ஜனவரி தொடங்கி மார்ச் வரையில் அதிகம் விற்பனையாகிய கார் மாடல்கள் எது தெரியுமா? டாப் 5 கார்களின் பட்டியல்!

2021-22 நிதியாண்டின் 4ஆம் காலாண்டில் அதிகம் விற்பனையாகி கார் மாடல்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

ஜனவரி தொடங்கி மார்ச் வரையிலான மாதங்களில் அதிகம் விற்பனையாகிய கார் மாடல்கள் எது தெரியுமா? டாப் 5 கார்களின் பட்டியல்!

இந்திய வாகன உலகம் கடந்த சில மாதங்களாகவே புதிய வாகன விற்பனையில் ஏற்றம்-இறக்கம் என இரண்டையும் ஒருசேர சந்தித்து வருகின்றன. டட்சன் போன்ற வாகன உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்த அளவு வாகன விற்பனை இல்லாத காரணத்தினால் தற்போது சந்தையை விட்டு வெளியேறும் அவலமான நிலைகூட நடப்பு நிதியாண்டில் அரங்கேறியிருக்கின்றது.

ஜனவரி தொடங்கி மார்ச் வரையிலான மாதங்களில் அதிகம் விற்பனையாகிய கார் மாடல்கள் எது தெரியுமா? டாப் 5 கார்களின் பட்டியல்!

அதேவேலையில், குறிப்பிட்ட சில நிறுவனங்கள் நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. அதாவது, 2021-22 நிதியாண்டு சில வாகன உற்பத்தியாளர்களுக்கு நல்ல வளர்ச்சியை வழங்கிய ஆண்டாக முடிவுற்றிருக்கின்றது. குறிப்பாக, சில கார் மாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கின்றது.

ஜனவரி தொடங்கி மார்ச் வரையிலான மாதங்களில் அதிகம் விற்பனையாகிய கார் மாடல்கள் எது தெரியுமா? டாப் 5 கார்களின் பட்டியல்!

அந்தவகையில், 2021-2022 நிதியாண்டின் இறுதியில் (ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை) மிக சிறப்பான விற்பனையைப் பெற்ற டாப் ஐந்து கார்கள் எது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஜனவரி தொடங்கி மார்ச் வரையிலான மாதங்களில் அதிகம் விற்பனையாகிய கார் மாடல்கள் எது தெரியுமா? டாப் 5 கார்களின் பட்டியல்!

மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R)

மாருதி சுஸுகி இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் உயரமான தோற்றம் கொண்ட ஹேட்ச்பேக் ரக காராகும். இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. குறிப்பாக, சிஎன்ஜி வெர்ஷனில் விற்பனைக்குக் கிடைக்கும் வேகன்ஆர் கார் மாடலுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி தொடங்கி மார்ச் வரையிலான மாதங்களில் அதிகம் விற்பனையாகிய கார் மாடல்கள் எது தெரியுமா? டாப் 5 கார்களின் பட்டியல்!

இந்த நிலையிலேயே 2021-22 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதத்தில் வேகன்ஆர் நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 59,637 யூனிட்டுகள் வரை அது விற்பனையாகியிருக்கின்றது. கடந்த நிதியாண்டின் இறுதியைக் காட்டிலும் இது 9 சதவீதம் அதிக விற்பனை எண்ணிக்கை கூறப்படுகின்றது.

ஜனவரி தொடங்கி மார்ச் வரையிலான மாதங்களில் அதிகம் விற்பனையாகிய கார் மாடல்கள் எது தெரியுமா? டாப் 5 கார்களின் பட்டியல்!

மாருதி சுஸுகி நிறுவனம் மிக சமீபத்திலேயே 2022 வேகன்ஆர் கார் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ரூ. 5,47,500 என்ற விலையில் அது விற்பனைக்கு வந்துள்ளது. இது ஆரம்ப நிலை தேர்வின் வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. ஆன்-ரோடில் இன்னும் சில ஆயிரங்கள் சேர்க்கப்பட்டு அதிக விலையில் அது விற்கப்படும்.

ஜனவரி தொடங்கி மார்ச் வரையிலான மாதங்களில் அதிகம் விற்பனையாகிய கார் மாடல்கள் எது தெரியுமா? டாப் 5 கார்களின் பட்டியல்!

