அடேங்கப்பா இத்தனை கார்களா?.. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிக மிக அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியல்!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

அடேங்கப்பா இத்தனை கார்களா?.. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிக மிக அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியல்!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பாதுகாப்பான கார்களின் எண்ணிக்கைச் சற்றே உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் குளோபல் என்சிஏபி வெளியிட்ட தகவலின் அடிப்படையிலேயே இது தெரிய வந்திருக்கின்றது. அது, இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மேலும் நான்கு கார் மாடல்கள் ஐந்திற்கு நான்கு ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றிருப்பதாக தகவல் வெளியிட்டது.

அடேங்கப்பா இத்தனை கார்களா?.. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிக மிக அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியல்!

இந்த தகவல் இந்திய வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவின் குறைந்த விலை கார்கள் என்றழைக்கப்படும் ரெனால்ட் கைகர் (Renault Kiger), நிஸான் மேக்னைட் (Nissan Magnite), ஹோண்டா சிட்டி மற்றும் ஜாஸ் (Honda City and Jazz) ஆகிய கார் மாடல்களே ஐந்திற்கு நான்கு ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்திய வாகனங்கள் ஆகும்.

அடேங்கப்பா இத்தனை கார்களா?.. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிக மிக அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியல்!

தலா ஒரு ஸ்டாரை இழந்து அனைத்து கார் மாடல்களும் நான்கு ஸ்டார்களைப் பெற்றன. இதனால், இந்தியாவில் விற்கப்படும் அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியல் சற்றே நீண்டு காணப்படுகின்றது. மேலும், அந்த பட்டியலில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, புதிய டாப்10 பாதுகாப்பான கார்கள் எவை என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

அடேங்கப்பா இத்தனை கார்களா?.. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிக மிக அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியல்!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700):

இந்தியாவில் மிக அமோகமான விற்பனையைப் பெற்று வரும் கார் மாடலாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி ரக கார் இருக்கின்றது. இக்காருக்கு இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் குவிந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 11ம் தேதி அன்றே இந்த தகவல் வெளியாகியது. ஆகையால், தற்போது இன்னும் சில ஆயிரங்கள் முன் பதிவுகளை இக்கார் குவித்திருக்கும் என யூகிக்கப்படுகின்றது.

அடேங்கப்பா இத்தனை கார்களா?.. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிக மிக அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியல்!

இத்தகைய மிக அமோகமான வரவேற்பின் காரணத்தினால் இந்த காருக்கு காத்திருப்பு காலம் 6 மாதங்கள் வரை நீண்டுக் காணப்படுகின்றது. ஆறு மாதங்கள் மட்டுமில்லைங்க இந்த காருக்காக இன்னும் எத்தனை நாட்கள் வேண்டுமானால் காத்திருக்கலாம். ஏனெனில், இது ஓர் மிக அதிக பாதுகாப்பான கார் என்று குளோபல் என்சிஏபி சான்றளித்துள்ளது.

அடேங்கப்பா இத்தனை கார்களா?.. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிக மிக அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியல்!

குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் ஐந்து ஸ்டார்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் ஐந்திற்கு நான்கு ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையும் எக்ஸ்யூவி 700 பெற்றிருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக எக்ஸ்யூவி700 காட்சியளிக்கின்றது.

அடேங்கப்பா இத்தனை கார்களா?.. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிக மிக அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியல்!

டாடா பஞ்ச் (Tata Punch):

டாடா நிறுவனத்தின் இரண்டாம் அதிகம் விற்பனையாகும் காராக பஞ்ச் உள்ளது. விற்பனையில் மட்டுமில்லைங்க மற்றுமொரு விஷயத்திலும் இந்த கார் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. கிராஷ் டெஸ்டில் அதிக புள்ளிகளைப் பெற்று இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பாதுகாப்பான கார்களின் பட்டியலிலும் பஞ்ச் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

அடேங்கப்பா இத்தனை கார்களா?.. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிக மிக அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியல்!

