ரொம்ப நாஸ்தியான பின்னாடி ஒன்னுமே பண்ண முடியாது... எதுவும் ஆகுறதுக்கு முன்னாடியே இந்த விஷயங்கள செஞ்சிருங்க!
காரில் உள்ள முக்கிய கருவிகளில் ஒன்றான விண்ட்ஷீல்டு வைப்பரை பாதுகாப்பதற்கான எளிய வழிமுறைகளையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி உள்ளோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

கார்களில் வழங்கப்பட்டிருக்கும் அனைத்து அம்சங்களுமே முக்கியமானவைதான். எந்தவொன்றையும் பயனற்றது என கூறிவிட முடியாது. உற்பத்தியாளர்கள் வழங்கியிருக்கும் சின்ன சின்ன பாகங்கள்கூட பலதரப்பட்ட பயனளிக்கக் கூடியவையாக இருக்கின்றன. அந்தமாதிரியான ஓர் கருவியே விண்ட்ஷீல்டு வைப்பர்கள். கார்களில் வழங்கப்படும் மிக முக்கியமான கருவிகளில் இதுவும் ஒன்று.

இதன் அருமையை மழைக்காலங்களில் மட்டுமே நம்மால் உணர முடியும். மழைக்காலங்களில் வைப்பர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் அந்த காரை ஓட்டுவது மிக கடினமான ஒன்றாக மாறிவிடும். என்ன புத்தம் புதிய காராக இருந்தாலும் வைப்பர் ஒன்று நல் ஆரோக்கியத்துடன் இல்லை என்றால் அந்த வாகனத்தை இயக்குவதே மிகவும் கஸ்டமானதாக மாறிவிடும்.

இவை மழை காலத்தின்போது தெளிவான பார்வையைப் பெற உதவியாக இருக்கின்றன. இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் விண்ட்ஷீல்டு மீது விழும் மழை துளியை தேங்கவிடாமல் அவை அகற்றுகின்றன. இத்தகைய தரமிகுந்த வேலையை வைப்பர்கள் மேற்கொள்கின்ற காரணத்தினாலேயே கார் பராமரிப்பில் வைப்பர்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

ஆனால், பலர் இந்த விஷயத்தில் கோட்டையை விட்டுவிடுகின்றனர். அவற்றை முறையாக பராமரிக்க தவறிவிடுகின்றோம். இதன் விளைவாக தேவைப்படுகின்ற நேரத்தில் விண்ட்ஷீல்டு வைப்பர்கள் சரியாக வேலை செய்யாமல் போகின்றன. கடைசியில் மழை காலத்தில் வாகனத்தை ஓட்ட முடியாமல் திணறும் சூழல் உருவாகின்றது. இத்தகைய சூழலை திடீர் மழை காலங்களில் யோசித்துகூட பார்க்க முடியாது.

இதை நீங்கள் தவிர்க்க விரும்பினால், அதாவது, வைப்பரை சிறப்பான முறையில் பராமரிக்க விரும்பினால், இதோ உங்களுக்கான வழிக்காட்டுதல்களையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். இதன் வாயிலாக விண்ட்ஷீல்டு வைப்பர்களின் ஆயுட்காலத்தை இன்னும் சில காலங்களுக்கு நீட்டிக்க முடியும். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

வெயில்ல படாத மாதிரி வையுங்க:
காரின் புதிய பொலிவிற்கு மட்டுமில்லைங்க விண்ட்ஷீல்டு வைப்பர்களுக்கும் இது மிக முக்கியமான எதிரியாக இருக்கின்றது. இதனால்தான் கார்களை வெயிலில் படும்படி அல்லாமல் நிழலான பகுதியில் நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. அதிக பாதுகாப்பான பார்க்கிங் பகுதியில் நிறுத்தமுடியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் நிழல் உள்ள பகுதிகளில் கார் கவர் கொண்டு போர்த்தி அவற்றை நிறுத்துவதன் வாயிலாக வைப்பர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும். இத்தோடு காரின் புதுப் பொலிவை காக்க முடியும்.

பிளேடுகளை சுத்தமாக வைத்தல் மிகுந்த அவசியம்:
முக்கிய நகரங்களில் வசிப்பவர்களில் பலர் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்னையாக பார்க்கி வசதி இருக்கின்றது. இங்கு நம்மில் பலர் முறையான பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தினால் சாலையோரங்களிலும், தெருவோரங்களிலும் வாகனங்களை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்த மாதிரியான நேரங்களில் மரக் கிளைகள், இலைகள் மற்றும் தூசிகளால் வைப்பர்கள் பாதிக்கப்படக் கூடும்.

ஆகையால், வைப்பர்களை இவர்களிடத்தில் இருந்தும் பாதுகாப்பு அவசியமானதாகப் பார்க்கப்படுகின்றது. வேறு வழியே இல்லை காரை வெளியில்தான் நிறுத்தியாக வேண்டும் என்பவர்கள் காரின் முன் பக்கத்தை நேரம் கிடைக்கும்போதெல்லம் சுத்தம் செய்வது நல்லது.

குறிப்பாக, நீண்ட நாட்களுக்கு காரை எடுக்காமல் நிறுத்தி வைக்கும்போது அதிக அக்கறையுடன் அதை சுத்தம் செய்வதன் வாயிலாக வைப்பர் பிளேடை ஆரோக்கியமான முறையில் பாதுகாக்க முடியும். பிளேட்களை சுத்தம் செய்வதற்கென்றே சந்தையில் பலவகையான ஆயில்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரப்பர் கன்டிஷனை செக் பண்ணுங்க:
வைப்பரில் உள்ள ரப்பர் பயன்பாடில்லாமல் இருப்பதாலும், முறையாக பராமரிக்கப்படாத காரணங்களினாலும் சீக்கிரமே வெடிப்பு போன்ற பாதிப்புகளைச் சந்திக்க நேரிடுகின்றன. இத்தகைய ரப்பர்கள் கொண்ட வைப்பரை அப்படியே பயன்படுத்துவதனால் விண்ட்ஷீல்டில் கீரல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வைப் செய்யும்போது கீச் சத்தங்களும் வெளியாகும். இந்த மாதிரியான நேரங்களில் அலட்சியம் செய்யாமல் அதன் ரப்பர்களை மாற்றுவதே நல்லது.


Click it and Unblock the Notifications








