இந்த 8 அம்சங்கள் மாருதி கார்களில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்... இவற்றிற்காகவே இந்த கார்களை வாங்கலாம்!

மாருதி சுஸுகி அதன் கார்களில் முதல் முறையாக அறிமுகம் செய்த டாப் 8 புதிய சிறப்பம்சங்கள் பற்றிய தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்த 8 அம்சங்கள் மாருதி கார்களில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்... இவற்றிற்காகவே இந்த கார்களை வாங்கலாம்!

உலகின் மிகப் பெரிய வாகன சந்தைகளில் ஒன்றான இந்தியாவை புதுமுக வாகனங்களால் அலங்கரிப்பதை வாகன உற்பத்தியாளர்கள் தவறாமல் செய்து வருகின்றன. இதுமட்டுமின்றி, புதிதாக விற்பனைக்குக் கொண்டு வரும் வாகனங்களில் லேட்டஸ்ட் தொழில்நுட்ப வசதிகளையும் அவை மிக சிறப்பாக அறிமுகப்படுத்தி வருகின்றன.

இந்த 8 அம்சங்கள் மாருதி கார்களில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்... இவற்றிற்காகவே இந்த கார்களை வாங்கலாம்!

சமீப சில காலமாக வாகன உற்பத்தியாளர்கள் இடையே இந்த நடவடிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால், இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்கள் முன்பைக் காட்டிலும் தற்போது பல மடங்கு அதி-நவீன கார்களாக தென்பட தொடங்கியிருக்கின்றன.

இந்த 8 அம்சங்கள் மாருதி கார்களில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்... இவற்றிற்காகவே இந்த கார்களை வாங்கலாம்!

முந்தைய காலங்களில் விலையுயர்ந்த மற்றும் சொகுசு கார்களில் மட்டுமே தென்பட்டு வந்த சில முக்கிய அம்சங்கள் தற்போது விலை குறைவான மற்றும் மலிவு விலை வாகனங்களிலும் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கு வாகன உற்பத்தியாளர்கள் அனைத்து விதமான வாகனங்களிலும் சமரசமின்றி சிறப்பு வசதிகளை வாரி வழங்கி வருவதே முக்கிய காரணம் ஆகும்.

இந்த 8 அம்சங்கள் மாருதி கார்களில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்... இவற்றிற்காகவே இந்த கார்களை வாங்கலாம்!

தற்போது சந்தையில் வாகன உற்பத்தியாளர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சிறப்பு நவீன வசதிகளை தங்களின் வாகனங்களில் அறிமுகம் செய்து வருகின்றனர். இந்த போட்டியில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுஸுகியும் தனது பங்கை வகித்து வருகின்றது.

இந்த 8 அம்சங்கள் மாருதி கார்களில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்... இவற்றிற்காகவே இந்த கார்களை வாங்கலாம்!

அது, இதற்கு முன்னதாக தன்னுடைய எந்த தயாரிப்புகளிலும் வழங்காத அம்சங்களைக்கூட தற்போது தனது புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் கார் மாடல்களில் வழங்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், சமீப காலமாக நிறுவனம் பல்வேறு புத்தம் புதிய, ஏன், மாருதி சுஸுகி நிறுவனத்திற்கே இந்த அம்சங்கள் மிக மிக புதியது என்று கூறமளவிலான சில அம்சங்களைக் கூட அது வழங்கியிருக்கின்றது.

இந்த 8 அம்சங்கள் மாருதி கார்களில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்... இவற்றிற்காகவே இந்த கார்களை வாங்கலாம்!

அவை என்ன அம்சங்கள் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். அதாவது, மாருதி சுஸுகி நிறுவனம், அதன் லேட்டஸ்ட் கார் மாடல்களில், லேட்டஸ்டாக அறிமுகம் செய்த சிறப்பு நவீன அம்சங்கள் என்னென்ன என்பது பற்றிய தகவலைப் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்த 8 அம்சங்கள் மாருதி கார்களில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்... இவற்றிற்காகவே இந்த கார்களை வாங்கலாம்!