பஞ்ச் ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் ரேட்டிங்கையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் ஐந்திற்கு நான்கு ஸ்டார்கள் ரேட்டிங்கையும் பெற்றிருக்கின்றது. டாடா பஞ்ச் அதிக பாதுகாப்பான கார் மட்டுமில்லைங்க, அது, இந்தியாவின் விலைக் குறைவான காரும்கூட. ரூ. 5.64 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

அடேங்கப்பா இத்தனை கார்களா?.. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிக மிக அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியல்!

மஹிந்திரா எக்ஸ்யூவி 300 (Mahindra XUV300):

ஐந்து நட்சத்திர பாதுகாப்பான கார் என்ற ரேட்டிங்கை பெற்ற மஹிந்திராவின் முதல் தயாரிப்பு எக்ஸ்யூவி300. பெரியவர்களுக்கான பாதுகாப்பிலேயே இத்தகைய அதிக ஸ்டார்களை மஹிந்திரா எக்ஸ்யூவி 300 பெற்றது. மேலும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் இந்த கார் ஐந்திற்கு நான்கு ஸ்டார்களைப் பெற்றிருக்கின்றது.

அடேங்கப்பா இத்தனை கார்களா?.. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிக மிக அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியல்!

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz):

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு பாதுகாப்பான வாகனமாக அல்ட்ராஸ் இருக்கின்றது. இது ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் காராகும். இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் ஐந்திற்கு 5 ஸ்டார்களையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் ஐந்திற்கு மூன்று ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையும் பெற்றிருக்கின்றது. சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் சரிவர செயல்பட தவறியதன் காரணத்தினால் இரு ஸ்டார்களை அது இழந்திருக்கின்றது.

அடேங்கப்பா இத்தனை கார்களா?.. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிக மிக அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியல்!

டாடா நெக்ஸான் (Tata Nexon):

டாடாவின் மற்றும் ஓர் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற காராக நெக்ஸான் காட்சியளிக்கின்றது. இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். பெரியவர்களுக்கான பாதுகாப்பில்தான் இந்த கார் 5 நட்சத்திரங்களைப் பெற்றிருக்கின்றது. சிறியவர்களுக்கான பாதுகாப்பில் இக்கார் வெறும் 3 ஸ்டார்களை மட்டுமே பெற்றுள்ளது.

அடேங்கப்பா இத்தனை கார்களா?.. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிக மிக அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியல்!

இந்த காரே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காராகும். கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் 1,08,577 யூனிட் வரை நெக்ஸான் எஸ்யூவி கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. இது 2020ம் ஆண்டைக் காட்டிலும் 122 சதவீத அதிக விற்பனையாகும். இத்தகைய அமோக விற்பனை வளர்ச்சியையே டாடா நெக்ஸான் இந்தியாவில் பெற்று வருகின்றது. மேலும், இந்த கார் நாட்டில் எலெக்ட்ரிக் கார் வெர்ஷனிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அடேங்கப்பா இத்தனை கார்களா?.. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிக மிக அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியல்!

மஹிந்திரா தார் (Mahindra Thar):

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா கார்களில் இதுவும் ஒன்று. இந்த காருக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பினால் ஒரு வருடம் வரை இக்காருக்காக காத்திருக்க வேண்டும் என்கிற சூழல் நாட்டில் நிலவுகின்றது. இதற்கு புதிய தலைமுறையாக வந்திருக்கும் தார் எஸ்யூவி பன்முக சிறப்பு வசதிகளைக் கொண்டிருப்பதே முக்கிய காரணமாக உள்ளது. மேலும், இப்புதிய தலைமுறை குடும்ப பயன்பாட்டு வசதிகளைக் கொண்ட காராகவும் வந்திருக்கின்றது.

அடேங்கப்பா இத்தனை கார்களா?.. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிக மிக அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியல்!

இதுபோன்று காரணங்களினாலேயே மிக அமோகமான வரவேற்பை தார் எஸ்யூவி தற்போது இந்திய சந்தையில் பெற்று வருகின்றது. இது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மட்டுமல்ல. இது நான்கு நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற காராகவும் காட்சியளிக்கின்றது. சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என பிரிவிலும் இந்த கார் நான்கு ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது.

அடேங்கப்பா இத்தனை கார்களா?.. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிக மிக அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியல்!

