உலகின் மிக பெரிய காரை பார்த்திருக்கீங்களா?.. ஏணி இல்லாம இதுல ஏற முடியாது... அம்மாடி அம்மா இவ்ளோ பெருசா!
உலகின் மிக பெரிய கார் பற்றிய தகவலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

உலகளவில் மிகவும் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்றாக ஹம்மர் எச்1 (Hummer H1) இருக்கின்றது. இந்த கார் மாடலே அமெரிக்கா ராணுவத்தின் அதிகாரப்பூர்வ வாகனமாகும். வீரர்களை உரிய இடத்திற்கு அழைத்துச் செல்ல இந்த வாகனமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மிக கட்டுமஸ்தான உடல் தோற்றம் கொண்ட வாகனம் இதுவாகும். கரடு-முரடான சாலைகளை மிக மிக அசால்டாக சமாளித்துவிடும்.

இத்தகைய ஓர் வாகன மாடலையே ஓர் நபர் மிக மிக பெரிய உருவ தோற்றத்தில் உருவாக்கியிருக்கின்றார். தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் ஓர் சிறிய வீட்டின் தோற்றத்தில் அக்கார் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் எளிமையாக புரிந்துக் கொள்ளும்படி கூற வேண்டும் எனில், அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்திற்கு இணையான அளவில் இக்கார் உருவாக்கப்பட்டுள்ளது.

அரபு நாட்டைச் சேர்ந்த ஓர் வாகன பிரியரே இக்காரை உருவாக்கியவர் ஆவார். பிரமாண்ட தோற்றம் கொண்ட அக்காருக்கு ஹம்மர் எச்1 எக்ஸ்3 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஹம்மரைக் காட்டிலும் பல மடங்கு பெரியது இது என்பதை உணர்த்தும் வகையில் அதன் பெயர் உள்ளது.

அரபு நாட்டின் அல் மடம் எனும் பகுதியில் உள்ள 'ஆஃப்-ரோடு ஹிஸ்டரி' (Off-Road History) எனும் வாகன மியூசியத்தில் இக்கார் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஹம்மர் எச்1 எக்ஸ்3 சுமார் 6.6 மீட்டர் உயரத்தையும், 14 மீட்டர் நீளத்தையும், 6 மீட்டர் அகலைத்தையும் கொண்டுள்ளது. மிக பிரமாண்டமான தோற்றத்தில் இருப்பதால் இது வெறும் பொம்மை வாகனம் என எண்ணிவிட வேண்டாம்.

வழக்கமான ஹம்மர் எச்1 காரை போலவே திறன்பட செயல்படக் கூடியதே இந்த எச்1 எக்ஸ்3 கார். காருக்குள் பெரிய அறை போன்ற அமைப்பு உள்ளது. இத்துடன், அனைத்து பாகங்களும் இந்த வாகனத்திற்காகவே பிரத்யேகமாக பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. அனைத்தும், ஹம்மர் எச்1 காரை பிரதிபலிக்கும் வகையில் மிக துள்ளியமாக வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த செயல் வழக்கமான ஹம்மர் எச்1 காரை மேஜிக்கால் பெருசாக மாத்திட்டாங்களோ என நம்மை நினைக்கச் செய்யும் வகையில் இருக்கின்றது. அந்தளவிற்கு மிகவும் ரியலான தோற்றத்தில் பிரமாண்ட தோற்றம் கொண்ட ஹம்மர் எச்1 எக்ஸ்3 உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனம் அரபு நாட்டைச் சேர்ந்த ஷேக் ஹமத் பின் ஹம்தன் அல் நஹ்யன் என்பவருக்கு சொந்தமானது என கூறப்படுகின்றது. ரெயின்போ ஷேக் என்ற பெயரிலும் இவர் அறியப்படுகின்றார். கார் கலெக்ஷனுக்கு பெயர்போன நபராக இவர் இருக்கின்றார். தன்னுடைய பல மில்லியன் டாலர்கள் பணத்தை கார்களை வாங்கவும், அவற்றை மாடிஃபை செய்யவுமே அவர் பயன்படுத்தி வருகின்றார் என்பது கூடுதல் சுவாரஷ்ய தகவல் ஆகும்.

இக்காரில் படுக்கை அறை மட்டுமின்றி சமையல் அறை, கழிவறை மற்றும் பல ஏராளமான அறைகள் இடம் பெற்றிருக்கின்றன. அதேநேரத்தில், வழக்கமான காரை போல் சிறப்பாக அது இயங்கவும் செய்யும். சிறந்த இயக்கத்திற்காக பிரத்யேகமாக டயர் மற்றும் வீல்கள் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன், அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனத்திடம் எஞ்ஜின்கள் பெறப்பட்டு, அவை காரின் இயக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
காரின் உயரம் பன் மடங்கு அதிகம் என்பதால் அதற்குள் செல்ல வேண்டும் என்றால் தனி ஏணி தேவைப்படுகின்றது. இதன் வாயிலாக மட்டுமே காருக்குள் பயணிகளால் நுழைய முடியும். இக்காரை காட்சிப்படுத்திய யுட்யூப் சேனலைச் சேர்ந்த இளைஞரும்கூட அவ்வாறே காருக்குள் நுழைந்தார்.


Click it and Unblock the Notifications








