இந்தியாவுல இத்தனை விதமான ஆட்டோமொபைல் பெர்மிட்டுகள் பயன்பாட்டில் இருக்குதா?.. பட்டியல் ரொம்ப நீளமா இருக்கே!

இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள ஆட்டோமொபைல் பெர்மிட்டுகளின் விபரங்களை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குல் போகலாம்.

இந்தியாவுல இத்தனை விதமான ஆட்டோமொபைல் பெர்மிட்டுகள் பயன்பாட்டில் இருக்குதா?..

இந்தியாவில் வாகனங்களின் பயன்பாடு மற்றும் அவற்றின் செயல்பாடுகளைப் பொருத்து பெர்மிட்டுகள் அவைகளுக்கு வழங்கப்படுகின்றன. அந்தவகையில் எந்த மாதிரியான வாகனங்களுக்கு என்ன மாதிரியான பெர்மிட்டுகள் இந்தியாவில் வழங்கப்படுகின்றன என்பது பற்றிய விபரத்தையே இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவுல இத்தனை விதமான ஆட்டோமொபைல் பெர்மிட்டுகள் பயன்பாட்டில் இருக்குதா?..

இரண்டு வகைகளில் வாகனங்கள் பிரிக்கப்பட்டு அவற்றிற்கு பெர்மிட்டுகள் வழங்கப்படுகின்றன. பயணிகள் வாகனம் மற்றும் சரக்கு வாகனம் என இரு வகைகளில் வாகனங்கள் பிரிக்கப்படுகின்றன. இவற்றின்கீழ் அவைகளுக்கான பெர்மிட்டுகள் வழங்கப்பட்டுகின்றன.

இந்தியாவுல இத்தனை விதமான ஆட்டோமொபைல் பெர்மிட்டுகள் பயன்பாட்டில் இருக்குதா?..

பயணிகள் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெர்மிட்டுகளின் விபரங்கள் (Permits for Passenger Vehicles):

கல்வி நிலையங்கள் மற்றும் பள்ளி பேருந்துகள் (School Buses or Institution):

கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளால் இயக்கப்படும் பேருந்துகளுக்கு மட்டுமே இந்த பெர்மிட் வழங்கப்படுகின்றது. இந்த ரக வாகனங்கள் கோல்டன் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். இவற்றிற்கு சாலை வரி வசூலிக்கப்படாது.

இந்தியாவுல இத்தனை விதமான ஆட்டோமொபைல் பெர்மிட்டுகள் பயன்பாட்டில் இருக்குதா?..

அனைத்து இந்தியா டூரிஸ்ட் பெர்மிட் (All India Tourist Permit)

இந்தியாவின் எந்த மூலைக்கும் தடையின்றி பயணிக்க இந்த பெர்மிட் உதவும். லக்சூரி பேருந்துகளுக்கு இந்த பெர்மிட் வழங்கப்படுகின்றன. இந்த ரக வாகனங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இத்துடன், 5 செமீ அளவில் நீல நிற வண்ணம் ரிப்பன் போன்று பெயிண்ட் பேருந்து சுற்றி பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த நிறம் பேருந்தின் மையப்பகுதியில் இடம் பெற்றிருக்கும். மேலும், வாகனத்தின் இரண்டு பக்கங்களிலும் சுற்றுலா வாகனம் என்கிற வார்த்தை இடம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தியாவுல இத்தனை விதமான ஆட்டோமொபைல் பெர்மிட்டுகள் பயன்பாட்டில் இருக்குதா?..

வாடகை வாகனங்களுக்கான பெர்மிட் (Permits for Passenger Vehicles):

இந்த ரக வாகனங்களுக்கு சில கன்டிஷன்கள் உள்ளன.

