அம்பாசடரை தொடர்ந்து கான்டெஸ்ஸா மாடலையும் இந்தியா கொண்டு வருகிறது ஹிந்துஸ்தான் மோட்டார்.. எல்லாரும் ஹேப்பிதானே!

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் (Hindustan Motors), கான்டெஸ்ஸா (Contessa) -விற்கான வர்த்தக பதிவை இந்தியாவில் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அம்பாசடரை தொடர்ந்து கான்டெஸ்ஸா மாடலையும் இந்தியா கொண்டு வருகிறது ஹிந்துஸ்தான் மோட்டார்... அப்புறம் என்ன எல்லாரும் ஹேப்பிதானே!

ஹிந்துஸ்தான் மோட்டார் (Hindustan Motors), நிறுவனம் வெகு விரைவில் அதன் புகழ்பெற்ற அம்பாசடர் (Ambassador) காரை இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்ய இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகன. இந்த தகவல் இந்திய வாகன பிரியர்கள் மத்தியில் பெருத்த ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

அம்பாசடரை தொடர்ந்து கான்டெஸ்ஸா மாடலையும் இந்தியா கொண்டு வருகிறது ஹிந்துஸ்தான் மோட்டார்... அப்புறம் என்ன எல்லாரும் ஹேப்பிதானே!

இந்த மாதிரியான சூழ்நிலையில் கூடுதல் குஷியை ஏற்படுத்தும் வகையில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் ஓர் தரமான சம்பவத்தை இந்தியாவில் தற்போது நிகழ்த்தியிருக்கின்றது. அது, கான்டெஸ்ஸா எனும் பெயருக்கான வர்த்தக பதிவை செய்திருக்கின்றது. இதன் வாயிலாக விரைவில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் கான்டெஸ்ஸா (Contessa) எனும் பெயரில் புதுமுக வாகனத்தை இந்தியாவிற்கு கொண்டு வர இருப்பது உறுதியாகியுள்ளது.

அம்பாசடரை தொடர்ந்து கான்டெஸ்ஸா மாடலையும் இந்தியா கொண்டு வருகிறது ஹிந்துஸ்தான் மோட்டார்... அப்புறம் என்ன எல்லாரும் ஹேப்பிதானே!

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவிற்கு புதியது அல்ல. இந்த நிறுவனமே கடந்த காலங்களில் அம்பாசடர் போன்ற புகழ்பெற்ற வாகன மாடல்களை நாட்டில் விற்பனைக்கு வழங்கியது. அந்தவகையில், அது கடந்த காலங்களில் விற்பனைச் செய்த மிக முக்கியமான கார் மாடல்களில் கான்டெஸ்ஸா-வும் ஒன்று.

அம்பாசடரை தொடர்ந்து கான்டெஸ்ஸா மாடலையும் இந்தியா கொண்டு வருகிறது ஹிந்துஸ்தான் மோட்டார்... அப்புறம் என்ன எல்லாரும் ஹேப்பிதானே!

இதனையே புதிய அவதாரத்தில் நிறுவனம் மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வரப் போகின்றதா என்ற சந்தேகத்தை, நிறுவனத்தின் தற்போதைய வர்த்தக பதிவு செயல் நாட்டு மக்கள் மத்தியில் உருவாக்கியிருக்கின்றது. கான்டெஸ்ஸா கார்குறித்த தகவல்கள் வெளியாகுவது இது முதல் முறையல்ல.

அம்பாசடரை தொடர்ந்து கான்டெஸ்ஸா மாடலையும் இந்தியா கொண்டு வருகிறது ஹிந்துஸ்தான் மோட்டார்... அப்புறம் என்ன எல்லாரும் ஹேப்பிதானே!

இதற்கு முன்னதாகவும் இந்த காரின் இந்தியா வருகை குறித்த செய்திகள் வெளியாகி, அவை வாகன உலகின் தலையங்கமாக மாறின. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே வர்த்தக பதிவு பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இது ஏற்கனவே இக்காரின் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தவர்களின் ஆவலை இன்னும் பல மடங்கு அதிகரிக்க செய்யும் வகையில் அமைந்துள்ளது.