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift)

மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காருக்கு இந்தியர்கள் மத்தியில் மவுசு குறைந்ததாக தெரியவில்லை. சில நேரங்களில் வீழ்ச்சியையும், சில நேரங்களில் வளர்ச்சியையும் பெறும் கார் மாடலாக இது இருக்கின்றது. அந்தவகையில், 12 சதவீத விற்பனை வீழ்ச்சியை ஸ்விஃப்ட் கடந்த நிதியாண்டின் நான்காம் பாதியில் 12 சதவீதம் சரிவைச் சந்தித்தது.

ஜனவரி தொடங்கி மார்ச் வரையிலான மாதங்களில் அதிகம் விற்பனையாகிய கார் மாடல்கள் எது தெரியுமா? டாப் 5 கார்களின் பட்டியல்!

இந்தளவு கடுமையான விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்ற போதிலும் ஸ்விஃப்ட் இப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. 51,933 யூனிட் வரை ஸ்விஃப்ட் கார்கள் 2022 ஜனவரி தொடங்கி மார்ச் வரை விற்பனையாகியிருக்கின்றது. கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் 59,158 யூனிட் வரை ஸ்விஃப்ட் விற்பனையாகியது குறிப்பிடத்தகுந்தது.

ஜனவரி தொடங்கி மார்ச் வரையிலான மாதங்களில் அதிகம் விற்பனையாகிய கார் மாடல்கள் எது தெரியுமா? டாப் 5 கார்களின் பட்டியல்!

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire)

2021-22 நிதியாண்டின் நான்காம் கால் பகுதியில் அதிகம் விற்பனையாகிய மூன்றாவது கார் மாடலாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் டிசையர் மாடலே இருக்கின்றது. இந்த காம்பேக்ட் செடான் ரக கார் மாடலுக்கு 33 சதவீதம் வரை விற்பனை வளர்ச்சி கிடைத்துள்ளது. 51,028 யூனிட்டுகள் வரை விற்பனையாகியுள்ளன. இந்த மிக சிறப்பான விற்பனை வளர்ச்சியின் காரணத்தினாலேயே டிசையர் இப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது.

ஜனவரி தொடங்கி மார்ச் வரையிலான மாதங்களில் அதிகம் விற்பனையாகிய கார் மாடல்கள் எது தெரியுமா? டாப் 5 கார்களின் பட்டியல்!

டாடா நெக்ஸான் (Tata Nexon)

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கும் அதிக பாதுகாப்பு திறன்மிக்க கார் மாடல்களில் நெக்ஸான் எஸ்யூவி-யும் ஒன்று. இந்த காரை டாடா நிறுவனம் மின்சார வெர்ஷனிலும் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்த மின்சார காரே நாட்டின் இரண்டாவது குறைந்த விலை எலெக்ட்ரிக் காராகும்.

ஜனவரி தொடங்கி மார்ச் வரையிலான மாதங்களில் அதிகம் விற்பனையாகிய கார் மாடல்கள் எது தெரியுமா? டாப் 5 கார்களின் பட்டியல்!

மக்கள் மத்தியில் நெக்ஸானின் அனைத்து வெர்ஷன்களுக்கும் தற்போது நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் 40,390 யூனிட்டுகள் 2021-22 நிதியாண்டின் இறுதி காலாண்டில் விற்பனையாகியிருக்கின்றது. இதே கார் சென்ற நிதியாண்டின் கடைசி காலாண்டில் 24,837 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகின. இதைவைத்து பார்க்கையில் நெக்ஸானுக்கு தொடர்ச்சியாக விற்பனை வளர்ச்சியடைந்து வருவது தெளிவாக தெரிகின்றது.

ஜனவரி தொடங்கி மார்ச் வரையிலான மாதங்களில் அதிகம் விற்பனையாகிய கார் மாடல்கள் எது தெரியுமா? டாப் 5 கார்களின் பட்டியல்!

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno)

மாருதி சுஸுகி நிறுவனம் பலேனோ காரின் புதிய வெர்ஷனை மிக சமீபத்திலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் மிக சிறப்பாக விற்பனையாகும் பிரீமியம் தர ஹேட்ச்பேக்குகளில் இதுவும் ஒன்று. இக்கார் 2021-22 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் வரையில் 33,881 யூனிட் வரை விற்பனையாகியிருக்கின்றது. ஆகையால், இந்த பட்டியலில் ஐந்தாவது அதிகம் விற்பனையாகும் காராக அது மாறியிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 26, 2022, 14:06 [IST]
English summary
Here is top 5 bestselling cars list in india q4 of financial year 21 22
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+