மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் சென்னை ஆன்-ரோடு விலை எவ்வளவு? கொச்சின்ல ரூ. 30 லட்சத்த தாண்டிடுச்சு!

மஹிந்திரா நிறுவனத்தின் புதுமுக காரான ஸ்கார்பியோ என் காரின் ஆன்-ரோடு விலை விபரத்தையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். முக்கிய நகரங்கள் வாரியாக காரின் ஆன்-ரோடு விலை பட்டியலைக் காணலாம், வாங்க.

ஆன்-ரோடில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் என்ன விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது தெரியுமா? கொச்சின்ல ரூ. 30 லடச்த்த தாண்டிடுச்சு!

மஹிந்திரா நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமாக ஸ்கார்பியோ என் உள்ளது. நிறுவனத்தின் பிற தயாரிப்புகளுக்கு கிடைப்பதைப் போலவே இந்த வாகனத்திற்கும் நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த வாகனம் இந்திய சந்தையில் 6 அல்லது 7 இருக்கைகள் தேர்வு மற்றும் மேனுவல் - ஆட்டோமேட்டிக் ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ஆன்-ரோடில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் என்ன விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது தெரியுமா? கொச்சின்ல ரூ. 30 லடச்த்த தாண்டிடுச்சு!

இதுபோன்று இன்னும் பல்வேறு தேர்வுகள் இக்காரில் வழங்கப்படுகின்றன. இந்த நிலையிலேயே சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் அதன் தானியங்கி கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் வசதிக் கொண்ட ஸ்கார்பியோ என் காரின் விலைகள் பற்றிய விபரத்தை வெளியிட்டது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி ஸ்கார்பியோ என் இந்திய சந்தையில் ரூ. 11.99 லட்சம் தொடங்கி ரூ. 23.9 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ஆன்-ரோடில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் என்ன விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது தெரியுமா? கொச்சின்ல ரூ. 30 லடச்த்த தாண்டிடுச்சு!

ஆனால், ஆன்-ரோடில் இவற்றின் விலை பல மடங்கு அதிகமாக தென்படுகின்றது. குறிப்பாக, அவை நகரத்திற்கு நகரம் மாறுபட்டுக் காணப்படுகின்றன. இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இந்தியாவின் நகரங்கள் வாரியாக மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் ஆன்-ரோடு விலை பற்றிய விபரத்தையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம்.

ஆன்-ரோடில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் என்ன விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது தெரியுமா? கொச்சின்ல ரூ. 30 லடச்த்த தாண்டிடுச்சு!

சென்னையில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரூ. 14.80 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் ஆன்-ரோடு விலையாகும். அதாவது, அரசின் வரி மற்றும் பிற கட்டணங்கள் சேர்க்கப்பட்ட நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ இந்த விலையிலேயே விற்கப்படுகின்றது. அதேவேலையில், இதன் உயர்நிலை தேர்வு அனைத்து கட்டணங்களும் சேர்க்கப்பட்ட நிலைியல் ரூ. 29.12 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது.

ஆன்-ரோடில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் என்ன விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது தெரியுமா? கொச்சின்ல ரூ. 30 லடச்த்த தாண்டிடுச்சு!

நம் சென்னையைக் காட்டிலும் அதிக விலையில் சில நகரங்களில் ஸ்கார்பியோ என் விற்கப்படுகின்றது. பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் நம் சென்னையைக் காட்டிலும் அதிக விலையில் ஸ்கார்பியோவின் ஆரம்ப நிலை வேரியண்ட் விற்பனைக்குக் கிடைக்கின்றது. பெங்களூருவில் 15.26 லட்ச ரூபாய்க்கும், ஹைதராபாத்தில் ரூ. 15.11 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலேயே ஸ்கார்பியோ என் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஆன்-ரோடில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் என்ன விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது தெரியுமா? கொச்சின்ல ரூ. 30 லடச்த்த தாண்டிடுச்சு!

மேலே பார்த்த அனைத்தும் ஆன்-ரோடு விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. கேரளாவின் கொச்சின் நகரத்தில் எந்த நகரத்திலும் இல்லாத அளவில் மிக அதிக விலையில் ஸ்கார்பியோ என் காரின்வின் உயர்நிலை வேரியண்ட் விற்கப்படுகின்றது. ரூ. 30.51 லட்சத்திற்கே அங்கு ஸ்கார்பியோ என் காரின் உயர்நிலை வேரியண்ட் விற்கப்படுகின்றது.

ஆன்-ரோடில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் என்ன விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது தெரியுமா? கொச்சின்ல ரூ. 30 லடச்த்த தாண்டிடுச்சு!

நகரங்கள் வாரியாக ஸ்கார்பியோ என் காரின் ஆன்-ரோடு விலை விபரங்கள் பட்டியலாக:

நகரங்கள் ஆன் ரோடு விலை விபரம், அனைத்தும் லட்சத்தில்.
மும்பை ₹14.46 - ₹29.17
டில்லி ₹14.23 - ₹28.54
பெங்களூரு ₹15.26 - ₹29.83
ஹைதராபாத் ₹15.11 - ₹29.82
அஹமதாபாத் ₹13.47 - ₹26.95
சென்னை ₹14.80 - ₹29.12
கொல்கத்தா ₹14.19 - ₹27.91
சூரத் ₹13.45 - ₹26.92
புனே ₹14.46 - ₹29.17
ஜெய்பூர் ₹14.17 - ₹28.36
லக்னோ ₹13.81 - ₹27.16
பாட்னா ₹14.17 - ₹28.36
கொச்சி ₹14.53 - ₹30.51
ஆன்-ரோடில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் என்ன விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது தெரியுமா? கொச்சின்ல ரூ. 30 லடச்த்த தாண்டிடுச்சு!

மேலே பார்த்த விலைகள் அனைத்தும் முதலில் புக் செய்யும் 25 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட எக்ஸ்யூவி 700 காரும் இவ்வாறே சிறப்பு சலுகையுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கணிசமான புக்கிங்குகளுக்கு பின்னர் காரின் விலையில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.

ஆன்-ரோடில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் என்ன விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது தெரியுமா? கொச்சின்ல ரூ. 30 லடச்த்த தாண்டிடுச்சு!

இதேபோல், வரும் மாதங்களில் ஸ்கார்பியோ என் காரின் விலைகள் உயர்த்தப்படலாம் என யூகிக்கப்படுகின்றது. மஹிந்திரா ஸ்கார்பியோ கார் இந்திய சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 2.0 டிஜிடிஐ எம்ஸ்டாலியன் பெட்ரோல் மோட்டார் தேர்விலும், 2.2 லிட்டர் எம்ஹாவ்க்டீசல் மோட்டார் தேர்வுகளில்தான் ஸ்கார்பியோ என் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ஆன்-ரோடில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் என்ன விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது தெரியுமா? கொச்சின்ல ரூ. 30 லடச்த்த தாண்டிடுச்சு!

இதில், பெட்ரோல் மோட்டார் அதிகப்பட்சமாக 197 பிஎச்பி மற்றும் 380 என்எம் டார்க் திறனையும், டீசல் மோட்டார் அதிகப்பட்சமாக 173 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக் கூடியவை ஆகும். இந்த மோட்டார்களுடனேயே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றது. இத்துடன் 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் தேர்வும் வழங்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 23, 2022, 13:52 [IST]
English summary
Here is mahindra scorpio n on road prices
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+