  • வாடகை வாகனத்திற்கான பெர்மிட்டை பெற்ற நபர் 24x7 தொடர்புக் கொள்ளக் கூடிய ஓர் டெலிபோனை வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும். குறைகள் மற்றும் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பதற்காக இந்த விதி கட்டாயம் என கூறப்படுகின்றது.
  • அங்கீகரிக்கப்பட்ட பார்க்கிங் ஸ்பேஸ் வைத்திருக்க வேண்டும்.
  • போக்குவரத்து துறையில் நல்ல அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • 50-க்கும் மேற்பட்ட ஏசி வசதிக் கொண்ட வாகனங்களுக்கு உரிமையாளராக இருத்தல் வேண்டும்.
  • பயணிகள் வரி குறிப்பிட்ட மாநில அரசுக்கு செலுத்தியிருக்க வேண்டும். இவையே வாடகை-வாகனங்கள் பெர்மிட்டிற்கான நிபந்தனைகள் ஆகும்.
  • இந்தியாவுல இத்தனை விதமான ஆட்டோமொபைல் பெர்மிட்டுகள் பயன்பாட்டில் இருக்குதா?..

    தற்காலிக பெர்மிட் (Temporary Permit):

    சொந்த மாநிலத்தை விட்டு வெளி மாநிலங்களுக்கு பயணிக்கும் வாகனங்களுக்கு இந்த பெர்மிட் வழங்கப்படுகின்றது. கோவில்களுக்கு, பிற சுப நிகழ்வுகளுக்கு கலந்துக் கொள்ளும் வாகனங்கள் மற்றும் தொழில் காரணமாக பயணிக்கும் வாகனங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படுகின்றது.

    இந்தியாவுல இத்தனை விதமான ஆட்டோமொபைல் பெர்மிட்டுகள் பயன்பாட்டில் இருக்குதா?..

    ஸ்டேஜ் கேரேஜ் பெர்மிட் (Stage Carriage Permits):

    நகரம் அல்லது மாவட்டத்தின் வெவ்வேறு வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவதற்காக போக்குவரத்து கழகங்கள் வழங்கும் அனுமதியே ஸ்டேஜ் கேரேஜ் பெர்மிட் ஆகும். இது இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு இடையில் பேருந்துகளை இயக்க முடியும்.

    இந்தியாவுல இத்தனை விதமான ஆட்டோமொபைல் பெர்மிட்டுகள் பயன்பாட்டில் இருக்குதா?..

    ஈகோ ஃப்ரெண்ட்லி சேவா (Eco-Friendly Sewa)

    இந்த பெர்மிட் மூன்று சக்கரங்கள் கொண்ட பேட்டரியால் இயங்கக் கூடிய வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. குறிப்பாக இந்த வாகனங்கள் 11 இருக்கைகளைக் கொண்டதாக இருத்தல் வேண்டும்.

    ஃபாட் பத் சேவா (Phat Phat Sewa):

    குறிப்பிட்ட ரூட்டில் மட்டுமே இயக்கப்படும் வாகனங்களுக்கு இந்த பெர்மிட் வழங்கப்படுகின்றது. இந்த வாகனங்கள் குறைந்தது 10 நபர்களையாவது ஏற்றிச் செல்லக் கூடிய இருக்கை வசதிக் கொண்டதாக இருக்க வேண்டும்.

    இந்தியாவுல இத்தனை விதமான ஆட்டோமொபைல் பெர்மிட்டுகள் பயன்பாட்டில் இருக்குதா?..

    மேக்ஸி கேப் பெர்மிட் (Maxi Cab Permit):

    12 முதல் 13 பேர் வரை அமர்ந்து பயணிக்கக் கூடிய வாகனம் இருத்தல் வேண்டும். இந்த பெர்மிட்டும் குறிப்பிட்ட ஒற்றை ரூட்டில் வாகனத்தை இயக்க அனுமதிக்கும்.

    ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்ஸி பெர்மிட் (Auto Rickshaw and Taxi Permits):

    இந்த பெர்மிட் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களைக் கொண்ட பயணிகள் வாகனங்களுக்கு வழங்கப்படும். நாம் தற்போது ஓலா, ஊபர் ஆகிய கால் டாக்சி வாயிலாக பயன்படுத்துகின்றோம் அல்லவா அந்த வாகனங்கள் அனைத்தும் இந்த பெர்மிட்டின் கீழாகவே இயங்குகின்றன. அரசு நிர்ணயித்த கட்டணத்தின்கீழ் இவை இயங்கும்.

