ஹெலிகாப்டரை விட அதிக விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம்... இவ்ளோ அதிக விலைக்கான காரணம் என்ன?

லேட்டஸ்ட் மாடல் ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் (Rolls Royce Phantom) சொகுசு கார் இந்தியாவில் ஓர் ஹெலிகாப்டரைவிட அதிக விலையில் விற்கப்படுகின்றது. இதற்கான காரணத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஹெலிகாப்டரை விட அதிக விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம்... இவ்ளோ அதிக விலைக்கான காரணம் என்ன? இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!

ஹெலிகாப்டரை விட அதிக விலைக் கொண்ட வாகனமாக ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) நிறுவனத்தின் பேந்தம் (Phantom) சொகுசு கார் மாடல் இருக்கின்றது. இதுவே நிறுவனத்தின் மிக அதிக விலையுடைய கார் மாடலும் ஆகும். எந்தவொரு வரியும் இல்லாமலேயே இக்கார் ரூ. 10 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.

ஹெலிகாப்டரை விட அதிக விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம்... இவ்ளோ அதிக விலைக்கான காரணம் என்ன? இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!

இத்தகைய உச்சபட்ச விலைக்கான காரணம் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். இதுகுறித்த முழு விபரத்தையும் வீடியோவாக ஓர் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே இப்பதிவு வெளியிடப்பட்டுள்ளது. வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹெலிகாப்டரை விட அதிக விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம்... இவ்ளோ அதிக விலைக்கான காரணம் என்ன? இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!

யுட்யூப் சேனலில் தோன்றும் ரஜ்னி சவுத்ரி எனும் அந்த இளம் பெண், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் உருவாகிய வரலாற்றில் இருந்து அவரது பதிவைத் தொடங்குகின்றார். "சார்லஸ் ரோல்ஸ் மற்றும் ஹென்றி ராய்ஸ் என்பவர்களால் தொடங்கப்பட்டதே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம். இது, கார் உற்பத்தியை மட்டுமின்றி விமானங்களுக்கான பாரிய அளவுள்ள எஞ்ஜின்களையும் உருவாக்கியது.

ஹெலிகாப்டரை விட அதிக விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம்... இவ்ளோ அதிக விலைக்கான காரணம் என்ன? இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்த நிலையில், 1998 இல் இந்நிறுவனத்தை ஃபோக்ஸ்வேகன் கையகப்படுத்தியது. இதை அடுத்து சில காரணங்களுக்காக பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தை விற்க ஃபோக்ஸ்வேகன் முற்பட்டது. சுவாரஷ்யமாக, ரோல்ஸ் ராய்ஸ் பிராண்டை மட்டுமே அது விற்பனைச் செய்தது. அதன் ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி விற்கப்படவில்லை. இது இல்லாத ரோல்ஸ் ராய்ஸ் கார், ரோல்ஸ் ராய்ஸ் வாகனமே கிடையாது என கூறலாம்.

ஹெலிகாப்டரை விட அதிக விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம்... இவ்ளோ அதிக விலைக்கான காரணம் என்ன? இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆகையால், மீண்டும் 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்து ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸியை பிஎம்டபிள்யூ வாங்கியது" இது போன்று பல்வேறு சுவாரஷ்யமான தகவல்களை அப்பெண் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்தே, அவர் ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் காரின் அதிக விலைக்கான காரணத்திற்குள் நுழைந்தார். இதுகுறித்து அவர் கூறியவை பின் வருமாறு:

மிக பிரமாண்டமான தோற்றத்தில் ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் காட்சியளிக்கின்றது. பெரிய ரோல்ஸ் ராய்ஸ் க்ரில் காரின் முகப்பு பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, முன் பக்கத்தை கூடுதல் கவர்ச்சியாக காண்பிக்கும் பொருட்டு புரஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி பகல்நேர மின் விளக்குகள் ஆகியவைப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஹெலிகாப்டரை விட அதிக விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம்... இவ்ளோ அதிக விலைக்கான காரணம் என்ன? இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!

மேலும், 22 இன்ச் அளவுள்ள அலாய் வீல்கள் ரோல்ஸ் ராய்ஸ் பேட்ஜுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்ஜ் வீல் இயக்கத்தின் போதும் நேராகவே நிற்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்று பல்வேறு விஷயங்களில் இக்காரை ரோல்ஸ் ராய்ஸ் பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கின்றது.

ஹெலிகாப்டரை விட அதிக விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம்... இவ்ளோ அதிக விலைக்கான காரணம் என்ன? இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!

