நாளைக்கு அறிமுகமாக இருக்கும் எக்ஸ்எல்6 காரில் இவ்ளோ அம்சங்கள் இடம் பெறுதா! கவனிக்கப்பட வேண்டிய 6 வசதிகள்!
2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) எம்பிவி கார் மாடலில் இடம் பெற இருக்கும் ஆறு முக்கிய அம்சங்கள் பற்றிய தகவலைக் கீழே காணலாம், வாங்க.

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட எக்ஸ்எல்6 (XL6) கார் மாடல் நாட்டில் விற்பனைக்கு வருவதற்கு தயார் நிலையில் உள்ளது. நாளை முதல் இக்கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதற்கான அனைத்து பணிகளையும் நிறுவனம் ஏற்கனவே செய்து முடித்துவிட்டது. புக்கிங் பணிகளும்கூட சென்ற வாரத்தில் இருந்து நடைபெற்று வருகின்றது.

ரூ. 11 ஆயிரம் முன்-தொகையில் எக்ஸ்எல்6 காருக்கான முன் பதிவுகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. காஸ்மெட்டிக் அப்டேட், புதிய எஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆகியவற்றால் 2022 எக்ஸ்எல்6 அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல அம்சங்களை அது பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவை என்ன? 2022 எக்ஸ்எல் 6 கார் மாடலில் இடம் பெற்றிருக்கும் வேறு முக்கிய வசதிகள் என்ன என்பது பற்றிய தகவல்களையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். அதாவது, 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 கார் மாடலில் இடம்பெற இருக்கும் ஆறு முக்கிய சிறப்பம்சங்கள் பற்றியே பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

வென்டிலேட்டட் இருக்கை (Ventilated Seats):
மாருதி சுஸுகி நிறுவனம் அப்டேட்டின் வாயிலாக 2022 எக்ஸ்எல்6 கார் மாடலில் அதிக காற்றோட்டத்தை வழங்கும் அமைப்புடைய இருக்கையை வழங்க இருக்கின்றது. இந்த வெண்டிலேட் இருக்கைகள் காரின் முன் பக்கத்திலேயே இடம் பெறும். அண்மையில் நிறுவனம் வெளியிட்ட டீசர் வீடியோவின் வாயிலாக இந்த தகவல் தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

360 டிகிரி கேமிரா (360 Degree Camera):
மாருதி சுஸுகி தனது எம்பிவி செக்மெண்டிலேயே முதல் முறையாக எக்ஸ்எல்6 காரில் 360 டிகிரி கேமிராவை வழங்க இருக்கின்றது. இந்த கேமிரா பறவையின் கண்கள் போல் செயல்படும். ஆகையால், வெளிப்புறத்தில் ஏற்படும் சிறு அசைவுகளைக் கூட துள்ளியமாக நம்மால் பார்க்க முடியும்.

ஹெட்ஸ்-அப் திரை (Heads-Up Display):
மாருதி சுஸுகி நிறுவனம் பலேனோ கார் மாடலில் ஹெட்ஸ்-அப் திரையை அறிமுகப்படுத்தியது. இந்த சிறப்பு கருவியையே நிறுவனம் எக்ஸ்எல்6 கார் மாடலிலும் வழங்க இருக்கின்றது. இது வாகனத்தின் ஸ்பீடு, எஞ்ஜின் ஆர்பிஎம், நேவிகேஷன் தகவல், மற்றும் எஞ்ஜின் சிம்பள் உள்ளிட்டவைற்றை காண்பிக்கும்.

புதிய எஞ்ஜின் மற்றும் பேடில் ஷிஃப்டர் (Engine & Paddle Shifters):
எக்ஸ்எல்6 கார் மாடலில் மாருதி சுஸுகி நிறுவனம் 1.5 லிட்டர் கே15சி ட்யூவல் பெட்ரோல் எஞ்ஜினை பயன்படுத்த இருக்கின்றது. இந்த எஞ்ஜின் ஒரு சிலிண்டருக்கு இரு இன்ஜெக்டர்கள் வீதம் பெற்றிருக்கின்றது. ஆகையால், மிக சிறந்த கன்ட்ரோலை இது வழங்கும். மேலும், இந்த மோட்டார் 103 பிஎச்பி பவரையும், 136.8 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது. இத்துடன், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ், பேடில் ஷிஃப்டர் உள்ளிட்டவை இக்காரில் வழங்கப்படுகின்றன.

புதிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (New Touchscreen Infotainment System):
2022 எக்ஸ்எல்6 கார் மாடலில் இடம் பெற இருக்கும் புதிய அம்சங்களில் 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் ஒன்று. ஸ்மார்ட் ப்ளே ஸ்டுடிய வசதிக் கொண்ட இத்திரையில் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்-ப்ளே வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர சுஸுகி இணைப்பு வசதியும் அதில் கொடுக்கப்படும்.

டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் (Tyre Pressure Monitoring System):
பாதுகாப்பு வசதிகளாக 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரில் எண்ணற்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், காரின் டயர்களில் உள்ள காற்றைக் கண்கானிக்கும் கருவியும் இக்காரில் வழங்கப்படுகின்றது. இது காற்றை குறைவாக இருப்பதை எச்சரிக்க உதவும்.

மேலே பார்த்தது போன்ற பன்முக சிறப்பு வசதிகளுடன் 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 எம்பிவி வாகனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் வருகையை பலர் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








