கார் இன்சூரன்ஸுக்கு ஆகும் செலவை குறைக்க இவ்ளோ வழிகளிருக்கா! முன்னாடியே தெரிஞ்சிருந்தா செலவ குறச்சியிருக்கலாம்!

கார் இன்சூரன்ஸுக்கு அதிகம் செலவை குறைக்க உள்ள வழிகளையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

கார் இன்சூரன்ஸுக்கு ஆகும் செலவை குறைக்க இவ்ளோ வழிகள் இருக்குதா!! முன்னாடியே தெரிஞ்சிருந்தா பணத்த மிச்சம் பண்ணியிருக்கலாமே!

கார் இன்சூரன்ஸ் செய்வதை பலர் தண்ட செலவாக கருதுகின்றனர். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் பலனை யாரும் உணர்வதில்லை. குறிப்பாக, இந்த காப்பீட்டு திட்டங்கள் நம்மால் ஏற்படும் பெரும் இழப்புகளை ஈடுகட்ட உதவுகின்றன. சில நேரங்களில் நம்மால் ஈடுகட்ட முடியாத வகையிலான பெரும் இழப்புகள்கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற நேரங்களில் உற்ற நண்பனாக இந்த காப்பீட்டு திட்டங்களே நமக்கு உதவும்.

கார் இன்சூரன்ஸுக்கு ஆகும் செலவை குறைக்க இவ்ளோ வழிகள் இருக்குதா!! முன்னாடியே தெரிஞ்சிருந்தா பணத்த மிச்சம் பண்ணியிருக்கலாமே!

இந்த மாதிரியான காப்பீட்டு திட்டங்களை வாகனங்களுக்கு போடாமல் தவிர்ப்பது தேவையில்லாத சிக்கலை நமக்கு நாமே உருவாக்கிக் கொள்வதற்கான செயல் ஆகும். என்னதான் இருந்தாலும், இந்த அளவு அதிக தொகையை காப்பீட்டு திட்டத்திற்கு செலவு செய்ய வேண்டுமா என ஒரு சிலர் யோசிப்பதுண்டு. அத்தகையோருக்கு உதவும் வகையிலேயே காப்பீட்டிற்கு ஆகும் செலவை குறைப்பது எப்படி என்கிற தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

கார் இன்சூரன்ஸுக்கு ஆகும் செலவை குறைக்க இவ்ளோ வழிகள் இருக்குதா!! முன்னாடியே தெரிஞ்சிருந்தா பணத்த மிச்சம் பண்ணியிருக்கலாமே!

பழைய வாகனங்களுக்கு தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பெறலாம்:

உங்களுடைய வாகனம் சற்று பழையதாக இருந்தால் அதற்கு குறைந்தபட்சம் மூன்றாம் நபர் காப்பீட்டை பெறுவது நல்லது. ஆனால், இந்த காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக உங்களால் பிறருக்கு ஏற்படும் இழப்புகளை மட்டுமே ஈடுகட்டிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. பரந்த அளவு இழப்பீட்டை பெற வேண்டும் என்றால் முழு பிரீமியத்தைப் பெற வேண்டியிருக்கும்.

கார் இன்சூரன்ஸுக்கு ஆகும் செலவை குறைக்க இவ்ளோ வழிகள் இருக்குதா!! முன்னாடியே தெரிஞ்சிருந்தா பணத்த மிச்சம் பண்ணியிருக்கலாமே!

ஆனால், விரிவான காப்பீடு என்பது பலமடங்கு அதிக பிரீமியம் தொகைக்கு வழி வகுக்கும். ஆகையால், தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸை உங்களது வாகனங்களுக்கு தேர்வு செய்வது நல்லது. ஆனால், உங்கள் வாகனம் மிக பழையதாக இருக்கும்பட்சத்திலேயே இந்த காப்பீட்டை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் என்பது கவனிக்கத்தகுந்தது.

கார் இன்சூரன்ஸுக்கு ஆகும் செலவை குறைக்க இவ்ளோ வழிகள் இருக்குதா!! முன்னாடியே தெரிஞ்சிருந்தா பணத்த மிச்சம் பண்ணியிருக்கலாமே!

