ஃபார்ச்சூனரை விட குறைவான விலையில் கிடைக்கும் சொகுசு கார்களின் பட்டியல்!.. இந்த லிஸ்ட்ல 8 கார்கள் இருக்கு!

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஜிஆர்-எஸ் (Toyota Fortuner GR-S) வெர்ஷனைக் காட்டிலும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் சொகுசு கார் மாடல்கள் சிலவற்றையே இந்த பதிவில் பட்டியலிட்டு வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலை விரிவாக காணலாம்.

டொயோட்டா ஃபார்ச்சூனரை விட குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் சொகுசு கார்கள்... பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் தயாரிப்புகள் இந்த பட்டியல்ல இருக்கு...

இந்தியாவின் எஸ்யூவி கார்கள் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஃபேமஸான வாகன மாடல்களில் டொயோட்டா ஃபார்ச்சூனரும் ஒன்று. இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் இக்காருக்கு சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஏன் சில சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியிலும் இந்த கார் மாடலுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக்கொண்டிருக்கின்றது.

டொயோட்டா ஃபார்ச்சூனரை விட குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் சொகுசு கார்கள்... பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் தயாரிப்புகள் இந்த பட்டியல்ல இருக்கு...

இந்த கார் தற்போது இந்தியாவில் ரூ. 31.79 லட்சம் தொடங்கி ரூ. 48.43 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

டொயோட்டா ஃபார்ச்சூனரை விட குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் சொகுசு கார்கள்... பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் தயாரிப்புகள் இந்த பட்டியல்ல இருக்கு...

ஆனால், இந்த காரின் விலை தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் சில சொகுசு கார் மாடல்களின் விலையைக் காட்டிலும் சற்று அதிகம் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். டொயோட்டா ஃபார்ச்சூனர் டாப் ஸ்பெக் மாடலான ஜிஆர்-எஸ் வெர்ஷனே இந்தியாவில் ரூ. 48.43 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.

டொயோட்டா ஃபார்ச்சூனரை விட குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் சொகுசு கார்கள்... பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் தயாரிப்புகள் இந்த பட்டியல்ல இருக்கு...

இதைவிட குறைவான விலையில் சில சொகுசு கார் பிராண்டுகள் தங்களின் குறிப்பிட்ட கார் மாடல்களை நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், எட்டு சொகுசு கார் மாடல்கள் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஜிஆர்-எஸ் வெர்ஷனைக் காட்டிலும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவை எவை என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டொயோட்டா ஃபார்ச்சூனரை விட குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் சொகுசு கார்கள்... பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் தயாரிப்புகள் இந்த பட்டியல்ல இருக்கு...

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 (BMW X1)

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் உயர்நிலை வேரியண்டை வாங்க விரும்புபவர்கள் ஒரு முறை பிஎம்டபிள்யூ விற்பனைக்கு வழங்கும் இந்த எக்ஸ்1 கார் மாடலை பார்த்துவிட்டு பின்னர் அக்காரை வாங்கும் திட்டத்தைப் போடலாம். ஏனெனில், இந்த கார் இந்தியாவில் ரூ. 41.50 லட்சம் தொடங்கி ரூ. 44.50 லட்சம் வரையிலான விலைக்கை விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டொயோட்டா ஃபார்ச்சூனரை விட குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் சொகுசு கார்கள்... பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் தயாரிப்புகள் இந்த பட்டியல்ல இருக்கு...

இது டொயோட்டா ஃபார்ச்சூனர் ஜிஆர்-எஸ் வெர்ஷனைக் காட்டிலும் குறைவான விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இந்த காரை டொயோட்டா ஃபார்ச்சூனரைபோல் ஆஃப்-ரோடராக பயன்படுத்த முடியாது. அதேவேலையில், சில லட்ச ரூபாய் குறைவான விலையில் ஓர் லக்சூரி பிராண்டின் காரை பயன்படுத்துகின்றோம் என்கிற உணர்வை எக்ஸ்1 காரின் வாயிலாக நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

டொயோட்டா ஃபார்ச்சூனரை விட குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் சொகுசு கார்கள்... பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் தயாரிப்புகள் இந்த பட்டியல்ல இருக்கு...