ஹோண்டா சிட்டி (நான்காம் தலைமுறை) Honda City (4th Gen)

ஹோண்டா நிறுவனத்தின் நான்காம் தலைமுறை சிட்டி காரையே குளோபல் என்சிஏபி அண்மையில் கிராஷ் டெஸ்டிற்கு உட்படுத்தியது. இந்த ஆய்வில் கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் ஒரு ஸ்டார்களை இழந்து நான்கு ஸ்டார்களையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பு குறித்து செய்யப்பட்ட ஆய்வில் அதிகபட்சமாக இரு ஸ்டார்களை இழந்து மூன்று ஸ்டார்களை மட்டுமே பெற்றது. இருப்பினும், இக்கார் பெற்றிருப்பது மிக சிறப்பான மதிப்புகளாகும். இதன் விளைவாக ஹோண்டா தற்போது இந்தியாவின் அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியலில் இணைந்திருக்கின்றது.

அடேங்கப்பா இத்தனை கார்களா?.. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிக மிக அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியல்!

டாடா டிகோர் இவி (Tata Tigor EV)

இந்தியாவில் தற்போது குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் மின்சார காராக டிகோர் இவி காட்சியளிக்கின்றது. இந்த கார் ரூ. 11.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதைவிட குறைவான விலையில் நாட்டில் வேறு எந்த நிறுவனம் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

அடேங்கப்பா இத்தனை கார்களா?.. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிக மிக அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியல்!

ஆகையால், நாட்டின் மிகவும் குறைவான விலைக் கொண்ட எலெக்ட்ரிக் காராக டிகோர் இவி காட்சியளிக்கின்றது. நாட்டின் மிக அதிக பாதுகாப்பான எலெக்ட்ரிக் காராகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த கார் குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் பெரியவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சிறியவர்களுக்கான பாதுகாப்பு என இரண்டிலும் நான்கு ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது.

அடேங்கப்பா இத்தனை கார்களா?.. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிக மிக அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியல்!

டாடா டிகோர் / டியோகோ (Tata Tigor / Tiago):

டாடாவின் மிக முக்கியமான தயாரிப்புகளாக டிகோர் மற்றும் டியாகோ காட்சியளிக்கின்றன. இவை இரண்டு மோதல் ஆய்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்களையேப் பெற்றிருக்கின்றன. எனவேதான் நம்முடைய இந்த பட்டியலில் இக்கார்கள் ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருக்கின்றன. இந்த கார்கள் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் நான்கு ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் மூன்று ஸ்டார்களையும் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

அடேங்கப்பா இத்தனை கார்களா?.. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிக மிக அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியல்!

ஹோண்டா ஜாஸ் (Honda Jazz)

ஹோண்டா சிட்டி நான்காம் தலைமுறை காரை மோதல் ஆய்விற்கு உட்படுத்தியபோதே இக்காரையும் குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்டிற்கு உட்படுத்தியது. அப்போது ஆச்சரியமளிக்கும் விதமாக சிட்டிக்கு இணையாக இக்கார் செயல்பட்டிருக்கின்றது. இதன் விளைவாக நான்கு ஸ்டார்கள் ரேட்டிங்கை பெரியவர்களுக்கான பாதுகாப்பிலும், மூன்று ஸ்டார்களை சிறுவர்களுக்கான பாதுகாப்பிலும் இக்கார் பெற்றது. இதன் விளைவாக இந்த காரும் தற்போது புதியதாக இந்தியாவின் அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியலில் இணைந்திருக்கின்றது.

அடேங்கப்பா இத்தனை கார்களா?.. இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிக மிக அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியல்!

மேலே பார்த்தவை மட்டுமில்லைங்க ஃபோக்ஸவேகன் போலோ, ரெனால்ட் ட்ரைபர், நிஸான் மேக்னைட், டொயோட்டா இடியோஸ், மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா, டாடா ஜெஸ்ட் உள்ளிட்ட கார்களும் இந்தியாவின் பாதுகாப்பான கார்களாக காட்சியளிக்கின்றன.

Article Published On: Wednesday, February 16, 2022, 18:03 [IST]
English summary
Here is the list of india s top 10 safest cars
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+