இந்தியாவில் மிக பெரிய ஃபிளாப்பை சந்தித்த மாருதி கார்... என்னங்க நம்ம ஆளுங்க இப்படி வச்சு செஞ்சிருக்காங்க!

இந்தியாவில் மிகப் பெரிய ஃபிளாப்பைச் சந்தித்த மாருதி கார் பற்றிய சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் மிக பெரிய ஃபிளாப்பை சந்தித்த மாருதி கார்... இப்படி ஒரு அடியை நிறுவனத்தின் வேற எந்த தயாரிப்பும் சந்தித்ததில்ல!

2022 செப்டம்பர் மாதம் மட்டுமின்றி கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் முன்னணி வாகன விற்பனையாளராக மாருதி சுஸுகி நிறுவனம் விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் மிக பெரிய ரசிக பட்டாளம் இருக்கின்றது என்றுகூட கூறலாம். அந்தளவிற்கு நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் டிமாண்ட் அதிகளவில் நிலவுகின்றது.

இந்தியாவில் மிக பெரிய ஃபிளாப்பை சந்தித்த மாருதி கார்... இப்படி ஒரு அடியை நிறுவனத்தின் வேற எந்த தயாரிப்பும் சந்தித்ததில்ல!

இந்த மாதிரியான கார் மாடல்களையே மாருதி சுஸுகி நிறுவனம் தனது விற்பனை பட்டியலில் வைத்திருக்கின்றது. அதேவேலையில், இந்த மாதிரியான வாகனங்களை மட்டும்தான் மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றதா என கேட்டால், இல்லை என்பதே எங்களின் பதில்.

இந்தியாவில் மிக பெரிய ஃபிளாப்பை சந்தித்த மாருதி கார்... இப்படி ஒரு அடியை நிறுவனத்தின் வேற எந்த தயாரிப்பும் சந்தித்ததில்ல!

நிறுவனத்தின் சில தயாரிப்புகள் அட்டு ஃபிளாப் என கூறுமளவிற்கு மிக மோசமான அடியை வாங்கி சந்தையை விட்டு வெளியேறியிருக்கின்றன. அந்தவகையில், மிக பெரிய அடியை வாங்கி நாட்டை விட்டே வெளியேறிய மாருதி சுஸுகியின் ஓர் தயாரிப்பு பற்றிய சுவாரஷ்ய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் மிக பெரிய ஃபிளாப்பை சந்தித்த மாருதி கார்... இப்படி ஒரு அடியை நிறுவனத்தின் வேற எந்த தயாரிப்பும் சந்தித்ததில்ல!

கிசாஸி, இதுவே இந்தியாவில் பெருத்த அடியை வாங்கி சந்தையை விட்டு வெளியேறிய மாருதி சுஸுகி காராகும். இது ஓர் மிட்-சைஸ் செடான் காராகும். முதலில் இந்த கார் ஜப்பானிலேயே அறமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 2011 ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாகனத்தை பன்முக கனவுகளுடன் விற்பனைக்குக் கொண்டு வந்தது. ஆனால், அனைத்து படுதோல்வியில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மிக பெரிய ஃபிளாப்பை சந்தித்த மாருதி கார்... இப்படி ஒரு அடியை நிறுவனத்தின் வேற எந்த தயாரிப்பும் சந்தித்ததில்ல!

கிசாஸியில் பல்வேறு சிறப்பு மற்றும் பிரீமியம் அம்சங்களை மாருதி சுஸுகி வாரி வழங்கியிருந்தது. குறிப்பாக, ஸ்போர்ட்டி தோற்றத்தை காருக்கு வழங்கும் வகையில் முன் பக்க க்ரில், பம்பர், ஸ்பாய்லர் மற்றும் 18 அங்குல அலாய் வீல்கள் உள்ளிட்டவற்றை நிறுவனம் வழங்கியிருந்தது. இதுதவிர, ஹீட்டட் வசதிக் கொண்ட கண்ணாடிகள், மழை நீர் பொழிந்தால் தானாக வைப் செய்யும் வைப்பர்கள், டூயல் டோன் நிறம் என எக்கசக்க அம்சங்களை இந்த காரில் மாருதி வாரி வழங்கியிருந்தது.

