இந்த அம்சங்களை தராமலே இருந்திருக்கலாம்... கார்களில் வழங்கப்படும் இந்த அம்சங்களால் வெறுப்புதான் அதிகமாம்!
அடச்சே... இந்த அம்சங்களை தராமலே இருந்திருக்கலாம் என நினைக்கும் அளவிற்கு வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் பற்றிய விபரத்தையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பயணங்களை அதிக சொகுசானதாகவும், சுவாரஷ்யமானதாகவும் மாற்ற வேண்டும் என்பதற்காக நவீன கால கார் மாடல்களில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை ஆச்சரியமளிக்கும் வகையில் பலனை வழங்கிக் கொண்டிருக்கின்றன. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் வாகன உலகின் வரபிரசாதமாக சில தொழில்நுட்ப அம்சங்கள் காட்சியளிக்கின்றன.

அதேவேலையில், "ஏன்தான் இப்படி ஒரு அம்சத்தை கொடுத்தாங்களோ" என நினைக்க வைக்கும் வகையிலும் குறிப்பிட்ட சில அம்சங்கள் கார்களில் வழங்கப்படுகின்றன. அந்த மாதிரியான அம்சங்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். அதாவது, மாடர்ன் கால கார்களில் வழங்கப்படும் எரிச்சலூட்டும் 10 அம்சங்கள் பற்றிய விபரத்தையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

லோவ் ரெசல்யூஷன் கேமிரா (Low-resolution camera)
பெரும்பாலான வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் மலிவு விலை கார் மாடல்களைகூட அதிக சிறப்பு வசதிகள் கொண்ட வாகனமாக விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், மலிவு விலைகளில் வழங்கப்படும் குறைந்தபட்ச அம்சங்களில் ஒன்றாக ரிவர்ஸ் கேமிரா இருக்கின்றது. பட்ஜெட் விலை காரணமாக சற்று மலிவான கேமிராக்களையே வாகன உற்பத்தியாளர்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றன. இவை தெளிவான பார்வையை வழங்காது. தெளிவாகக் கூற வேண்டுமானால் சற்று ப்ளர்ரான காட்சியையே அது வழங்கும். ஆகையால், இந்த அம்சம் ஓர் எரிச்சலளிக்கும் அம்சமாகக் காட்சியளிக்கின்றது.

பெரிய அளவு கீ-ஃபாப் (Over-Sized keyfobs)
ரூ. 8 லட்சத்திற்கும் அதிகமான விலைக் கொண்ட கார் மாடல்களில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் சாவியில்லாமல் நுழையும் வசதியை வழங்குகின்றன. இதற்கு உறுதுணையாக இருப்பதே இந்த கீ-ஃபாப். இந்த அம்சத்தை சில வாகன உற்பத்தியாளர்கள் கைகளுக்கு அடக்கமாக இல்லாமல் பெரிய அளவில் வழங்கிவிடுகின்றனர். இது பயன்படுத்துவோருக்கு எரிச்சலூட்டும் வகையில் இருக்கின்றன. தற்போதைய அன்றாட வாழ்க்கையில் செல்போன் மிக முக்கியமான ஒன்றாக மாறியிருப்பதால் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இத்தகையோர், பெரிய அளவு கீ-ஃபாபால் கூடுதல் எரிச்சலடைவதாக கூறப்படுகின்றது.

வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம்ஸ் (Voice Controls Systems)
வாய்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம் மிக முக்கியமான அம்சமாக இருக்கலாம். இதனால் அதிக பயன்கள் மற்றும் வசதியை பெற முடியும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது மிகுந்த ஆபத்தானது. சாதாரணமாக நம்முடைய செல்போன்களில் இருக்கும் குரல் கட்டளை வசதியை பயன்படுத்தி பார்த்தவர்கள் இதில் என்ன மாதிரியான சிரமமங்கள் உள்ளன என்பதை உணர்வார்கள்.

பெரும்பாலான குரல் கட்டளை அம்சங்கள் மிகவும் ஸ்லோவாக இயங்கக் கூடியவையாக இருக்கின்றன. இதற்கு பதிலாக பொத்தான்களை அழுத்தினால் உடனடி தீர்வை நம்மால் எட்ட முடியும். அதேவேலையில், சில நேரங்களில் குரல் கட்டளை வசதியில் ஒன்றிற்கு இரண்டு முறை நாம் கட்டளையிட வேண்டியிருக்கும். இந்த சூழல் சாலையின் மீதான நம்முடைய கவனத்தைச் சிதற செய்யும். இதனால்தான் வாய்ஸ் கமண்ட் அம்சம் ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

ஸ்பேர் வீல் (Space saver spare wheel)
ஒரு சில வாகன ஓட்டிகள் ஸ்பேர் வீலை தேவையற்ற ஒன்றாக கருதுகின்றனர். அவை தேவையில்லாமல் அதிக இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதாக எண்ணுகின்றனர். இதன் காரணத்தினாலேயே ஸ்பேர் வீலை தேவையில்லாத ஒன்றாக சிலர் நினைக்கின்றனர். இதை உணர்ந்த சில வாகன உற்பத்தியாளர்கள் ஸ்பேர் வீலுக்கு பதிலாக பஞ்சர் கிட்டை வழங்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த நடவடிக்கையை டாடா மோட்டார்ஸ் தற்போது கையில் எடுத்திருக்கின்றது. இவை ஸ்பேர் விலைக் காட்டிலும் குறைவான இடத்தைப் பிடிக்கின்றன.

பிளாங்க் ஸ்விட்சுகள் (Blank switches)
வாடிக்கையாளர்கள் தேவை எனில் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக வாகன உற்பத்தியாளர்கள் சிலர் வாகனங்களின் டேஷ்போர்டு பகுதியில் சில டம்மி (கருப்பு நிற) ஸ்விட்சுகளை வழங்குகின்றனர். இது கார் முகப்பு பகுதியின் அழகை சீர் குலைப்பதாக எண்ணுகின்றனர். ஆகையால், கார்களில் வழங்கப்படும் தேவையில்லாத ஒன்றாக இது பார்க்கப்படுகின்றது.

டெட் பெடல் (No Dead padel)
முந்தைய கால வாகனங்களில் தொடர்ந்து க்ளட்சை அழுத்திக் கொண்டே இருக்கும் காலுக்கு ஓய்வளிக்கும் விதமாக டெட் பெடல் வசதி வழங்கப்பட்டது. ஆனால், இன்றைய கால கார்களில் இது வழங்கப்படுவதில்லை. அழகிற்காக சிலர் இதை பொருட்படுத்துவதில்லை. அதேவேலையில், தொடர்ச்சியாக காரை பயன்படுத்துவர்கள் சிலர் இந்த அம்சம் இருந்தால் நன்றாக இருக்கும் எண்ண தொடங்கியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








