பியூசி சான்றை பெற என்ன செய்ய வேண்டும்?.. இதை ஆன்லைனில் பெற முடியுமா?.. இதோ முழு விபரம்!

வாகனங்களுக்கான பியூசி சான்றை ஆன்லைனில் பெற முடியுமா, இதை பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

பியூசி சான்றை பெற என்ன செய்ய வேண்டும்?.. இதை ஆன்லைனில் பெற முடியுமா?.. இதோ முழு விபரம்!

வாகனத்திற்கு தேவைப்படும் மிக முக்கியமான ஆவணங்களில் பியூசி சான்றும் ஒன்று. இந்த சான்று குறிப்பிட்ட வாகனம் வெளியிடும் மாசின் தரத்தையும், அளவையும் கண்டறிய உதவுகின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் குறிப்பிட்ட வாகனம் சாலை பயன்பாட்டிற்கு உகந்ததா, இல்லையா என்பதை இந்த சான்றை வைத்து கண்டறிந்து விடலாம். இதனால்தான் பியூசி சான்றை அரசு கட்டாயமாக்கியிருக்கின்றது.

பியூசி சான்றை பெற என்ன செய்ய வேண்டும்?.. இதை ஆன்லைனில் பெற முடியுமா?.. இதோ முழு விபரம்!

டெல்லி போன்ற நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த ஆவணம் வைத்திருக்காத வாகனங்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆவணத்தை எப்படி பெறுவது என்பது பற்றிய விபரத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பியூசி சான்றை பெற என்ன செய்ய வேண்டும்?.. இதை ஆன்லைனில் பெற முடியுமா?.. இதோ முழு விபரம்!

வாகனங்களுக்கான இன்சூரன்ஸை வழங்குவதற்கு எப்படி தனிப்பட்ட மையங்கள் செயல்பட்டு வருகின்றனவோ, அதேபோல், வாகனங்களுக்கு பியூசி சான்றை வழங்கும் மையங்களும் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. இவையே வாகனங்கள் வெளியிடும் புகையின் மாதிரியை சேகரித்து அதனை ஆய்விற்கு உட்படுத்தும்.

பியூசி சான்றை பெற என்ன செய்ய வேண்டும்?.. இதை ஆன்லைனில் பெற முடியுமா?.. இதோ முழு விபரம்!

இந்த ஆய்வானது, அவ்வாகனம் கக்கும் புகை அரசு நிர்ணயித்திருக்கும் அளவிற்கு உட்பட்டதாக இருக்கின்றதா, என்ன தரத்தில் அப்புகை உள்ளது, என்பது போன்ற முக்கிய தகவல்களை வெளிக்காட்டும் வகையில் மேற்கொள்ளப்படும். இதற்காக அரசு அனுமதி பெற்ற ஆய்வுகூடங்கள் பல நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பியூசி சான்றை பெற என்ன செய்ய வேண்டும்?.. இதை ஆன்லைனில் பெற முடியுமா?.. இதோ முழு விபரம்!

இங்கு வைத்து மட்டுமே பியூசி சான்றை பெற வேண்டும். தற்போது நாட்டில் அரசு அனுமதி பெறாத மாசை ஆய்வு செய்யும் கூடங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றிடம் இருந்து பெறப்படும் சான்றுகள் ஏற்கப்படாது என்பது குறிப்பிடத்தகுந்தது.v

பியூசி சான்றை பெற என்ன செய்ய வேண்டும்?.. இதை ஆன்லைனில் பெற முடியுமா?.. இதோ முழு விபரம்!

இந்த நிலையில், வாகனங்களுக்கான பியூசி சான்றை ஆன்-லைனில் பெற முடியும் என பலர் கேட்ட வண்ணம் இருக்கின்றனர். இவர்களுக்கான பதில், சான்றை ஆன்லைனில் பெற முடியும். ஆனால், சோதனையை ஆஃப் லைனில் மட்டுமே செய்ய முடியும். அரசு அங்கீகாரம் பெற்ற சோதனை மையங்கள் நம் வாகனத்திற்கான பியூசி சான்றை நேரடியாக அரசின் பாரி வாஹன் தளத்திலேயே அப்லோட் செய்துவிடுகின்றன. ஆகையால், தேவைப்படும்போது அரசு தளத்திற்கு சென்று சான்றை தரவிறக்கும் செய்துகொள்ளலாம்.

பியூசி சான்றை பெற என்ன செய்ய வேண்டும்?.. இதை ஆன்லைனில் பெற முடியுமா?.. இதோ முழு விபரம்!

ஆன்லைனில் பியூசி சான்றை பெற என்ன செய்ய வேண்டும்?

உடல் அளவில் செய்ய சோதனை என்பதால், வாகனம் கட்டாயம் சோதனை மையத்திற்கு நேரில் சென்றே ஆக வேண்டும் என்கிற நிலை இருக்கின்றது. இந்தியாவில் வீட்டிற்கே வந்து பியூசி-க்கான சோதனையைச் செய்யும் கூடும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஆகையால், சோதனைக்கு வாகனம் நேரில் எடுத்து செல்ல வேண்டும் என்பது கட்டாயம் என்கிற நிலை இருக்கின்றது.

பியூசி சான்றை பெற என்ன செய்ய வேண்டும்?.. இதை ஆன்லைனில் பெற முடியுமா?.. இதோ முழு விபரம்!

முறையான சோதனை கூடத்தில் பியூசி-க்கான டெஸ்டை மேற்கொள்ளப்பட்ட பின்னரே நம்முடைய வாகனத்திற்கான சான்று பாரிவாஹன் தளத்தில் அப்ளோட் செய்யப்படும். குறிப்பிட்ட சில தரவுகளை உள்ளிடுவதன் வாயிலாக எங்கிருந்து வேண்டுமானாலும் ஆவணத்தை டவுண்லோடு செய்து கொள்ள முடியும். அதேவேலையில், சோதனை மேற்கொள்ளப்பட்ட தளத்தை நேரில் விசிட் செய்வதன் வாயிலாகவும் பியூசி சான்றை பெற முடியும்.

பியூசி சான்றை பெற என்ன செய்ய வேண்டும்?.. இதை ஆன்லைனில் பெற முடியுமா?.. இதோ முழு விபரம்!

அரசு நிர்ணயித்திருப்பதன்படி ரூ. 60 முதல் ரூ. 100 வரை பியூசி-க்கு கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. புதிய வாகனங்களுக்கான பியூசி சான்று ஓராண்டுக்கும், பழைய வாகனங்களுக்கு 6 மாதங்களும் செல்லுபடியாகும் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. சோதனை மேற்கொள்ளப்பட்ட ஒரே நாளில் பியூசி சான்று வழங்கப்படுகின்றன. உரிய பியூசி சான்று இல்லாத அல்லது அதிக காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ. 1000 முதல் ரூ. 2000 வரை அபராதம் விதிக்க முடியும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here we explained how to get puc certificate via online
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X