ஆன்டி தெஃப்ட் டிவைஸ்களைக் காரில் பொருத்தலாம்:

ஓர் காருக்கான இன்சூரன்ஸ் பாலிசியானது, அந்த காருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் கொடுக்கும் பொறுப்புகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது. ஆகையால், நிறுவனங்கள் ஓர் காரின்மீது அதீத பொறுப்பை வைத்திருக்க வேண்டும் என்றால் அவை அதிக பிரீமியம் தொகையை அந்த வாகனத்திற்கு நிர்ணயிக்கும்.

கார் இன்சூரன்ஸுக்கு ஆகும் செலவை குறைக்க இவ்ளோ வழிகள் இருக்குதா!! முன்னாடியே தெரிஞ்சிருந்தா பணத்த மிச்சம் பண்ணியிருக்கலாமே!

இந்த மாதிரியான நேரங்களில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பொறுப்பை குறைக்க காரில் திருட்டை தவிர்க்கும் டிவைஸை பயன்படுத்தலாம். இதன் வாயிலாக கணிசமான அளவு பீரியம் தொகையை நம்மால் கட்டுக்குள் கொண்டு வர முடியும். திருட்டைத் தவிர்க்கும் விதமாக, கியர் லாக், ஸ்டியரிங் வீல் லாக் போன்ற சாதனங்களையும் பயன்படுத்தலாம்.

கார் இன்சூரன்ஸுக்கு ஆகும் செலவை குறைக்க இவ்ளோ வழிகள் இருக்குதா!! முன்னாடியே தெரிஞ்சிருந்தா பணத்த மிச்சம் பண்ணியிருக்கலாமே!

தேவையற்ற மாடிஃபிகேஷன்களை தவிர்க்கவும்:

பலர் தங்களின் காரை தனித்துவமானதாகவும், அழகானதாகவும் மாற்ற வேண்டும் என்பதற்காக மாடிஃபிகேஷனுக்கு உட்படுத்துகின்றனர். இந்த பொருட்களின் சேர்ப்பால் காரின் மதிப்பு அதிகரிக்கச் செய்கின்றது. இதன் விளைவாக பாலிசி பிரீமியத்தின் கட்டணமும் அதிகரிக்கின்றது. ஆகையால், தேவையற்ற அலங்காரப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. கார் இன்சூரன்ஸ் அதிகரிப்பதை விரும்பவில்லை என்றால் இந்த கூடுதல் அலங்காரப் பொருட்களை தவிர்ப்பது சிறந்தது.

கார் இன்சூரன்ஸுக்கு ஆகும் செலவை குறைக்க இவ்ளோ வழிகள் இருக்குதா!! முன்னாடியே தெரிஞ்சிருந்தா பணத்த மிச்சம் பண்ணியிருக்கலாமே!

கார் இன்சூரன்ஸ் பிரீமியங்களை ஒப்பிடுதல்:

இந்தியாவில் பன்முக வாகன காப்பீட்டு நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றும் தனித்துவமான ஆஃபர்களையும், சலுகைகளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றன. வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக சில நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்குகின்றன. ஆகையால், புதிதாக பாலிசி எடுக்கும்முன் பிற நிறுவனங்களுடன் ஒப்பீடு செய்து காப்பீட்டை பெறுவது நல்ல லாபத்தைப் பெற வழி வகுக்கும்.

கார் இன்சூரன்ஸுக்கு ஆகும் செலவை குறைக்க இவ்ளோ வழிகள் இருக்குதா!! முன்னாடியே தெரிஞ்சிருந்தா பணத்த மிச்சம் பண்ணியிருக்கலாமே!

க்ளைமின்போது கணிசமான பங்கினை நாமே செலுத்த ஒப்புக் கொள்ளுதல்:

க்ளைமிங்கின்போது ஒரு குறிப்பிட்ட பங்கை செலுத்த ஒப்புக் கொள்வதன் வாயிலாகவும் காப்பீட்டின் பிரீமியத்தைக் குறைத்துக் கொள்ள முடியும். ஏற்கனவே கூறியதுபோல் காப்பீட்டு நிறுவனங்கள் வாகனங்கள் மீது கொண்டிருக்கும் பொறுப்பை பொருத்து பிரீமியத்தை நிர்ணயிக்கின்றன. இந்த மாதிரியான சூழலில், பொறுப்பில் ஒரு பங்கை நாம் ஏற்க துணிவதன் வாயிலாக காப்பீட்டு கட்டணத்தைக் கணிசமாக குறைக்க முடியும்.