பிஎம்டபிள்யூ நிறுவனம் எக்ஸ்1 சொகுசு காரில் இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளை வழங்குகின்றது. 2.0 லிட்டர் டர்போசாரஜ்ட் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வுகளை எக்ஸ்1-ல் பிஎம்டபிள்யூ வழங்குகின்றது. லக்சூரி அம்சங்களைப் பொருத்தவரை பிஎம்டபிள்யூ என்ற பெயருக்கு இழுக்கு ஏற்படாத வண்ணம் பல்வேறு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

டொயோட்டா ஃபார்ச்சூனரை விட குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் சொகுசு கார்கள்... பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் தயாரிப்புகள் இந்த பட்டியல்ல இருக்கு...

ஆடி க்யூ2 (Audi Q2)

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஜிஆர்-எஸ் வெர்ஷனைக் காட்டிலும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சொகுசு கார்களின் பட்டியலில் நாம் அடுத்ததாகக ஆடி க்யூ2 ஆடம்பர காரை பற்றியே பார்க்க இருக்கின்றோம். இந்த கார் இந்திய சந்தையில் ரூ. 34.99 லட்சம் தொடங்கி ரூ. 48.89 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டொயோட்டா ஃபார்ச்சூனரை விட குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் சொகுசு கார்கள்... பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் தயாரிப்புகள் இந்த பட்டியல்ல இருக்கு...

இந்த வாகனம் ஃபார்ச்சூனரைக் காட்டிலும் சற்று சிறிய உருவத்தில் இருக்கும். இருப்பினும், சொகுசு விஷயத்தில் எந்த விதமான குறைச்சலும் க்யூ2-வில் இருக்காது. ஆகையால், ஆடம்பரமான அனுபவத்தை மிக தாராளமாக பெற்றுக் கொள்ள முடியும். மேலும், இந்த காம்பேக்ட் எஸ்யூவி-யை ஆடி நிறுவனம் அதிக உறுதியான மற்றும் சிறந்த டிரைவிங் டைனமிக்ஸ் வசதிகளுடன் உருவாக்கியிருக்கின்றது. இக்காரில் 2.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனரை விட குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் சொகுசு கார்கள்... பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் தயாரிப்புகள் இந்த பட்டியல்ல இருக்கு...

ஆடி ஏ4 (Audi A4)

ஆடி நிறுவனத்தின் மற்றுமொரு சொகுசு கார் மாடல் ஏ4-ம் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஜிஆர்-எஸ் வெர்ஷனைக் காட்டிலும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஓர் நடுத்தர செடான் ரக காராகும். இந்த கார் இந்திய சந்தையில் ரூ. 40.49 லட்சம் தொடங்கி ரூ. 48.99 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டொயோட்டா ஃபார்ச்சூனரை விட குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் சொகுசு கார்கள்... பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் தயாரிப்புகள் இந்த பட்டியல்ல இருக்கு...

ஃபார்ச்சூனர் தோற்றத்திற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்றாலும் அதன் உயர்நிலை வேரியண்டை விட குறைவான விலையில் அதிக லக்சூரி அம்சங்களுடன் கிடைக்கும் சொகுசு காராக இது காட்சியளிக்கின்றது. எனவேதான், இக்காரையும் இந்த பட்டியலில் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

டொயோட்டா ஃபார்ச்சூனரை விட குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் சொகுசு கார்கள்... பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் தயாரிப்புகள் இந்த பட்டியல்ல இருக்கு...

ஜாகுவார் எக்ஸ்இ (Jaguar XE)

சொகுசு கார் பிரியர்கள் பலருக்கு பிடித்தமான பிராண்டாக ஜாகுவார் இருக்கின்றது. இந்த பிராண்டும் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஜிஆர்-எஸ் வெர்ஷனைக் காட்டிலும் குறைவான விலையில் ஓர் சொகுசு கார் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

டொயோட்டா ஃபார்ச்சூனரை விட குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் சொகுசு கார்கள்... பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் தயாரிப்புகள் இந்த பட்டியல்ல இருக்கு...

