அழகோ அழகு!! ஐந்து கவர்ச்சியான தோற்றத்திலான ஒஆர்விஎம்களை கொண்ட கார்களின் பட்டியல் இதோ!

கவர்ச்சியான ஓஆர்விஎம் (Outside Rear-view Mirror)-களைக் கொண்டிருக்கும் ஐந்து செடான் ரக கார்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

அழகோ அழகு!! ஐந்து கவர்ச்சியான தோற்றத்திலான ஒஆர்விஎம்களை கொண்ட கார்களின் பட்டியல் இதோ!

ஓஆர்விஎம் (Outside Rear-view Mirror)-கள் என்றழைக்கப்படும் பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள், பின் பக்கத்தில் வரும் வாகனங்களை எளிதில் கண்டறிய உதவுகின்றன. இதுமட்டுமின்றி, இந்த ஓஆர்விஎம்-கள் வாகனத்திற்கு அதிக கவர்ச்சியான தோற்றத்தை வழங்குவதிலும் முக்கிய பங்கினை வகிக்கின்றன.

அழகோ அழகு!! ஐந்து கவர்ச்சியான தோற்றத்திலான ஒஆர்விஎம்களை கொண்ட கார்களின் பட்டியல் இதோ!

இதற்கு அவற்றின் அட்டகாசமான தோற்றமே காரணம். அந்தவகையில், அதிக கவர்ச்சியான தோற்றம் கொண்ட ஓஆர்விஎம்களைக் கொண்டிருக்கும் ஐந்து செடான் ரக கார்களைப் பற்றிய தகவலை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த முக்கிய விபரங்களைக் காணலாம்.

அழகோ அழகு!! ஐந்து கவர்ச்சியான தோற்றத்திலான ஒஆர்விஎம்களை கொண்ட கார்களின் பட்டியல் இதோ!

மாருதி சுசுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz)

இந்தியாவில் அதிக கவர்ச்சியான தோற்றம் கொண்ட ஓஆர்விஎம்-களைக் கொண்டிருக்கும் செடான் ரக கார் மாடல்களில் மாருதி சுசுகி நிறுவனத்தின் சியாஸ் காரும் ஒன்று. இந்த கார் மிக விரைவில் டொயோட்டா நிறுவனத்தின்கீழ் பெல்டா எனும் பெயரில் விற்பனைக்கு வர இருக்கின்றது. சியாஸ் ஓர் அதிக வேக திறன் கொண்ட மற்றும் அதிக எரிபொருள் சிக்கன வசதிக் கொண்ட செடான் ரக காராகும்.

அழகோ அழகு!! ஐந்து கவர்ச்சியான தோற்றத்திலான ஒஆர்விஎம்களை கொண்ட கார்களின் பட்டியல் இதோ!

இந்த காரில் ப்ரெஸ்ஸா, எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் எஸ்-க்ராஸ் ஆகிய கார்களில் பயன்படுத்தப்படும் எஞ்ஜினே பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த கவர்ச்சியான தோற்றத்திற்கு கூடுதல் மேருகேற்றும் வகையில் குரோம் பூச்சு மற்றும் அதிக திக்கான ஓஆர்எம்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது பக்கவாட்டு பகுதியை மிகவும் கவர்ச்சியான காட்ட உதவுகின்றது.

அழகோ அழகு!! ஐந்து கவர்ச்சியான தோற்றத்திலான ஒஆர்விஎம்களை கொண்ட கார்களின் பட்டியல் இதோ!

ஹோண்டா சிட்டி (Honda City)

மாருதி சுசுகி சியாஸ் காருக்கு அடுத்தபடியாக ஹோண்டா சிட்டி செடான் காரிலும் அதிக கவர்ச்சியான தோற்றம் கொண்ட ஓஆர்விஎம்-கள் இடம் பெற்றிருக்கின்றது. பல தலைமுறைகளாக விற்பனையில் இருக்கும் செடான் ரக கார் என்ற பெருமைக்கு உரிய வாகனமாக சிட்டி இருக்கின்றது. நான்கு மற்றும் ஐந்தாம் தலைமுறை செடான் ரக கார்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

அழகோ அழகு!! ஐந்து கவர்ச்சியான தோற்றத்திலான ஒஆர்விஎம்களை கொண்ட கார்களின் பட்டியல் இதோ!