ஹெட்ஸ்-அப் திரை (Head-up Display)

மாருதி சுஸுகி நிறுவனம் ஹெட்-அப் திரையை முதல் முறையாக பலேனோ ஹேட்ச்பேக் கார் மாடலிலேயே அறிமுகப்படுத்தியது. இது ஓட்டுநர்களின் கவனத்தை சிதறாமல் முன் பக்கத்திலேயே வைத்திருக்க உதவும். இந்த திரை கார் சென்றுக் கொண்டிருக்கும் வேகம், நேரம், ஆர்பிஎம் அளவு, இன்ஸ்டான்ட் ஃப்யூவல் எகனாமி மற்றும் க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை அது வழங்கும். இவை அனைத்தையும் பார்வையை மறைக்காமலேயே முகப்பு பகுதியில் அது காட்டும். இத்தகைய சூப்பரான வசதியை மாருதி நிறுவனம் பலேனோ காரில் வழங்கியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த 8 அம்சங்கள் மாருதி கார்களில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்... இவற்றிற்காகவே இந்த கார்களை வாங்கலாம்!

9 அங்குல தொடுதிரை (9-inch Touchscreen System)

ஹெட்-அப் திரையை அடுத்து மாருதி சுஸுகி நிறுவனம் அதன் தயாரிப்பில் அறிமுகப்படுத்திய மற்றுமொரு அதி-சிறப்பு அம்சமாக 9 அங்குல தொடுதிரை இருக்கின்றது. இது ஓர் ஸ்மார்ட் ப்ளே ப்ரோ ப்ளஸ் வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகும். இந்த சிறப்பு அம்சத்தையும் நிறுவனம் அதன் பலேனோ கார் மாடலிலேயே வழங்கியிருக்கின்றது.

இந்த 8 அம்சங்கள் மாருதி கார்களில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்... இவற்றிற்காகவே இந்த கார்களை வாங்கலாம்!

அதேசமயத்தில், ஐரோப்பிய சந்தையில் எஸ்-க்ராஸ் மாடலில் நிறுவனம் வழங்கி வருகின்றது. இந்த அம்சமும் அதன் பயனர்களுக்கு மிகவும் சௌகரியமான அனுபவத்தை வழங்கும். இது, வாகனத்தின் வேகம், டிரைவிங் நேரம், எரிபொருள் பயன்பாடு உள்ளிட்டவை காண்பிக்க உதவும். இத்துடன், சில இணைப்பு வசதிகளையும் அது வழங்கும்.

இந்த 8 அம்சங்கள் மாருதி கார்களில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்... இவற்றிற்காகவே இந்த கார்களை வாங்கலாம்!

இணைப்பு தொழில்நுட்பம் (Connected Car Tech)

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் பலேனோ கார் மடாலிலேயே இந்த அம்சத்தையும் வழங்குகின்றது. இது ஓர் டெலிமேடிக் இணைப்பு அம்சம் ஆகும். அலெக்ஸா இணைப்பு மற்றும் ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு உள்ளிட்டவற்றை செய்து கொள்ள முடியும். பலேனோ கார் மாடலில் மட்டுமின்றி எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய லேட்டஸ்ட் அறிமுகங்களிலும் இந்த அம்சம் இடம் பெற்றிருக்கின்றது.

இந்த 8 அம்சங்கள் மாருதி கார்களில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்... இவற்றிற்காகவே இந்த கார்களை வாங்கலாம்!

இந்த இணைப்பு வசதியின் வாயிலாக முகப்பு லைட்டை ஆன்/ஆஃப் செய்தல், லாக் மற்றும் அன்லாக் செய்தல், ஸ்பீடு நிர்ணயித்தல் உள்ளிட்டவற்றை செய்து கொள்ள முடியும். இத்துடன், ஏசி போன்ற சில கருவிகளையும் நம்மால் கன்ட்ரோல் செய்ய முடியும்.

இந்த 8 அம்சங்கள் மாருதி கார்களில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்... இவற்றிற்காகவே இந்த கார்களை வாங்கலாம்!

பேடில் ஷிஃப்டர்கள் (Paddle Shifters)

முதன் முதலாக பேடில் ஷிஃப்டர்கள் அப்டேட்டட் பிரெஸ்ஸா கார் மாடலிலேயே இடம் பெறும் என அனைவரும் என எண்ணினர். ஆனால், புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 கார் மாடலிலேயே இந்த அம்சத்தை மாருதி கொண்டு வந்தது. தானியங்கி வேரியண்டுகளிலேயே இந்த வசதியை எம்பிவி வழங்குகின்றது.