    இந்தியாவுல இத்தனை விதமான ஆட்டோமொபைல் பெர்மிட்டுகள் பயன்பாட்டில் இருக்குதா?..

    சார்டர்ட் பேருந்து பெர்மிட் (Chartered Buses Permit):

    நிறுவனங்களுக்கு கான்ட்ராக்ட் கீழ் பேருந்துகளை பயன்படுத்த இந்த பெர்மிட் உதவுகின்றது. நிறுவனத்தின் ஊழியர்களை கம்பெனிக்கு ஏற்றி வருதல் மற்றும் உரிய இடத்தில் மீண்டும் சென்று சேர்த்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள மட்டுமே இந்த பேருந்துகளை பயன்படுத்த வேண்டும். ஆம் இந்த பெர்மிட்டைப் பெற்ற பேருந்துகள் பிற வாடகை மற்றும் கட்டண சேவையில் ஈடுபடுத்தக் கூடாது என்பது விதியாகும்.

    இந்தியாவுல இத்தனை விதமான ஆட்டோமொபைல் பெர்மிட்டுகள் பயன்பாட்டில் இருக்குதா?..

    கூட்ஸ்களுக்கான பெர்மிட்டுகள் (Permits for Goods Vehicles):

    கூட்ஸ் கேரியர் பெர்மிட் (Goods Carrier Permit):

    சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு சரக்கு கேரியர் ரக வாகனங்களுக்கு இந்த அனுமதி கட்டாயம். இந்த அனுமதி மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 79இன் கீழ் வழங்கப்படுகின்றது. இந்த பெர்மிட் மாநிலத்திற்கு உள்ளாக சரக்கு வாகனத்தை இயக்க அனுமதிக்கின்றது.

    இந்தியாவுல இத்தனை விதமான ஆட்டோமொபைல் பெர்மிட்டுகள் பயன்பாட்டில் இருக்குதா?..

    கவுன்டர் சிக்னேச்சர் ஆஃப் கூட்ஸ் கேரியர் பெர்மிட்ஸ் (Counter Signatures of Goods Carrier Permits):

    இந்த அனுமதி ஓர் மாநில அரசால் வழங்கப்படுகின்றது. அதேவேலையில் இந்த அனுமதி வெவ்வேறு மாநிலங்களுக்கும் செல்லுபடியாகும். இந்த ரக வாகனங்கள் டெல்லியில் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 7,500 கிலோ எடை திறன் கொண்ட க்ளீன் ஃப்யூவல் விதிக்கு உட்படாத வாகனங்களுக்கு கட்டாயம் டெல்லிக்குள் நுழைய அனுமதி இல்லை.

    இந்தியாவுல இத்தனை விதமான ஆட்டோமொபைல் பெர்மிட்டுகள் பயன்பாட்டில் இருக்குதா?..

    நேஷனல் பெர்மிட் (National Permits):

    இந்த பெர்மிட்டை பெற வேண்டும் எனில் அந்த கூட்ஸ் வாகனம் 12 ஆண்டுகளுக்கும் குறைவான வயதைக் கொண்டதாக இருக்க வேண்டும். குறிப்பாக, மல்டி ஆக்ஸில்கள் கொண்ட வாகனங்கள் 15 ஆண்டுகளைத் தாண்டியதாக இருக்கக் கூடாது. மேலும், இந்த பெர்மிட்டை பெற்ற வாகனங்கள் சொந்த மாநிலம் உட்பட நான்கு வெவ்வேறு மாநிலங்களில் இயங்கிக் கொள்ள முடியும்.

Article Published On: Tuesday, June 14, 2022, 11:15 [IST]
English summary
Here is types of automobile permits in india
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+