உங்கள் காரை வெப்பத்தில் இருந்து காப்பாற்றுவதற்கான வழிகள் என்ன? இந்த டிப்ஸை மெக்கானிக்குகள்கூட சொல்ல மாட்டாங்க!

உங்கள் காரை வெப்பத்தில் இருந்து எந்தெந்த வழிகளில் எல்லாம் காப்பாற்றலாம் என்பதற்கான டிப்ஸ்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

உங்கள் காரை வெப்பத்தில் இருந்து காப்பாற்றுவதற்கான வழிகள் என்ன? இந்த டிப்ஸை மெக்கானிக்குகள்கூட சொல்ல மாட்டாங்க!

கடந்த காலங்களில் இருந்ததைக் காட்டிலும் சமீப காலமாக கோடை வெயில் அதிகம் உஷ்னமானதாகக் காட்சியளிக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் வாகனங்கள் பற்றி சொல்லவா வேண்டும். கொஞ்சம் நேரம் வெளிப்புறத்தில் நிறுத்துவிட்டு மீண்டும் காருக்குள் புகும்போது மைக்ரோஓவனுக்கு உள்ளே நுழைவதைப் போல் இருக்கும்.

உங்கள் காரை வெப்பத்தில் இருந்து காப்பாற்றுவதற்கான வழிகள் என்ன? இந்த டிப்ஸை மெக்கானிக்குகள்கூட சொல்ல மாட்டாங்க!

இந்த மாதிரியான சூழலில் கார்களில் பயணிப்பது என்பது இயலாத ஒன்று. எனவேதான் இந்த மாதிரியான நேரங்களில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. குறிப்பாக, காரை அதிகளவில் உஷ்னமாவதை நாமே சில முயற்சிகளின் வாயிலாக தடுக்க முடியும். இதை எப்படி செய்வது என்று கேட்கின்றீர்களா?, இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

உங்கள் காரை வெப்பத்தில் இருந்து காப்பாற்றுவதற்கான வழிகள் என்ன? இந்த டிப்ஸை மெக்கானிக்குகள்கூட சொல்ல மாட்டாங்க!

நிழலில் நிறுத்தவும்:

வாகனங்களை நிழலான பகுதிகளில் நிறுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளவும். இது உங்கள் காரின் உட்புறத்தை கூலாக வைத்துக் கொள்ள உதவும். முறையான பார்க்கிங் அல்லது மரத்தடியை பார்க் செய்ய பயன்படுத்தவும். இது உங்கள் வாகனத்தை உஷ்னத்தில் இருந்து மட்டுமின்றி பொலிவிழப்பில் இருந்தும் பாதுகாக்கும்.

உங்கள் காரை வெப்பத்தில் இருந்து காப்பாற்றுவதற்கான வழிகள் என்ன? இந்த டிப்ஸை மெக்கானிக்குகள்கூட சொல்ல மாட்டாங்க!

டின்ட் ஜன்னல்கள்:

டின்ட் ஜன்னல்களை பயன்படுத்துவதன் வாயிலாகவும் சூரிய ஒளியில் இருந்து ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்முடைய காரை பாதுகாத்துக்கொள்ள முடியும். குறிப்பாக காரின் கேபினை கணிசமான அளவில் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். மேலும், யுவி கதிர் பாதிப்பில் இருந்தும் இது பாதுகாக்கும். ஆனால், இந்தியாவில் அடர் டின்ட் கண்ணாடிகளுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

உங்கள் காரை வெப்பத்தில் இருந்து காப்பாற்றுவதற்கான வழிகள் என்ன? இந்த டிப்ஸை மெக்கானிக்குகள்கூட சொல்ல மாட்டாங்க!

லேசாக ஜன்னல்களை திறந்து வையுங்கள்:

உங்கள் வாகனம் பாதுகாப்பான இடத்தில் இருக்கின்றது என்றால், அவற்றின் ஜன்னல்களை மிக லேசாக திறந்து வைப்பது நல்லது. இதன் வாயிலாக காரின் கேபினுக்குள் காற்றோட்டத்தை உறுதி செய்ய முடியும். மேலும், இது உஷ்னமான சூழலை வெளியேற்றி காரை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவும்.

உங்கள் காரை வெப்பத்தில் இருந்து காப்பாற்றுவதற்கான வழிகள் என்ன? இந்த டிப்ஸை மெக்கானிக்குகள்கூட சொல்ல மாட்டாங்க!

