட்டுகள் மற்றும் புதிய கவர்ச்சிகரமான 19 இன்ச் அலாய் வீல்கள் உள்ளிட்டவை இக்காரில் இடம் பெற இருக்கின்றன.

இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு கவர்ச்சியான அம்சங்கள் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் சொகுசு காரில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் விற்பனைக்கு வந்த பின்னர் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், வால்வோ எஸ்60, ஆடி ஏ4 மற்றும் ஸ்கோடா சூப்பர் உள்ளிட்ட லக்சூரி கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.


Click it and Unblock the Notifications








