காரை ஜம்ப் ஸ்டார்ட் செய்வது எப்படி?.. இந்த நிலைமை வராமல் இருக்க என்ன செய்யலாம்?.. இதோ இரண்டுக்குமான பதில்!

காரில் உள்ள பேட்டரியின் மின்சார திறன் முழுமையாக வற்றிவிட்டால் அக்காரை ஸ்டார்ட் செய்வது என்பது பெரும் தலை வலியான விஷயம். இதை எப்படி கையாள்வது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். இத்துடன், கார் பேட்டரியின் மின்சார திறன் எளிதில் வற்றாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பது பற்றிய தகவலையும் இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லாம்.

காரை ஜம்ப் ஸ்டார்ட் செய்வது எப்படி?.. இந்த நிலைமை வராமல் இருக்க என்ன செய்யலாம்?.. இதோ இரண்டுக்குமான பதில்!!

நம்மில் நிறைய பேரு இந்தப் பிரச்னையைச் சந்தித்திருக்கக் கூடும். குறிப்பாகப் பழைய பேட்டரியைக் கொண்டிருக்கும் பழைய கார்களைப் பயன்படுத்துவோர் அவ்வப்போது இந்தச் சிக்கலில் சிக்குவதுண்டு. அவ்வாறு பல முறை இந்தச் சிக்கலில் சிக்கியவர்கள் ஜம்ப் ஸ்டார்ட் செய்வது பற்றி அறிந்திருப்பார்கள்.

காரை ஜம்ப் ஸ்டார்ட் செய்வது எப்படி?.. இந்த நிலைமை வராமல் இருக்க என்ன செய்யலாம்?.. இதோ இரண்டுக்குமான பதில்!!

அதேநேரத்தில் இதை பற்றி அறியாதவர்கள் சிலரும் இருக்கின்றார்கள். அந்த நபர்களுக்கே, எவ்வாறு பாதுகாப்பாக காரை ஜம்ப் ஸ்டார்ட் செய்வது என்பதற்கான சில முக்கிய டிப்ஸ்களை, வல்லுநர்களிடம் இருந்து பெற்று வழங்கியிருக்கின்றோம். முதலில் பேட்டரியின் மின்சார திறன் வீணாகுவதை எப்படி தவிர்ப்பது என்பது பற்றிய தகவலைப் பார்க்கலாம்.

காரை ஜம்ப் ஸ்டார்ட் செய்வது எப்படி?.. இந்த நிலைமை வராமல் இருக்க என்ன செய்யலாம்?.. இதோ இரண்டுக்குமான பதில்!!

ஒரு பேட்டரி எந்தெந்த வழிகளில் எல்லாம் வற்றுகின்றது?

வாகனத்தை பார்க்க செய்த பின்னரும், மின் விளக்குகளை ஒளிர விடுவதனால் பேட்டரியில் உள்ள மின்சார திறன் விரைவில் வற்றும் நிலை ஏற்படுகின்றது. குறிப்பாக, காரின் எஞ்ஜின் இயங்காத சூழலிலேயே இந்த நிலை உருவாகுகின்றது. சிலர், காரை விட்டு இறங்கும்போது அவற்றின் மின் விளக்குகளை ஆஃப் செய்ய தவறிவிடுகின்றனர். இதன் விளைவாக மறுநாள் காலை கார் பேட்டரியின் மின்சார திறன் முழுமையாக தீர்ந்த நிலையில் காணப்படும்.

காரை ஜம்ப் ஸ்டார்ட் செய்வது எப்படி?.. இந்த நிலைமை வராமல் இருக்க என்ன செய்யலாம்?.. இதோ இரண்டுக்குமான பதில்!!