ஃப்ளூர் ஏர் வெண்டுகளை ஆன் செய்து வைக்கவும்:

பெரும்பாலான கார் மாடல்களில் ஃப்ளூர் டூர் வெண்டுகள் வழங்கப்படுகின்றது. இது நேரடியாக காருக்குள் காற்றோட்டத்தை உறுதிப்படுத்த உதவும். காரின் உட்பகுதியை குளிர்விப்பதில் இவை முக்கிய பங்குவகிக்கின்றன. காருக்குள் நுழைந்த உடன் இதை செய்வதன் வாயிலாக குளிர்ச்சியான மற்றும் வெளிப்புற காற்றோட்டத்தை நம்மால் காருக்குள் பெற்றுக் கொள்ள முடியும்.

உங்கள் காரை வெப்பத்தில் இருந்து காப்பாற்றுவதற்கான வழிகள் என்ன? இந்த டிப்ஸை மெக்கானிக்குகள்கூட சொல்ல மாட்டாங்க!

தூய்மையான காற்று:

ஏசியை எடுத்த உடன் கூலிங் மோடில் வைத்து இயக்காமல், குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு வெறும் காற்றோட்டத்தை வழங்கும் மோடில் வைக்க வேண்டும். இதன் வாயிலாகவும் காருக்குள் வெப்பத்தை வெளியேற்ற முடியும். அதேநேரத்தில், ஏசியின் ரீ-சர்குலேசனை பயன்படுத்த வேண்டாம். ஆனால், உங்கள் காரை கூலாக்கும் பிற முயற்சிகளைக் கையாளலாம்.

உங்கள் காரை வெப்பத்தில் இருந்து காப்பாற்றுவதற்கான வழிகள் என்ன? இந்த டிப்ஸை மெக்கானிக்குகள்கூட சொல்ல மாட்டாங்க!

டவல்களை பயன்படுத்தவும்:

பெரும்பாலான கார்களில் கருப்பு நிற இருக்கைகளே வழங்கப்பட்டிருக்கும். இவை எளிதில் வெப்பத்தை கடத்தக் கூடியவை ஆகும். இந்த மாதிரியான இருக்கைகளை ஓர் துண்டு (டவல்) கொண்டு போர்த்திவிடுவது நல்லது. காரின் இருக்கையை மட்டுமின்றி டேஷ்போர்டு பகுதியையும் டவல்களால் மூடுவதனால் அவை வெப்பமாதலை தவிர்க்க முடியும். இதன் வாயிலாகவும் கார்களை சற்று கூலாக வைத்துக் கொள்ள முடியும்.

உங்கள் காரை வெப்பத்தில் இருந்து காப்பாற்றுவதற்கான வழிகள் என்ன? இந்த டிப்ஸை மெக்கானிக்குகள்கூட சொல்ல மாட்டாங்க!

எஞ்ஜினின் கூலண்ட் ஆயிலை சரிபார்க்கவும்:

காரில் இருந்து திடீரென அதிகளவில் உஷ்னம் வெளியாகின்றது எனில் கூலண்ட் ஆயிலில் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். அதேவேலையில் அவற்றின் அளவும் குறைந்திருக்கலாம். ஆகையால், கூலண்டை மீண்டும் நிரப்புவது நல்லது. குறிப்பாக, கூலண்ட் குறைவதனாலேயே பல நேரங்களில் கார்களில் இருந்து அதிகளவில் வெப்பம் வெளியேறுகின்றது. அதேநேரத்தில், எஞ்ஜின் அதிகம் உஷ்னமாக இருக்கும் கூலண்டை காரில் நிரப்ப வேண்டாம். முழுமையாக வாகனம் குளிர்ந்த பின்னர் அதை நிரப்பவும்.

உங்கள் காரை வெப்பத்தில் இருந்து காப்பாற்றுவதற்கான வழிகள் என்ன? இந்த டிப்ஸை மெக்கானிக்குகள்கூட சொல்ல மாட்டாங்க!

ரேடியேட்டர் ஃப்ளஷ்ஷை ஒரு முறை செய்துவிடவும்:

ரேடியேட்டரில் கூலண்ட் தீர்ந்த பின்னர் மெக்கானிக் உதவியுடன் அதை முதலில் க்ளீன் செய்ய வேண்டும். குறிப்பாக, ஃப்ளஷ் ஃப்யூட் வாயிலாக அதை சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு பின்னரே புதிய கூலண்டை சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் வாயிலாக பழைய கசடுகளை நீக்கி 100 சதவீத கூலண்ட் பலனை பெற்றுக் கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 18, 2022, 8:30 [IST]
English summary
Here is some tips how to keep your car from overheating
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+