அதுதான் ஜாகுவார் எக்ஸ்இ. இதுவும் ஓர் செடான் ரக காராகும். இந்த கார் இந்தியாவில் ரூ. 46.64 லட்சம் தொடங்கி ரூ. 48.50 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஃபார்ச்சூனரை போல் ஸ்போர்ட்டியான தோற்றத்தில் இருக்காது. அதேவேலையில், சாலையில் இந்த காரில் செல்லும்போது ஃபார்ச்சூனரைக் காட்டிலும் அதிகப்படியானோரின் கவனத்தை அது திசைதிருப்பும்.

டொயோட்டா ஃபார்ச்சூனரை விட குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் சொகுசு கார்கள்... பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் தயாரிப்புகள் இந்த பட்டியல்ல இருக்கு...

வால்வோ எக்ஸ்சி40 (Volvo XC40)

டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு சற்றே இணையான உருவ தோற்றத்தில் கிடைக்கும் மலிவு விலை லக்சூரி காராக எக்ஸ்சி40 இருக்கின்றது. இது ஓர் காம்பேக்ட் லக்சூரி எஸ்யூவி காராகும். இந்த கார் இந்திய சந்தையில் ரூ. 44.50 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரில் லக்சூரி அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் என அனைத்தும் ஏராளமாக வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, இக்காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பாதுகாப்பு அம்சங்களும் மிக ஏராளமாக இடம் பெற்றிருக்கும்.

டொயோட்டா ஃபார்ச்சூனரை விட குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் சொகுசு கார்கள்... பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் தயாரிப்புகள் இந்த பட்டியல்ல இருக்கு...

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிராண் கூபே (BMW 2-Series Gran Coupe)

ஒற்றை பார்வையிலேயே அனைவரையும் கவரும் தோற்றத்தைக் கொண்டதாக இந்த சொகுசு கார் இக்கின்றது. தோற்றத்தில் மட்டுமில்லைங்க தொழில்நுட்ப விஷயத்திலும் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் 2 சீரிஸ் கிராண் கூபே இருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 41.50 லட்சம் தொடங்கி ரூ. 44.50 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரில் இரு விதமான எஞ்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 2.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் தேர்வுகளிலேயே அது கிடைக்கின்றது.

டொயோட்டா ஃபார்ச்சூனரை விட குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் சொகுசு கார்கள்... பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் தயாரிப்புகள் இந்த பட்டியல்ல இருக்கு...

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ (Mercedes-Benz GLA)

இது ஓர் காம்பேக்ட் லக்சூரி எஸ்யூவி காராகும். இந்த காரும் டொயோட்டாவின் ஜிஆர்-எஸ் லக்சூரி காருக்கு போட்டியாக அதிக சொகுசு வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 44.90 லட்சம் தொடங்கி ரூ. 48.90 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த வாகனம் மூன்று விதமான வேரியண்டுகளில் சந்தையில் விற்பனைக்குக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அந்தவகையில், 1.3 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்்டர் டீசல் எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கக் கிடைக்கும்.

டொயோட்டா ஃபார்ச்சூனரை விட குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் சொகுசு கார்கள்... பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் தயாரிப்புகள் இந்த பட்டியல்ல இருக்கு...

இதேபோல் மெர்சிடிஸ் பென்ஸின் ஏ-கிளாஸ் லிமோசைன் (Mercedes-Benz A-Class Limousine) கார் மாடலும் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரைக் காட்டிலும் குறைவான விலையில் அதிக சிறப்பு வசதிகளுடன் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த சொகுசு காரின் ஆரம்ப விலை ரூ. 42 லட்சம் ஆகும். இது ஓர் நான்கு கதவுகள் கொண்ட லிமோசைன் ரக காராகும். சொகுசு மற்றும் நவீன கால தொழில்நுட்ப அம்சங்கள் என பல சிறப்பு வசதிகள் மிக தாரளமாக வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here is some luxury cars list that are cheaper than the toyota fortuner gr s
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X