இந்த 8 அம்சங்கள் மாருதி கார்களில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்... இவற்றிற்காகவே இந்த கார்களை வாங்கலாம்!

360 டிகிரி கேமிரா (360-Degree Camera)

360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிராவை அதன் பலேனோ கார் மடாலில் வழங்குகின்றது. இந்த அம்சத்தை பெறும் முதல் மாருதி தயாரிப்பு இதுவாகும். இதனை உயர்நிலை வேரியண்டான ஆல்ஃபாவில் மட்டுமே மாருதி வழங்குகின்றது. இந்த அம்சம் காருக்குள் இருந்தபடியே வெளியில் நடப்பதைத் தெளிவாகக் கண்கானிக்க உதவும். குறிப்பாக, மிக நெருக்கமான பார்க்கிங் மற்றும் போக்குவரத்து நேரங்களில் இந்த கேமிரா பல மடங்கு உதவியாக இருக்கும்.

இந்த 8 அம்சங்கள் மாருதி கார்களில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்... இவற்றிற்காகவே இந்த கார்களை வாங்கலாம்!

6 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் (6-speed Automatic Transmission)

மாருதி சுஸுகி அதன் பெரும்பாலான கார் மாடல்களில் 4 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷனை வழங்கி வந்தது. இதனை மாற்றியே தற்போது 6 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸை நிறுவனம் விற்பனைக்கு வழங்க தொடங்கியுள்ளது. போட்டி அதிகரித்துக் காணப்படுவதே நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்குக் காரணமாகும். இந்த அம்சம் புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 கார் மாடல்களில் நிறுவனம் வழங்க தொடங்கியிருக்கின்றது.

இந்த 8 அம்சங்கள் மாருதி கார்களில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்... இவற்றிற்காகவே இந்த கார்களை வாங்கலாம்!

வெண்டிலேட்டட் இருக்கை (Ventilated Front Seats)

ஆரம்ப காலத்தில் மிக விலையுயர்ந்த பிரீமியம் மற்றும் சொகுசு கார்களில் மட்டுமே இந்த அம்சம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது மாருதி சுஸுகி நிறுவனம் அதன் சற்று குறைவான பிரீமியம் தர கார் மாடல்களிலும் வழங்க தொடங்கியிருக்கின்றது. சமீபத்தில் அறிமுகமாகிய எக்ஸ்எல்6 கார் மாடலில் இந்த அம்சத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. ஆல்ஃபா - பிளஸ் ட்ரிம்மில் இந்த அம்சம் காணப்படுகின்றது.

இந்த 8 அம்சங்கள் மாருதி கார்களில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்... இவற்றிற்காகவே இந்த கார்களை வாங்கலாம்!

பாதுகாப்பு அம்சங்கள்

மாருதி சுஸுகி நிறுவனம் முன்பை விட தற்போது அதன் தயாரிப்புகளை அதிக பாதுகாப்பானவையாக மாற்ற தொடங்கியிருக்கின்றது. சமீபத்தில் விற்பனக்குக் கொண்டு வரப்பட்ட பலேனோ அதற்கு ஓர் முக்கிய சான்று. இக்காரை அதிக உறுதியான பாடி பேனல்களால் தங்கள் நிறுவனம் உருவாக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. இதேபோல், சமீபத்தில் விற்பனைக்கு வந்த எக்ஸ்எல்6 மற்றும் எர்டிகா கார் மாடல்களில் அதிக பாதுகாப்பு கவசங்களை அது வழங்கியிருக்கின்றது.

இந்த 8 அம்சங்கள் மாருதி கார்களில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்... இவற்றிற்காகவே இந்த கார்களை வாங்கலாம்!

அதாவது, பன்முக ஏர் பேக்குகளை நிறுவனம் இக்காரில் வழங்கியிருக்கின்றது. அந்தவகையில், அனைத்து எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 கார் மாடல்களில் ஆறு ஏர் பேக்குகளை நிறுவனம் கட்டாயமாக்கியிருக்கின்றது. இதன் வாயிலாக பாதுகாப்பான பயணத்தை இக்கார்களில் பெற முடியும் என்பது உறுதியாகியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, April 22, 2022, 11:46 [IST]
English summary
Here is top 8 features list which is segment first features in maruti car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+