காரின் பின்புறம் மிகவும் எளிமையானதாகக் காட்சியளிக்கின்றது. அதேநேரத்தில், அது மிக நேர்த்தியானதாகவும் காட்சியளிக்கின்றது. தொடர்ந்து, இந்த சொகுசு காரில் மிக சிறந்த திறன் வெளியேற்றத்திற்கு உதவும் வகையில் ட்வின் எக்சாஸ்ட் அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இக்காரில் அதிக எரிபொருளை சேமிக்கும் வகையில் 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட ப்யூவல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

ஆனால், இதன் மைலேஜ் திறன் நம்மை ஷாக்களிக்கும் வகையில் இருக்கின்றது. அராய் வெளியிட்டிருக்கும் தகவலின்படி லிட்டர் ஒன்றிற்கு இக்கார் வெறும் 9.8 கிமீ வரை மட்டுமே மைலேஜ் வழங்கும். நிஜ வாழ்க்கையில் இக்கார் வெறும் 8 கிமீ மட்டுமே மைலேஜ் தருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெலிகாப்டரை விட அதிக விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம்... இவ்ளோ அதிக விலைக்கான காரணம் என்ன? இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!

காரின் உட்புறம் கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், கார்பெட்டுகள் டேன் பிரவுண் நிறத்தில் காட்சியளிக்கின்றன. பின் பக்கத்தில் துணி திரை, குடை, மின்சாரத்தால் திறந்து-மூடும் கதவுகள், வெண்டிலேட் இருக்கை, தனி தனியான க்ளைமேட் கன்ட்ரோல் அம்சங்கள் உள்ளிட்டவையும காரின் உட்புறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

ஹெலிகாப்டரை விட அதிக விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம்... இவ்ளோ அதிக விலைக்கான காரணம் என்ன? இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!

ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் காரில் சூசைட் ரக கதவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது பயணிகள் ஈசியாக உட் செல்லுதல் மற்றும் வெளியேறுதலுக்கு பெரும் உதவியாக இருக்கும். தொடர்ந்து, காரின் உட்பகுதி இரவு நேர வான்வெளியை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தலைக்கு மேலே நட்சத்திரங்கள் இருப்பதைப் போல சிறிய சிறிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, சிறிய ஃபிரிட்ஜ், ஆர்ம் ரெஸ்ட் உள்ளிட்ட அம்சங்களும் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹெலிகாப்டரை விட அதிக விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம்... இவ்ளோ அதிக விலைக்கான காரணம் என்ன? இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பு கப்பலில் மிதப்பதைப் போன்ற அனுபவத்தை வழங்கக் கூடியவையாக காட்சியளிக்கின்றன. இதேமாதிரியான அனுபவத்தை வழங்கக் கூடியதாகவே பேந்தம் கார் மாடலும் காட்சியளிக்கின்றது. மிக பெரிய பள்ளம், மேடுகளில் ஏறி இறங்கினாலும்கூட பெரியளவில் அலுப்பு தெரியாது.

ஹெலிகாப்டரை விட அதிக விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம்... இவ்ளோ அதிக விலைக்கான காரணம் என்ன? இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!

தொடர்ந்து, மிக சிறந்த திறனை வெளியேற்றுவதற்காக இக்காரில் 6.6 லிட்டர் வி12 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 612 எச்பி பவரையும், 840 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். பேந்தம் VIII கார் மாடலில் 6.75 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டரை விட அதிக விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம்... இவ்ளோ அதிக விலைக்கான காரணம் என்ன? இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 571 பிஎஸ் பவரையும், 900 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த எஞ்ஜின்கள் என்னதான் அதிக வேகத்தில் பயணித்தாலும் வைப்ரேஷனை துளியளவும் வெளியேற்றாது. ஸ்மூத் மற்றும் கம்ஃபோர்டான டிரைவிங் அனுபவத்தை வழங்கும்.

ஹெலிகாப்டரை விட அதிக விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம்... இவ்ளோ அதிக விலைக்கான காரணம் என்ன? இத உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க!

இதுமாதிரியான எக்கசக்க சிறப்பு வசதிகளைக் கொண்டதாகவே ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் இருக்கின்றது. இதுபோன்ற சூப்பரான வசதிகளின் காரணத்தினாலேயே பேந்தம் ஓர் ஹெலிகாப்டரைக் காட்டிலும் மிக மிக அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 26, 2022, 13:24 [IST]
English summary
Here is why latest rolls royce phantom sold higher than helicopter price in india
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+