அம்பாசடரை தொடர்ந்து கான்டெஸ்ஸா மாடலையும் இந்தியா கொண்டு வருகிறது ஹிந்துஸ்தான் மோட்டார்... அப்புறம் என்ன எல்லாரும் ஹேப்பிதானே!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அம்பாசடர் கார் பற்றிய தகவல் வெளியாகியபோது, சில முக்கிய தகவல்களை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் உத்தம் போஸ் பகிர்ந்துக் கொண்டார். "புதிய எஞ்ஜினுக்கான மெக்கானிக்கல் மற்றும் டிசைன் வேலைகள் மேம்பட்ட நிலையை எட்டியிருப்பதாக" தெரிவித்தார். இதுபோன்று மிக சொற்பமான தகவல்களையே அவர் பரிமாறிக் கொண்டார்.

அம்பாசடரை தொடர்ந்து கான்டெஸ்ஸா மாடலையும் இந்தியா கொண்டு வருகிறது ஹிந்துஸ்தான் மோட்டார்... அப்புறம் என்ன எல்லாரும் ஹேப்பிதானே!

கான்டெஸ்ஸா கார்குறித்த எந்த தகவலையும் அவர் அப்போது தெரிவிக்கவில்லை. இந்த மாதிரியான சூழலில் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் வகையில் வர்த்தக பதிவு பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது. இதன் வாயிலாக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஒன்றுக்கும் மேற்பட்ட தனது தயாரிப்புகளை இந்தியாக் கொண்டு வர திட்டமிட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

அம்பாசடரை தொடர்ந்து கான்டெஸ்ஸா மாடலையும் இந்தியா கொண்டு வருகிறது ஹிந்துஸ்தான் மோட்டார்... அப்புறம் என்ன எல்லாரும் ஹேப்பிதானே!

இந்திய சந்தையில் அம்பாசிடர் காருக்கு முன்னதாகவே கான்டெஸ்ஸா வாகனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனை பணிகளை ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுத்தியது. 1984ம் ஆண்டிலேயே இந்த காரை இந்தியாவில் ஹிந்துஸ்தான் மோட்டார் அறிமுகப்படுத்தியது. அப்போது நல்ல வரவேற்பு அக்காருக்கு கிடைத்தது. 2002 இல் இந்த காரை நிறுவனம் வெளியேற்றியது.

அம்பாசடரை தொடர்ந்து கான்டெஸ்ஸா மாடலையும் இந்தியா கொண்டு வருகிறது ஹிந்துஸ்தான் மோட்டார்... அப்புறம் என்ன எல்லாரும் ஹேப்பிதானே!

அதிக கட்டுமஸ்தான தோற்றம் கொண்ட காராக அந்த காலகட்டத்தில் கன்டெஸ்ஸா விற்பனைக்குக் கிடைத்தது. இக்காரில் 1.5 லிட்டர் பிஎம்சி பி-சீரிஸ் மோட்டாரையே ஹிந்துஸ்தான் மோட்டார் பயன்படுத்தியது. இந்த எஞ்ஜின் 50 பிஎஸ் மற்றும் 54 பிஎஸ் என இரு விதமான ட்யூன்-அப்களில் விற்பனைக்குக் கிடைத்தது. இரு மோட்டார் தேர்வுகளிலும் 4 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனே வழங்கப்பட்டது. இந்திய திரைப்படங்கள் சிலவற்றில் இந்த கார் இடம் பெற்றிருப்பது அக்காருக்கான கூடுதல் சிறப்பு தகவலாக உள்ளது.

அம்பாசடரை தொடர்ந்து கான்டெஸ்ஸா மாடலையும் இந்தியா கொண்டு வருகிறது ஹிந்துஸ்தான் மோட்டார்... அப்புறம் என்ன எல்லாரும் ஹேப்பிதானே!

Pic Source:Revokid Vlogs,Mineel Mkraft

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அம்பாசடர் பிராண்ட் வாகனங்களை பியூஜியோட் நிறுவனத்தின் கூட்டணியின் அடிப்படையிலேயே இந்தியாவில் மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த பிராண்டை பியூஜியோட் நிறுவனம் எப்போதோ வாங்கிவிட்டது. ஆகையால், இந்தியர்களின் மனம் கவர்ந்த அம்பாசடர் இவர்களின் கூட்டணியின் அடிப்படையிலேயே இந்த வர இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 7, 2022, 16:35 [IST]
English summary
Hindustan motors registered and trademarked the name contessa
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+