மின்சாதனங்களை காரில் வைத்து நீண்ட நேரம் சார்ஜ் செய்வது

தொடர்ச்சியாக அதிகளவில் மின்சாதனங்களை காரில் வைத்து சார்ஜ் செய்வதனாலும் கார்களின் பேட்டரிகள் எளிதில் வற்றிவிடுகின்றன. ஆகையால், தொடர்ச்சியாக இல்லாமல் தேவைக்கேற்ப காரில் உள்ள சார்ஜிங் போர்ட்டுகளை பயன்படுவது மிக சிறந்த செயலாகக் கருதப்படுகின்றது. இதன் வாயிலாக மிக வேகத்தில் கார் பேட்டரியின் மின்சார திறன் வற்றுவதை தவிர்க்க முடியும்.

காரை ஜம்ப் ஸ்டார்ட் செய்வது எப்படி?.. இந்த நிலைமை வராமல் இருக்க என்ன செய்யலாம்?.. இதோ இரண்டுக்குமான பதில்!!

இதுபோன்று தேவையில்லாமல் காரில் உள்ள பேட்டரியை பயன்படுத்துகின்ற காரணத்தினாலேயே அவற்றில் மின்சார திறன் இல்லாத நிலை உருவாகின்றது. இந்த மாதிரியான நேரங்களில் ஜம்ப் ஸ்டார்ட் செய்வதனால் மட்டுமே அக்காரை ஸ்டார்ட் செய்ய முடியும். இதை எப்படி செய்வது என்ற வழிமுறைகளை கீழே பார்க்கலாம்.

காரை ஜம்ப் ஸ்டார்ட் செய்வது எப்படி?.. இந்த நிலைமை வராமல் இருக்க என்ன செய்யலாம்?.. இதோ இரண்டுக்குமான பதில்!!

ஜம்ப் ஸ்டார்ட் செய்வதற்கான கேபிள்கள் ஆன்லைன் மற்றும் கார் உதிரிபாகங்கள் விற்பனையகத்தில் மிக எளிதில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால், இவற்றை வைத்துக் கொண்டு மட்டுமே நம்மால் மின்சார திறனை இழந்த பேட்டரியைக் கொண்டிருக்கும் காரை ஸ்டார்ட் செய்துவிட முடியாது. ஆம், இதற்கு இன்னும் சில உபகரணங்கள் தேவைப்படுகின்றன.

காரை ஜம்ப் ஸ்டார்ட் செய்வது எப்படி?.. இந்த நிலைமை வராமல் இருக்க என்ன செய்யலாம்?.. இதோ இரண்டுக்குமான பதில்!!

மின்சார திறன் கொண்ட வேறொரு பேட்டரி அல்லது ஜம்ப் ஸ்டார்ட் கிட் அல்லது வேறொரு கார் இவற்றில் ஏதேனும் ஒன்று நிச்சயம் நம் கை வசம் இருக்க வேண்டும். இவற்றில், வேறொரு காரில் உள்ள பேட்டரியைக் கொண்டு செயல் இழந்த பேட்டரியைக் கொண்டிருக்கும் காரை ஸ்டார்ட் செய்கின்றோம் என்றால், இரு கார்களும் முழுமையாக ஆஃப் செய்யப்பட்ட நிலையில் இருக்க வேண்டும்.

காரை ஜம்ப் ஸ்டார்ட் செய்வது எப்படி?.. இந்த நிலைமை வராமல் இருக்க என்ன செய்யலாம்?.. இதோ இரண்டுக்குமான பதில்!!

இத்துடன், கார்களின் பார்க்கிங் பிரேக்குகளும் போடப்பட்டிருக்கின்றதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். சில பாதுகாப்பு வழிமுறைகளுக்கு இவற்றை ஆராய்வது கட்டாயம் ஆகும். இதன் பின்னர் பாசிட்டிவ் டெர்மினலில் சிவப்பு நிற கேபிளை இணைக்க வேண்டும். பாசிட்டிவ் டெர்மினலை எப்படி கண்டறிவது?, பிஓஎஸ் (POS) அல்லது பிளஸ் (+) குறியீடு அல்லது நெகட்டீவ் டெர்மினலைக் காட்டிலும் பாசிட்டிவ் டெர்மினல் சற்று பெரியதாக காட்சியளிக்கும். இதை வைத்து பாசிட்டிவ் டெர்மினலை எளிதில் கண்டறியலாம்.

