ஒரு காரை வாங்கவே நாக்க தள்ளிடும்.. இதுல 4ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை இந்த இந்திய பணக்காரர் வச்சிருக்காரு!
ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மிக விலையுயர்ந்த சொகுசு கார் மாடல்களில் கல்லினன் (Cullinan)-ம் ஒன்று. இந்த கார் மாடலின் 4 யூனிட்டுகளை இந்திய பணக்காரர் ஒருவர் பயன்படுத்தி வருகின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பணம் சம்பாதிப்பதில் மட்டுமல்ல வாகன கலெக்சனிலும் முன்னோடியாக விளங்கிக் கொண்டிருப்பவரே அம்பானி. இவரிடத்தில் எண்ணற்ற சொகுசு மற்றும் விலையுயர்ந்த அரிய வகை கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஏன், பெரும் பணக்காரர்களின் அந்தஸ்தான வாகனமாக பார்க்கப்படும் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார்கள்கூட இவரிடத்தில் அதிக எண்ணிக்கையில் பயன்பாட்டில் உள்ளன.

குறிப்பாக, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) மாடல் மட்டும் நான்கு யூனிட்டுகள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இதன் ஒன்றின் யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 9 கோடிக்கும் அதிகம் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் மாடலையே ஒன்றல்ல, இரண்டல்ல ஒட்டுமொத்தமாக நான்கினை அம்பானி குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.

இசட் பிரிவினரின் பாதுகாப்பு படைசூழ இந்த கார்கள் சாலையில் வலம் வரும் காட்சிகளை தற்போதும் இணையத்தில் பார்க்க முடியும். தற்போது பயன்படுத்தி வரும் நான்கு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் மாடலில் ஒன்று டஸ்கன் சன் நிறத்தைக் கொண்டது. இதனை நடப்பாண்டின் தொடக்கத்திலேயே அவர் வாங்கினார். இதற்கு அடுத்தபடியாக கல்லினன் அடர் சிவப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
மேலும், தங்க நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட கல்லினன் மற்றும் ப்ளூ ஷேடிலான கல்லினன் ஆகியவற்றையும் அவர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நான்கு கல்லினன் கார் மாடல்களில் முதல் கல்லினனை 2020ம் ஆம் ஆண்டிலேயே அம்பானி வாங்கியிருக்கின்றார். கோல்டன் நிறத்திலான கல்லினனையே அவர் முதலில் வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுமட்டுமில்லைங்க, இதுவே இந்தியாவின் முதல் கல்லினன் ஆகும். ஆமாங்க, இந்தியாவிலேயே முதல் ஆளாக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கியவர் அம்பானியே ஆவார். இதன் பின்னரே 2021 இல் ஒன்று, 2022 இல் ஒன்று மற்றும் இதற்கிடையில் ஒன்று என ஒட்டுமொத்தமாக நான்கு கல்லினன் கார்களை அவர் வாங்கி குவித்திருக்கின்றார்.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்கள் அதிக சொகுசான பயணங்களுக்கு உகந்த வாகனமாக காட்சியளிக்கின்றது. இதனை சொகுசு கார் என்பதற்கு பதிலாக உல்லாச கப்பல் என்று கூறலாம். அந்தளவிற்கு லக்சூரி அம்சங்கள் இக்காரில் வாரி வழங்கப்பட்டிருக்கும். மேலும், இதில் பயணிக்கும்போது தண்ணீரில் மிதக்கும் அனுபவமே கிடைக்குமாம். துள்ளியமாகக் கூற வேண்டும் என்றால் மிகவும் அமைதியான சூழல் (வெளிப்புற சத்தம் கேட்காது), சிறு பள்ளம்- மேடுகூட தெரியாத ஓர் பயணத்தை ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வழங்கும்.

இத்தகைய சூப்பரான சொகுசு காரையே தன்னுடைய கராஜில் அதிக எண்ணிக்கையில் அம்பானி நிறுத்தி வைத்திருக்கின்றார். அவரிடத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் மட்டுமின்றி இன்னும் சில ரோல்ஸ் ராய்ஸ் கார் மாடல்களும் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், பேந்தம் டிராப்ஹெட் கூபே, ரூ. 13 கோடி மதிப்புள்ள புதிய தலைமுறை பேந்தம் எக்ஸ்டென்டட் வீல் பேஸ் உள்ளிட்ட மாடல்களும் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.

இதன் வாயிலாக எக்கசக்க எண்ணிக்கையில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் அம்பானியிடத்தில் இருப்பது தெளிவாக தெரிகின்றது. ஆனால், எத்தனை இருக்கின்றது என்பது துள்ளியமாக தெரியவில்லை. இதுவரை இதுகுறித்த தகவலை யாரும் துள்ளியமாக வெளியிட்டதில்லை. இதேபோல், இவர்களிடத்தில் இருக்கும் அனைத்து வாகனங்களுக்கும் ஃபேன்சி பதிவெண்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அம்பானியின் இந்த செயல் சொகுசு கார்களுக்கு கூடுதலாக பல மடங்கு மதிப்பை சேர்த்திருக்கின்றது.
அதேவேலையில் இந்த குடும்பத்தினரிடத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் மட்டும் அதிக எண்ணிக்கையில் இருக்கவில்லை. இவர்களிடத்தில் விலையுயர்ந்த பென்ட்லீ பென்டேகாகூட அதிக எண்ணிக்கையிலேயே பயன்பாட்டில் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக மூன்று யூனிட்டுகள் பென்டேகா இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பென்ட்லீ பென்டேகா காரின் ஆரம்ப விலை மட்டுமே ரூ. 4.10 கோடிக்கும் அதிகம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