கார் இன்சூரன்ஸுக்கு ஆகும் செலவை குறைக்க இவ்ளோ வழிகள் இருக்குதா!! முன்னாடியே தெரிஞ்சிருந்தா பணத்த மிச்சம் பண்ணியிருக்கலாமே!

ஆட்-ஆன்களை தவிர்க்கலாம்:

காப்பீட்டு நிறுவனங்கள் சிறப்பு ஆட்-ஆன் திட்டங்களை வழங்குகின்றன. டயர் பாதுகாப்பு, பூஜ்ஜியம் தேய்மானம் பாதுகாப்பு, எஞ்ஜின் பாதுகாப்பு, கேரேஜ் கேஷ் போன்ற பல்வேறு திட்டங்களை வழங்குகின்றன. இவற்றை தவிர்ப்பதன் வாயிலாகவும் கணிசமான தொகையை மிச்சப்படுத்த முடியும்.

கார் இன்சூரன்ஸுக்கு ஆகும் செலவை குறைக்க இவ்ளோ வழிகள் இருக்குதா!! முன்னாடியே தெரிஞ்சிருந்தா பணத்த மிச்சம் பண்ணியிருக்கலாமே!

நோ க்ளைம் போனஸ் பாயிண்டுகளை தக்க வைத்துக் கொள்ளவும்:

புதிதாக காப்பீட்டு திட்டத்தைப் பெறும்போது காப்பீட்டு நிறுவனங்கள் சில சலுகைகளை வழங்குகின்றன. ஆனால், புதுப்பிக்கும்போது பெரியளவில் சலுகைகள் வழங்கப்படுவதில்லை. ஆனால், நோ க்ளைம் போனஸ் வாயிலாக பிரீமியத் தொகையைக் கணிசமாக குறைக்க முடியும். அதாவது, முன்பு எந்தவொரு க்ளைமையும் விபத்திற்காக முன் வைக்கவில்லை என்றால் உங்களுக்கென தனி பாயிண்டுகள் வழங்கப்படும். இதை நீண்ட நாட்களுக்கு சேர்த்து வைக்கும் பட்சத்தில் 20 முதல் 50 சதவீதம் வரை பிரீமியம் கட்டணத்தில் தள்ளுபடியை பெற முடியும். ஆகையால், சின்ன சின்ன விபத்துகளுக்கு எல்லாம் க்ளைமை விண்ணப்பிப்பதை தவிர்க்கவும்.

கார் இன்சூரன்ஸுக்கு ஆகும் செலவை குறைக்க இவ்ளோ வழிகள் இருக்குதா!! முன்னாடியே தெரிஞ்சிருந்தா பணத்த மிச்சம் பண்ணியிருக்கலாமே!

காரை ஓட்டும்போது மட்டும் காப்பீடு செலுத்தினால் போதும்:

வீட்டில் சொந்தமாக ஒன்றிற்கும் மேற்பட்ட வாகனங்கள் இருக்கின்றபோதிலும் ஒரு சிலர் பொது போக்குவரத்து அல்லது நிறுவனங்களின் வாகனங்களையே அதிகம் பயன்படுத்தும் சூழலில் இருக்கின்றனர். அந்தமாதிரியானோர் மிகவும் ரேராவாகே தங்களின் வாகனங்களை பயன்படுத்துகின்றனர். வெளியூர் செல்லுதல் மற்றும் பிற அவசர தேவைகளுக்காக மட்டுமே வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.

கார் இன்சூரன்ஸுக்கு ஆகும் செலவை குறைக்க இவ்ளோ வழிகள் இருக்குதா!! முன்னாடியே தெரிஞ்சிருந்தா பணத்த மிச்சம் பண்ணியிருக்கலாமே!

இந்தமாதிரியான பயன்பாட்டைக் கொண்டிருப்பவர்கள் பெரும் தொகையை ஒட்டுமொத்த வருடத்திற்கும் செலுத்துவது தண்ட செலவாக எண்ணுகின்றனர். இந்த மாதிரியானோர்க்கு உதவும் விதமாக காரை பயன்படுத்தும்போது மட்டும் காப்பீட்டைப் பெற்றுக் கொள்ளும் திட்டத்தை காப்பீட்டு நிறுவனங்கள் சில வழங்குகின்றன. இது பெருந்தொகையை தவிர்க்கவும், அபராதத்தையும் தவிர்க்கவும் உதவும்.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

More from DriveSpark

Article Published On: Friday, October 21, 2022, 8:30 [IST]
English summary
Here is some tips to cut car insurance premium
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+