இந்த ஹூண்டாய் கார்கள் மட்டும் இந்தியால விற்பனைக்கு வந்துச்சு... மாருதி எல்லாம் ஒன்னுமே இல்லாம போயிரும்..
உலக நாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஹூண்டாய் கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் புதிய வாகன விற்பனையில் மாருதி சுஸுகியே முதல் இடத்தில் இருக்கின்றது. இந்த நிறுவனத்திற்கு அடுத்தபடியாகவே ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், கியா உள்ளிட்ட நிறுவனங்கள் வருகின்றன. வெகு நீண்ட ஆண்டுகளாக முதல் இடத்தை மாருதி சுஸுகி ஆக்கிரமித்து வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த இடத்தை அருகில்கூட நெருங்க முடியாத வகையில் மிக கம்பீரமான கோட்டையை மாருதி இந்தியாவில் கட்டமைத்திருக்கின்றது.

இந்த கோட்டையை எந்த நிறுவனத்தாலும் அசைக்க முடியாது என்பதே பலரின் கருத்தாக இருக்கின்றது. அதேவேலையில், பிற நிறுவனங்களால் இந்த இடத்தை தொட்டு பார்க்க முடியும் என்கின்ற கருத்திற்கும் பஞ்சமின்றி காணப்படுகின்றது. குறிப்பாக, ஹூண்டாய் நினைத்தால் மாருதியை ஆட்டி பார்க்க முடியும் வாகனத்துறையைச் சார்ந்த வல்லுநர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

நிறுவனம் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சில கார் மாடல்களுக்கு இந்த திறமை உண்டு என்று அவர்கள் கருதுகின்றனர். அந்தளவு திறன்மிக்க கார்கள் எது என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்பியிருக்கலாம். அவைகுறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, சர்வதேச சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் சக்சஸ்ஃபுல் கார் மாடலாக விளங்கும் ஐந்து முக்கிய கார் மாடல்களை பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஹூண்டாய் வெலோஸ்டர் என் (Hyundai Veloster N)
ஹூண்டாய் நிறுவனம் உலக சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மிக முக்கியமான தயாரிப்புகளில் வெலோஸ்டர் என் மாடலும் ஒன்று. அதிக திறன் வெளிப்பாட்டிற்கு பெயர்போன மாடலாக இது இருக்கின்றது. இதனால்தான் இந்த காருக்கு சர்வதேச சந்தையில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. அதிக திறன் வெளியேற்றத்தை விரும்புவோர்களைக் கவரும் பொருட்டே இந்த வாகன மாடலை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

இதன் தோற்றம், நிற தேர்வு, அலங்கரிப்பு அனைத்தும் இளம் தலைமுறையினரைக் கவரும் வகையிலேயே உள்ளது. இந்தியாவிலும் இந்த மாதிரியான ரசனை உள்ளவர்கள் அதிகம் இருக்கின்றனர். ஆகையால், இக்கார் இந்தியா வரும் என்றால் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், இதுவரை இக்காரை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான எந்த முயற்சியையும் நிறுவனம் எடுக்கவில்லை என்பது கவலையளிக்கும் விஷயமாக இருக்கின்றது.

ஹூண்டாய் நிறுவனம் வெலோஸ்டர் என் கார் மாடலில் 2.0 லிட்டர் டிசிஐ ஜிடிஐ எஞ்ஜினை பயன்படுத்துகின்றது. இந்த எஞ்ஜின் 1,998 சிசி திறனை வெளியேற்றக் கூடியது. இதன் பிஎஸ் பவர் 275 ஆகும், இதேபோல் இது 353.03 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை வெறும் 6.1 செகண்டுகளிலேயே இக்கார் எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹூண்டாய் நிறுவனம் இந்த சூப்பரான திறனை எட்டுவதற்காக வெலோஸ்டர் என் கார் மாடலில் 8 ஸ்பீடு என் டிசிடி டிரான்ஸ்மிஷனை பயன்படுத்துகின்றது.

ஹூண்டாய் ஐ20 என் (Hyundai i20 N)
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் ஐ20 மற்றும் ஐ20 என்-லைன் ஆகிய கார் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த இரண்டு மாடல்களைக் காட்டிலும் பல மடங்கு மாறுபட்ட திறன் வெளிப்பாடு மற்றும் வசதிகளைக் கொண்டதாக ஐ20 என் காட்சியளிக்கின்றது. இந்தியாவின் பவர்ஃபுல்ல ஹூண்டாய் ஐ20 என்-லைன் காட்சியளிக்கின்றது.