காரை ஜம்ப் ஸ்டார்ட் செய்வது எப்படி?.. இந்த நிலைமை வராமல் இருக்க என்ன செய்யலாம்?.. இதோ இரண்டுக்குமான பதில்!!

ஒரு காரில் பொருத்தியதைப் போலவே அந்த சிவப்பு கேபிளை மற்றொரு காரின் பாசிட்டிவ் டெர்மினிலில் இணைக்க வேண்டும். இதற்கு அடுத்தபடியாக கருப்பு நிற ஜம்ப் கேபிளைக் கொண்டு காலியாக இருக்கும் பேட்டரியின் மறு இரு முனைகளையும் இணைக்க வேண்டும். அதாவது, இரு கார்களின் நெகட்டீவ் டெர்மினல்களிலும் கருப்பு கேபிளை இணைக்க வேண்டும்.

காரை ஜம்ப் ஸ்டார்ட் செய்வது எப்படி?.. இந்த நிலைமை வராமல் இருக்க என்ன செய்யலாம்?.. இதோ இரண்டுக்குமான பதில்!!

இதன் பின்னர் இயங்கும் நிலையில் இருக்கும் காரின் எஞ்ஜினை சில நேரங்கள் இயங்க செய்ய வேண்டும். இதன் வாயிலாக ஸ்டார்ட் ஆக முடியாமல் இருக்கும் காரின் பேட்டரி லேசாக சார்ஜாகும். சில நிமிடங்கள் இவ்வாறு செய்வதன் வாயிலாக காரை ஸ்டார்ட் செய்வதற்கான மின்சார திறன் அந்த பேட்டரியில் ஏறிவிடும்.

காரை ஜம்ப் ஸ்டார்ட் செய்வது எப்படி?.. இந்த நிலைமை வராமல் இருக்க என்ன செய்யலாம்?.. இதோ இரண்டுக்குமான பதில்!!

இவ்வாறு செய்த பின்னரும் காரை ஸ்டார்ட் செய்ய முடியவில்லை என்றால் ஸ்டார்ட் சுவிட்சில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். அதேநேரத்தில், வேறொரு காரைக் கொண்டு ஜம்ப் ஸ்டார்ட் செய்த பின்னர் அந்த காரை மீண்டும் உடனே அணைத்து விடக் கூடாது. வற்றிய நிலையில் இருக்கும் பேட்டரியை சார்ஜ் செய்ய சில நிமிடங்கள் காரை இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

காரை ஜம்ப் ஸ்டார்ட் செய்வது எப்படி?.. இந்த நிலைமை வராமல் இருக்க என்ன செய்யலாம்?.. இதோ இரண்டுக்குமான பதில்!!

பழைய பேட்டரியை எப்போது மாற்றலாம்?

இன்றைய தேதி நிலவரப்படி அதிகபட்சமாக கார்களின் பேட்டரிகள் 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையிலான ஆயுட்காலத்துடன் விற்பனைக்கு வருகின்றன. முறையாக பராமரிப்பதைப் பொருத்து இவற்றின் ஆயுட்காலம் நீடித்துக் காணப்படுகின்றது.

காரை ஜம்ப் ஸ்டார்ட் செய்வது எப்படி?.. இந்த நிலைமை வராமல் இருக்க என்ன செய்யலாம்?.. இதோ இரண்டுக்குமான பதில்!!

இந்த இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் பிரச்னையை இந்த பேட்டரிகள் வழங்கும் என்றால் அவற்றை உடனடியாக மாற்றுவது நல்லது. இல்லையெனில் அவை நம்மை நடு ரோட்டில் காலை வாரிவிடும். மேலும், தேவையற்ற சிக்கலிலும் நம்மை சிக்க வைத்துவிடும். ஆகையால், பேட்டரி விஷயத்தில் அதிக கவனத்துடன் செயல்படுவது சிறந்தது.

Article Published On: Thursday, February 17, 2022, 16:08 [IST]
English summary
Here is some tip to how to jumpstart your car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+