நடிகர் ஜானி டெப் 45சொகுசு கார்களை வச்சிருக்காராம்! இந்த அரிய வகை காரும் அவர் கிட்ட இருக்கா! செம்ம ஆள இருக்காரே
ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் சுமார் 45 சொகுசு கார்களை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹாலிவுட் திரையுலகின் உச்ச நடிகர்களில் ஜானி டெப்-ம் ஒருவர் இவர். இவரிடத்தில் சொகுசு மற்றும் விலையுயர்ந்த கார்கள் எக்கசக்கமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்போர்ட்ஸ், விண்டேஜ் என அரிய வகை கார்கள் பலவற்றை அவர் தன் வசம் வைத்திருக்கின்றார். அந்தவகையில், அவரிடத்தில் குறைந்தபட்சம் 45 ஆடம்பர கார்களாவது இருக்கும் என கூறப்படுகின்றது.

கார்கள் மட்டுமின்றி சொகுசு வசதிகள் நிறைந்த படகு ஒன்றிற்கும் அவர் சொந்தக்காரராக இருக்கின்றார். இவ்வாறு நடிகர் ஜானி டெப் இடத்தில் வாகனங்கள் பல இருந்தாலும், ஒரு சில வாகனங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் உள்ளன.

அந்தமாதிரியான வாகன மாடல் எதை அவர் பயன்படுத்துகின்றார் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். அதாவது, ஜானி டெப் இடத்தில் அனைவரையும் கவரும் வகையில் உள்ள முக்கியமான கார் மாடல்கள் சிலவற்றின் சுவாரஷ்ய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

செவ்ரோலட் கோர்வெட்டே (Chevrolet Corvette)
செவ்ரோலட் கோர்வெட்டே ஓர் அரிய வகை காராகும். 1959 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட வாகனமே இது. இந்த அரிய வகை காரை திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரிடம் இருந்தே பரிசாக ஜானி டெப் பெற்றிருக்கின்றார். பரிசு கொடுத்த திரைப்பட தயாரிப்பாளர் வேறு யாருமல்ல கிரஹாம் கிங்-தான் அவர்.

தி ரன் டையரி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த பரிசளிப்பு நிகழ்வு நிகழ்த்தப்பட்டது. இந்த விண்டேஜ் கார் ஸ்டீல் பாடிக்கு பதிலாக ஃபைர் கிளாஸ் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட பேனல்களைக் கொண்ட உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே காரின் இலகுவான எடைக்கு காரணமாக இருக்கின்றது. இந்த வாகனத்தின் டாப் ஸ்பீடு மணிக்கு 128 மைல்கள் ஆகும். அதாவது, மணிக்கு 205 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.

போர்ஷே 911 கர்ரேரா எஸ் (Porsche 911 Carrera S)
போர்ஷே நிறுவனம் இந்த சூப்பர் காரின் உற்பத்தி பணிகளை இரண்டே ஆண்டுகள் மட்டுமே மேற்கொண்டது. இந்த காலகட்டத்தில் வெறும் 3687 யூனிட்டுகள் போர்ஷே 911 கர்ரேரா எஸ் மாடல்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. இதில் ஒன்றையே ஜானி டெப் தற்போது பயன்படுத்தி வருகின்றார். 1980களிலேயே 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு அது விற்கப்பட்டது.

அதாவது, தோராயமாக 32 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலையில் அப்போது விற்கப்பட்டிருக்கின்றது. இந்த வாகனத்தில் 200 எச்பி பவரை வெளியேற்றக் கூடிய 3 லிட்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் இன்டீரியர் மிகவும் பிரீமியமானதாக இருக்கும். முழுக்க முழுக்க லெதரால் அது அலங்கரிக்கப்பட்டிருக்கும். மேலும், இதன் டேஷ்போர்டு ஹெட்ஸ் வடிவத்தில் காட்சியளிக்கின்றது.