இதோட திறனையே ஐ20 என் மாடலின் திறன் மிஞ்சிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சூப்பர் பவருக்காக ஐ20 என் மாடலில் ஹூண்டாய் நிறுவனம் 1.6 டி-ஜிடிஐ மோட்டாரை பயன்படுத்துகின்றது. இது 204 பிஎஸ் பவரையும், 275 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 230 கிமீ ஆகும். இந்த வேகத்தை 6 ஸ்பீடு எம்டி டிரான்ஸ்மிஷன் வாயிலாகவே ஐ20 என் வெளியேற்றகின்றது.

ஹூண்டாய் அஸிரா (Hyundai Azera)
ஹூண்டாய் நிறுவனம் பட்ஜெட் வாகனங்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கி வருவதாக நம்மில் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், இந்நிறுவனம் உலக நாடுகள் சிலவற்றில் உயர்ரக சொகுசு கார்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அந்தவகையில், நிறுவனம் உலக சந்தையில் விற்பனைக்கு வழங்கும் ஆடம்ப ரக காரே இந்த அஸிரா.

இதன் காரணத்தினாலேயே இந்த காருக்கு உலக சந்தையில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இக்காருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு அதன் பிரீமியம் அம்சங்களுக்காக மட்டுமே அல்ல. அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சூப்பர் பவர் வெளியேற்றும் மோட்டாரும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்த கார் தற்போது இரு விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. 3.5 லிட்டர் எம்பிஐ, 2.5 லிட்டர் ஜிடிஐ ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வுகளிலேயே அஸிரா விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதில், முதில் பார்த்த மோட்டார் 290 பிஎஸ் மற்றும் 338 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

இரண்டாவதாக பார்த்த 2.5 லிட்டர் மோட்டார் அதிகபட்சமாக 198 பிஎஸ் பவரையும், 248 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த சூப்பரான பவர்ஃபுல் மோட்டார் தேர்வுகளுடன், 12.3 அங்குல எல்சிடி தொடுதிரை, வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், ஹெட்ஸ்-அப் திரை, பிளைண்ட ஸ்பாட் கொல்லிசன் வார்னிங் சிஸ்டம், டூயல் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், 4.2 அங்குல சூப்பர் விஷன் இன்ஃபோடெயின்மென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஹூண்டாய் நெக்ஸோ (Hyundai Nexo)
ஹூண்டாய் நிறுவனம் இந்த காரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் என கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்தியர்கள் பலர் எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்தே இந்த காரின் மீதான ஏக்கம் பல்கி பெருகிக் காணப்படுகின்றது. இந்த ஆண்டில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்-போவிலேயே ஹூண்டாய் நிறுவனம் நெக்ஸோ காரை முதல் முறையாக அறிமுகப்படுத்தியது.

ஓர் ஹைட்ரோஜன் ஃப்யூவல் செல்லால் இயங்கும் எலெக்ட்ரிக் காராகும். இந்த வசதியே இக்காரின்மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. ஒரு ஹைட்ரோஜன் ஃப்யூவல் செல்லை இந்த காரில் முழுமையாக நிரப்பினால் கட்டாயம் 600 கிமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக இந்த காரில் 64 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஐ40 (Hyundai i40)
மேலே பார்த்த கார் மாடல்களைப் போலவே உலக சந்தையில் மிக மிக சூப்பரான டிமாண்டைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடலாக ஐ40 இருக்கின்றது. முற்றிலும் மாறுபட்ட தோற்றம், பிரத்யேக அலங்கார அணிகலன்கள் மற்றும் மிகவும் கவர்ச்சியான ஸ்டைல் ஆகியவற்றிற்கு அறியப்பட்ட காராக ஐ40 இருக்கின்றது. இதன் விளைவாக பலரின் மனம் கவரும் வாகன மாடலாக அது காட்சியளிக்கின்றது.

இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் 2.0 லிட்டர் ஜிடிஐ பெட்ரோல் மற்றும் யுஐஐ 1.7 லிட்டர் டீசல் என்ற இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த இரண்டுமே சூப்பர் பவர்ஃபுல் மோட்டார்களாகும். இதுதவிர, இக்காரில் முழு ஆட்டோமேட்டிக் ஏர் கன்டிஷனிங் சிஸ்டம், பன்முக டிரைவிங் மோட்கள், க்ரூஸ் கன்ட்ரோல், ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் வசதிக் கொண்ட இருக்கைகள் என எக்கசக்க அம்சங்கள் கொண்ட காராக இது காட்சியளிக்கின்றது.

மேலே பார்த்த இந்த கார் மாடல்களே உலக சந்தையில் விற்பனையில் வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கின்றன. ஹூண்டாயின் சொனாட்டா, எலன்ட்ரா, கோனா (ஐசி எஞ்ஜின் கொண்டது), பலிசேட், ஐ30என் உள்ளிட்ட கார் மாடல்களுக்கும் உலக சந்தையில் சூப்பரான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மாடல்கள் எல்லாம் இந்தியா வந்தால் நிச்சயம் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் புதிய கார்கள் விற்பனையில் புதிய சாதனை படைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








