நடிகை அதிதி வாங்கிய அசத்தலான சொகுசு கார்... அவங்கள மாதிரியே ரொம்ப அழகா இருக்கு!..

நடிகை அதிதி விலையுயர்ந்த சொகுசு காரை புதிதாக வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்திய நடிகர்கள் பலர் பயன்படுத்தும் சொகுசு காரை வாங்கிய நடிகை அதிதி... அவங்கள மாதிரியான ரொம்ப அழகா இருக்கு!

தமிழ், இந்தி என இந்தியாவின் பல மொழி திரை படங்களில் நடித்து வருபவர் பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதரி. இவர் தற்போது மிக மிக விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆடி (Audi) நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக விளங்கும் க்யூ7 (Q7) சொகுசு கார் மாடல் இருக்கின்றது. இந்த காரையே அதிதி தற்போது வாங்கியிருக்கின்றார்.

இந்திய நடிகர்கள் பலர் பயன்படுத்தும் சொகுசு காரை வாங்கிய நடிகை அதிதி... அவங்கள மாதிரியான ரொம்ப அழகா இருக்கு!

இந்த சொகுசு காரை ஏற்கனவே பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் என அனைத்து திரையுலகைச் சார்ந்த பிரபலங்கள் பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தானும் ஓர் ஆடி க்யூ7 சொகுசு கார் பிரியை என்பதனை அக்காரை வாங்கியதன் வாயிலாக நடிகை அதிதி நமக்கு தெரியப்படுத்தியிருக்கின்றார்.

இந்திய நடிகர்கள் பலர் பயன்படுத்தும் சொகுசு காரை வாங்கிய நடிகை அதிதி... அவங்கள மாதிரியான ரொம்ப அழகா இருக்கு!

மும்பையில் உள்ள ஓர் ஆடி கார் விற்பனையாளர் வாயிலாகவே சொகுசு காரை அதிதி வாங்கியிருக்கின்றார். சமீபத்திலேயே நடிகை சொகுசு காரை டெலிவரி எடுத்திருக்கின்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமே இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன் வாயிலாகவே அதிதி க்யூ7 காரை வாங்கியிருக்கும் தகவல் வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது.

இந்திய நடிகர்கள் பலர் பயன்படுத்தும் சொகுசு காரை வாங்கிய நடிகை அதிதி... அவங்கள மாதிரியான ரொம்ப அழகா இருக்கு!

மிக சமீபத்திலேயே இக்காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை ஆடி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. அதி-திறன் வாய்ந்த எஞ்ஜின், அதிக சிறப்பம்சங்கள் மற்றும் அதி-நவீன தொழில்நுட்ப அம்சங்கள் என பலவற்றால் ஃபேஸ்லிஃப்ட் ஆடி க்யூ7 அலங்கரிக்கப்பட்டுள்ளது. எனவேதான் இந்த ஆடம்பர காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

இந்திய நடிகர்கள் பலர் பயன்படுத்தும் சொகுசு காரை வாங்கிய நடிகை அதிதி... அவங்கள மாதிரியான ரொம்ப அழகா இருக்கு!

இரு விதமான வேரியண்டுகளில் ஆடி க்யூ7 நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. பிரீமியம் பிளஸ் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரு தேர்வுகளிலேயே க்யூ7 கிடைக்கிறது. இவற்றில் ஒன்றிற்கு ரூ. 88 லட்சமும், மற்றொன்றிற்கு ரூ. 88 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

இந்திய நடிகர்கள் பலர் பயன்படுத்தும் சொகுசு காரை வாங்கிய நடிகை அதிதி... அவங்கள மாதிரியான ரொம்ப அழகா இருக்கு!

தனது புதிய வடிவமைப்பு தத்துவத்தை பயன்படுத்தி க்யூ7 எஸ்யூவி காரை ஆடி வடிவமைத்துள்ளது. ஆகையால், முந்தைய மாடலைக் காட்டிலும் அதிக கவர்ச்சியான ஓர் வாகனமாக அது காட்சியளிக்கின்றது. மேட்ரிக்ஸ் ரக எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பகல்நேர மின் விளக்கு, கொழு கொழு தோற்றம் கொண்ட பம்பர் உள்ளிட்டவை இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய நடிகர்கள் பலர் பயன்படுத்தும் சொகுசு காரை வாங்கிய நடிகை அதிதி... அவங்கள மாதிரியான ரொம்ப அழகா இருக்கு!

காரின் பக்கவாட்டு பகுதியை கவர்ச்சியாக்கும் வகையில் பெரிய அலாய் வீல்கள், கட்டுமஸ்தான பாடி பேனல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் காரின் பின் பகுதியும் அதிக கவர்ச்சியானதாக காட்சியளிக்கின்றது. இதன் அழகு முன் பக்கத்திற்கு இணையானதாகக் காட்சியளிக்கின்றது. பின் பக்கத்திலும் எல்இடி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்திய நடிகர்கள் பலர் பயன்படுத்தும் சொகுசு காரை வாங்கிய நடிகை அதிதி... அவங்கள மாதிரியான ரொம்ப அழகா இருக்கு!

ஆடி க்யூ7 சொகுசு கார் பன்முக நிற தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். கர்ரரா வெள்ளை, மிதோஸ் கருப்பு, நவர்ரா நீலம், சாமுராய் கிரே மற்றும் ஃப்ளோரட் சில்வர் ஆகிய நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன், இரு விதமான உட்புற நிற தேர்விலும் இக்கார் விற்பனைக்கு வழங்கப்படுகின்றது. சைகா பீஜ் மற்றும் ஓகபி பிரவுண் ஆகிய நிறங்களில் அது கிடைக்கின்றது.

இந்திய நடிகர்கள் பலர் பயன்படுத்தும் சொகுசு காரை வாங்கிய நடிகை அதிதி... அவங்கள மாதிரியான ரொம்ப அழகா இருக்கு!

ஆடி நிறுவனம் இக்காரில் அதிக திறனை வெளியேற்றக் கூடிய 3.0 லிட்டர் வி6 டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டாரில் 48வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹைபிரிட் சிஸ்டம் அதிகபட்சமாக 340 எச்பி பவர் மற்றும் 500 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்தகைய சூப்பரான காரையே நடிகை அதிதி தற்போது வாங்கியிருக்கின்றார். ஆனால், இவர் எந்த வேரியண்டை வாங்கியுள்ளார் என்பது பற்றிய தெளிவான விபரம் தெரியவில்லை.

Article Published On: Thursday, May 5, 2022, 8:30 [IST]
English summary
Hey sinamika actress aditi rao hydari buys brand new audi q7
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+