இந்தியாவில் மிக பெரிய ஃபிளாப்பை சந்தித்த மாருதி கார்... இப்படி ஒரு அடியை நிறுவனத்தின் வேற எந்த தயாரிப்பும் சந்தித்ததில்ல!

இதுமட்டுமா, பவர்டு டிரைவர் இருக்கை, ஹீட்டட் இருக்கைகள், ஆம்பியன்ட் லைட் மற்றும் டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்டவற்ரையும் கிசாயில் மாருதி வழங்கியிருந்தது. இருப்பினும் அக்கார் இந்தியர்களைக் கவர தவறவிட்டுவிட்டது. மோட்டாரை பொருத்தவரை 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினே இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிக பெரிய ஃபிளாப்பை சந்தித்த மாருதி கார்... இப்படி ஒரு அடியை நிறுவனத்தின் வேற எந்த தயாரிப்பும் சந்தித்ததில்ல!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 185 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க்கையும் வெளியற்றும் திறன் கொண்டது. இவ்வாறு, தோற்றம், பவர்ஃபுல் எஞ்ஜின் மற்றும் பிரீமியம் அம்சங்கள் என பலவற்றை தாங்கியிருந்த போதிலும் இந்த கார் இந்தியர்களைக் கவரவில்லை. அதேவேலையில், இத்தனை அம்சங்களைக் கொண்டிருந்த காரணத்தினாலும், சிகேடி வாயிலாக விற்பனைக்கு வந்த கராணத்தினாலும் இதன் விலை ரூ.21.39 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்தியாவில் மிக பெரிய ஃபிளாப்பை சந்தித்த மாருதி கார்... இப்படி ஒரு அடியை நிறுவனத்தின் வேற எந்த தயாரிப்பும் சந்தித்ததில்ல!

இந்த உச்சபட்ச விலையே இக்கார் இந்தியர்களைக் கவர்வதற்கு முக்கிய காரணம் ஆகும். இந்தியர்கள் இந்தளவு மிக உயரிய விலையை இந்த கார்மீது போட விரும்பவில்லை. இதன் விளைவாக மிகப் பெரிய அடியை கிசாஸி வாங்கியது. மலிவு விலை கார்களுக்கு பெயர்போன மாருதி சுஸுகி நிறுவனம் இந்தளவு அதிக விலைக் கொண்ட காரை விற்பனைக்குக் கொண்டு வந்ததே பலரால் ஏற்கமுடியாததாக இருந்தது. இத்துடன், அது டீசல் எஞ்ஜினைக் கொண்டிருக்கவில்லை. ஆகையால், தரமட்ட அடியை வாங்கி விற்பனைக்கு வந்த அதே வேகத்தில் சந்தையை விட்டு வெளியேறியது கிசாஸி.

இந்தியாவில் மிக பெரிய ஃபிளாப்பை சந்தித்த மாருதி கார்... இப்படி ஒரு அடியை நிறுவனத்தின் வேற எந்த தயாரிப்பும் சந்தித்ததில்ல!

மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில்கூட ஓர் பிரபலமான கார் மாடலை வெளியேற்றியிருந்தது. எஸ்-கிராஸ் எனும் கார் மாடலையே நிறுவனம் வெளியேற்றியது. போதியளவு விற்பனை வரவேற்பு இக்காருக்கு கிடைக்காத காரணத்தினால் இக்காரை சந்தையை விட்டு நிறுவனம் வெளியேற்றியது. ஆனால், இதன் வெளியேற்றத்திற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை நிறுவனம் வெளியிடவில்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, October 15, 2022, 8:30 [IST]
English summary
Here is some interesting details about maruti suzuki kizashi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+