இதன் அதிக இட வசதி, ஸ்போர்ட்டியான தோற்றம், வி-டெக் தொழில்நுட்பம் அடங்கி எஞ்ஜின் உள்ளிட்ட அம்சங்களினால் மக்களை இக்கார் தொடர்ச்சியாக கவர்ந்து வருகின்றது. இத்துடனேயே புதிய மற்றும் சங்கியான தோற்றம் கொண்ட ஓஆர்விஎம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

அழகோ அழகு!! ஐந்து கவர்ச்சியான தோற்றத்திலான ஒஆர்விஎம்களை கொண்ட கார்களின் பட்டியல் இதோ!

ஹோண்டா சிவிக் (Honda Civic)

ஹோண்டா சிவிக், சிட்டி காரைப் போலவே மிகவும் கவர்ச்சியான ஓர் செடான் ரக வாகனமாக இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இரண்டும் ஒரே நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தாலும் இரண்டிற்கும் இடையில் பல்வேறு வித்தியாசங்கள் தென்படுகின்றன.

அழகோ அழகு!! ஐந்து கவர்ச்சியான தோற்றத்திலான ஒஆர்விஎம்களை கொண்ட கார்களின் பட்டியல் இதோ!

ஸ்லீக் மற்றும் ஸ்போர்ட்டி தோற்றத்தில் சிவிக் காட்சியளிக்கின்றது. இதற்கு மேலும் மெருகேற்றும் வகையில் பல்வேறு அம்சங்களை ஹோண்டா வழங்கியிருக்கின்றது. அதில், ஒன்றே இன்டிகேட்டருடன் கூடிய ஓஆர்விஎம்கள் இருக்கின்றன. இத்துடன், குரோம் பூச்சுக் கொண்ட டூர் கைப்பிடிகளும் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன.

அழகோ அழகு!! ஐந்து கவர்ச்சியான தோற்றத்திலான ஒஆர்விஎம்களை கொண்ட கார்களின் பட்டியல் இதோ!

ஸ்கோடா ஸ்லேவியா (Skoda Slavia)

ஸ்கோடா முக்கியமாக செடான் ரக கார்களில் மிக சிறப்பான நிறுவனமாக விளங்குகின்றது. எனவேதான் இந்தியாவில் செடான் பிரிவின் தலைவனை போல் ஸ்கோடா ஸ்லேவியா விளங்குகின்றது. முன்னதாக செடான் பிரியர்களின் முக்கிய தேர்வாக ரேபிட் இருந்தது. தற்போது இதற்கு மாற்றாக ஸ்லேவியா இருக்கின்றது.

அழகோ அழகு!! ஐந்து கவர்ச்சியான தோற்றத்திலான ஒஆர்விஎம்களை கொண்ட கார்களின் பட்டியல் இதோ!

இதனை குட்டி ஆக்டேவியா என்றும் பலர் அழைக்கின்றனர். மேலும், ஹோண்டா சிட்டி காருக்கான மிக சிறந்த போட்டியாளராகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த காரில் இரட்டை நிறத்திலான மற்றும் டர்ன் இன்டிகேட்டர்கள் கொண்ட ஓஆர்விஎம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

அழகோ அழகு!! ஐந்து கவர்ச்சியான தோற்றத்திலான ஒஆர்விஎம்களை கொண்ட கார்களின் பட்டியல் இதோ!

ஸ்கோடா ஆக்டேவியா (Skoda Octavia)

நம்முடைய இந்த பட்டியலில் நாம் கடைசியாக பார்க்க இருக்கும் கடைசி வாகனம் ஸ்கோடா ஆக்டேவியா ஆகும். இந்த காரின் ஒட்டுமொத்த தோற்றமும் மிகவும் கவர்ச்சியானதாக காட்சியளிக்கின்றது. எனவேதான் பிரீமியம் தர செடான் ரக காரை விரும்புவோர்களின் தேர்வாக இந்த கார் மாடல் இருக்கின்றது. புதிய ஆக்டேவியா இந்தியாவில் கடந்த ஜூன் மாதமே விற்பனைக்கு அறிமுகமானது. இந்த காரிலும் இரட்டை நிற தேர்வு கொண்ட ஓஆர்விஎம்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here is top five sedan cars in india that have best looking orvms
Story first published: Saturday, January 8, 2022, 18:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X