சுடு தண்ணிய வச்சு நம்ம காருல இவ்ளோ பெரிய விஷயத்த செய்ய முடியுமா? பணத்தை மிச்சப்படுத்த இந்த ட்ரிக் அவசியங்க!
சுடு நீரை வைத்து நம் காரில் உள்ள சொட்டைகளை மிக சுலபமாக போக்க முடியும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சுடு தண்ணீரை குடிக்க, குளிக்க மட்டுமே பயன்படுத்த முடியும் என எண்ணிக் கொண்டிருப்பவரா நீங்க?, தயவு செய்து இந்த எண்ணத்த மாத்திடுங்க. சுடு தண்ணியை வச்சு உங்க காருல பல சூப்பர் காரியங்களை செய்து முடிக்க முடியும். அவை என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

வாகன உரிமையாளர்கள் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்றாக சொட்டை இருக்கின்றது. பார்த்து பார்த்து பராமரிப்பவர்களின் வாகனங்கள்கூட சில நேரங்களில் சொட்டைகளில் இருந்து தப்புவதில்லை. பயணத்தின்போது பிற வாகனங்களினால் தூக்கி வீசப்படும் சிறிய கல் ஒன்றே வாகனத்தில் சொட்டையை ஏற்படுத்த போதுமானதாக இருக்கின்றது.

மேலும், பம்பர்-டூ-பம்பர் டிராஃபிக்கில் பயணிக்கும்போது வாகனங்கள் மிக சுலபமாக சொட்டையைச் சந்திக்கின்றன. ஆகையால், எப்போது வாகனத்தில் சொட்டை ஏற்படும், எப்படி ஏற்படும் என்பது யாரும் அறியாத ஒன்றாக இருக்கின்றது. இத்தகைய ஓர் சொட்டையையே சுடு தண்ணீரை வைத்து சரி செய்து கொள்ள முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா, நம்பிதான் ஆக வேண்டும்.

வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் ஏற்கனவே சிலர் சுடு தண்ணீரைக் கொண்டு தங்களின் வாகனத்தில் ஏற்பட்ட சொட்டைகளைச் சரி செய்திருக்கின்றனர். பொதுவாக இந்த செயலை செய்வதற்கு வாகன பழுதுபார்க்கும் நிலையங்கள் அதிகளவில் பணத்தைக் கட்டணமாக கேட்கும். அவர்கள் வைத்திருக்கும் உபகரணங்கள் மிக விலையுயரியவை என்பதாலும், வேலை மிக துள்ளியமாக முடித்துக் கொடுக்கப்படும் என்பதாலும் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படும்.

ஆகையால், சிலர் விபத்து ஏற்பட்டபோது அடைந்ததைக் காட்டிலும் மிக வேதனையை இதற்கு ஆகும் செலவின்போது அடைகின்றனர். இதனையே ஒரு பைசா செலவில்லாமல் செய்து முடிக்க சுடு நீர் உதவுகின்றது. சுடு தண்ணீரை காரை அசிங்கமாக காட்டிக் கொண்டிருக்கும் பள்ளத்தின்மீது ஊற்றுவதனால் அந்த பகுதி மீளமைப்பிற்கு தயாராகிவிடும்.

இந்த நேரத்தில் கழிவறையின் அடைப்பை எடுக்க பயன்படும் ப்ளங்களரைக் கொண்டு சொட்டையின் மையப்பகுதியை பிடித்து இழுக்க வேண்டும். அவ்வாறு இழுக்கும்பட்சத்தில் மிகவும் இலகுவாக அந்த பகுதி பழைய நிலைமைக்கு வரும். அதாவது, சொட்டை போயி முன்பிருந்ததைப் போல் சீரான நிலைக்கு அது வரும்.

இதற்கு முன்னதாக நன்கு கொதிக்க வைக்கப்பட்ட நீரை அந்த சொட்டை விழுந்த பகுதியில் உச்ச அளவில் சூடேறும் வரையில் ஊற்ற வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். இவ்வாறு செய்வதன் வாயிலாகவே அந்த சொட்டை விழுந்த பகுதி மீளமைப்பிற்கு தயாராகும். இதை நம்முடைய வீட்டிலேயே வைத்து செய்துவிட முடியும். இதற்கு பெரிய அளவில் பொருட் செலவுகள் ஏற்படாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலும், பெரியளவில் சிரமமும் இதற்கு அடைய தேவையில்லை. ஆகையால், ரிப்பேர் ஷாப்புக்கு சென்று பல மணி நேரம் செலவிட்டு, பல ஆயிரங்களையும் இழந்து வேதனைக்கு ஆளாவதற்கு பதிலாக மிக சுலபமான மேலே பார்த்த வழிகளைக் கொண்டு சொட்டையை நீக்கலாம். அதேவேலையில், சுடுநீர் கார் சொட்டை பகுதியில் ஊற்றப்படுவதால் அந்த பக்கத்தைக் கையாளும்போது சற்று அதிக கவனம் தேவை.

அஜாக்கிரதையாத செயல்பட்டால் கையில் சுடுநீரால் ஏற்படும் கொப்பளங்கள் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க கைகளில் கையுறையை அணிவது சிறந்தது. இது சுடுநீரின் தாக்கத்தில் இருந்து கைகளை பாதுகாக்க உதவும். அதேநேரத்தில்,அதிக கிரிப்பான பிடிமானத்தை வழங்கவும் உதவும்.


Click it and Unblock the Notifications