ரோல்ஸ் ராய்ஸ் வ்ரைத் (Rolls-Royce Wraith)
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தயாரித்த அதி-திறனை வெளிப்படுத்தக் கூடிய கார் மாடல்களில் வ்ரைத்-ம் ஒன்று. இந்த காரில் 6.6 லிட்டர் வி12 மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 591 பிஎச்பி பவரை வெளியேற்றும். மேலும், வெறும் 4.4 செகண்டுகளிலேயே இக்கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இந்தளவிற்கு சூப்பர் ஃபாஸ்ட் திறன் கொண்ட காரையே ஜானி டெப் வைத்திருக்கின்றார். இது அதிக வேகத்தில் செல்லக் கூடிய வாகனம் மட்டுமல்ல மிக மிக அதிகளவில் சொகுசு வசதிகளைத் தாங்கிய வாகனமாகவும் காட்சியளிக்கின்றது.

ஃபெர்ராரி 488 ஸ்பைடர் (Ferrari 488 Spider)
ஃபெர்ராரி 488 ஸ்பைடர் ஓர் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இந்த காரின் மதிப்பு 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகின்றது. இந்த வாகனத்தில் உயர் வேக திறனை வெளியேற்றும் 3.9 லிட்டர் டர்போசார்ஜட் வி8 மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 661 எச்பி பவரை வெளியேற்றும். இது மணிக்கு 200க்கும் அதிகமான கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. அதேவேலையில், மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை வெறும் மூன்றே செகண்டுகளில் எட்டிவிடும்.

லிங்கன் நேவிகேட்டர் (Lincoln Navigator)
லிங்கன் நேவிகேட்டர் பிரமாண்ட தோற்றம் கொண்ட எஸ்யூவி ரக காராகும். அமெரிக்க சந்தையில் உள்ள எஸ்யூவி கார்களிலேயே மிகப் பெரிய உருவம் கொண்ட கார் என்ற புகழுக்கு சொந்தக்காரராக இந்த கார் மாடல் இருக்கின்றது. ஆகையால், இந்த வாகனத்தை பீஸ்ட் என அழைக்கின்றனர். இதனை இவ்வாறு அழைப்பதற்கு ஏற்ப மிக அதிக திறனை வெளியேற்றக் கூடிய மோட்டாரும் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

3.5 லிட்டர் வி6 மோட்டார் லிங்கன் நேவிகேட்டர் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 450 குதிரை திறன் கொண்ட எஞ்ஜின் ஆகும். அனைத்து வீல் இயக்கம், 10 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் பல்வேறு சிறப்பு வசதிகளும் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றது. எட்டு பேர் வரை இந்த வாகனத்தில் மிக தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும். 88,600 அமெரிக்க டாலர்களுக்கு அது விற்கப்படுகின்றது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 69 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.

மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 கேப்ரியோலெட் (Mercedes-Maybach S650 Cabriolet)
ஜானி டெப் வைத்திருக்கும் மிக மிக சூப்பரான கார்களில் மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 கேப்ரியோலெட்-ம் ஒன்று. ஜானி டெப் அடிக்கடி பயன்படுத்தும் வாகனங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக, நிகழ்ச்சிகள் மற்றும் பார்ட்டிகளில் கலந்துக் கொள்ள அவர் அதிகம் பயன்படுத்தும் கார்களில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது. இந்த வாகனத்தின் மதிப்பு இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

இந்த காரை மெர்சிடிஸ் நிறுவனம் 2016ம் ஆண்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. இந்த காரில் 6.0 லிட்டர் வி12 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 630 எச்பி பவர் மற்றும் 863 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

இதுமாதிரியான சூப்பரான கார்களையே நடிகர் ஜானி டெப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். அவர் எண்ணற்ற ஹாலிவுட் படங்களில் நடித்திருந்தாலும், அவர் நடிப்பில் வெளி வந்த 'பைரேட்ஸ் ஆஃப் தி கரிபீயன்' படமே அவரது ரசிகர்களின் மிகுந்த பிரியமான திரைப்படமாக இருக்கின்றது. இவருக்கு உலகளவில் ஃபேன்கள் பட்டாளம் உள்ளது.

சமீபத்தில் தன்னுடைய முன்னாள் மனைவி நடிகை ஆம்பர் ஹெர்ட் தொடர்ந்த அவதூறு வழக்கில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக இங்கிலாந்து நாட்டில் உள்ள இந்திய உணவகத்தில் பிரமாண்ட பார்ட்டியை வைத்து அவர் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








