ஹாலிவுட் ஸ்டார் வில் ஸ்மித் சிறந்த நடிகர் மட்டுமல்ல, மிக சிறந்த வாகன காதலரும் ஆவார்! இவ்ளோ கார் வச்சிருக்காரா?

சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது வென்றிருக்கும் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் வைத்திருக்கும் கார் கலெக்சன் பற்றிய தகவலை கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹாலிவுட் ஸ்டார் வில் ஸ்மித் சிறந்த நடிகர் மட்டுமல்ல... மிக சிறந்த வாகன காதலரும் ஆவார்! எத்தன கார்கள வச்சிருக்காரு தெரியுமா?

சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றிருக்கும் பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் வில் ஸ்மித், மிகப் பெரிய வாகன காதலர் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். அவரிடத்தில் எண்ணற்ற சொகுசு மற்றும் அரிய வகை வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவையே வில் ஸ்மித் ஓர் வாகன பிரியர் என்பதற்கான சான்றாக இருக்கின்றது.

ஹாலிவுட் ஸ்டார் வில் ஸ்மித் சிறந்த நடிகர் மட்டுமல்ல... மிக சிறந்த வாகன காதலரும் ஆவார்! எத்தன கார்கள வச்சிருக்காரு தெரியுமா?

அப்படி என்ன மாதிரியான கார்கள் அவருகிட்ட இருக்குதுனு கேக்குறீங்களா?, இந்த கேள்விக்கான பதிலை-தாங்க நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, அவரிடத்தில் இருப்பதிலேயே மிக முக்கியமான மற்றும் அரிய வகை வாகனங்கள் பற்றி பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஹாலிவுட் ஸ்டார் வில் ஸ்மித் சிறந்த நடிகர் மட்டுமல்ல... மிக சிறந்த வாகன காதலரும் ஆவார்! எத்தன கார்கள வச்சிருக்காரு தெரியுமா?

1695 ஃபோர்டு மஸ்டாங் (1965 Ford Mustang)

"என்னது 1965 மாடல் ஃபோர்டு மஸ்டாங் கார வில் ஸ்மித் வச்சிருக்காரா"... ஆமாங்க இந்த காரை வில் ஸ்மித் தற்போதும் பயன்படுத்தும் வகையில் வைத்திருக்கின்றார். இது அவருக்கு மிகவும் பிடித்த வாகனங்களில் ஒன்று கூறப்படுகின்றது. மிகவும் கட்டுமஸ்தான மற்றும் கவர்ச்சியான தோற்றத்தில் அக்கார் இருக்கின்றது.

ஹாலிவுட் ஸ்டார் வில் ஸ்மித் சிறந்த நடிகர் மட்டுமல்ல... மிக சிறந்த வாகன காதலரும் ஆவார்! எத்தன கார்கள வச்சிருக்காரு தெரியுமா?

மேலும், தற்போதும் அந்த வாகனம் புதுப்பொலிவுடன் காட்சியளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 4.7 லிட்டர் வி8 பெட்ரோல் மோட்டாரே 1965 மாடல் ஃபோர்டு மஸ்டாங் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்தில், ரெட்ரோ அணிகலன்கள் அலங்காரத்துடன் அக்கார் கண்களைக் கவரும் வகையில் காட்சியளிக்கின்றது.

ஹாலிவுட் ஸ்டார் வில் ஸ்மித் சிறந்த நடிகர் மட்டுமல்ல... மிக சிறந்த வாகன காதலரும் ஆவார்! எத்தன கார்கள வச்சிருக்காரு தெரியுமா?

மேபேக் 57எஸ் (Maybach 57S)

மேபேக் பிராண்டின் மறுமலர்சிக்கு பின்னர் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட முதல் வாகன மாடல் மேபேக் 57எஸ் ஆகும். 2005ம் ஆண்டிலேயே இக்காரை மேபேக் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இக்காரின் சில முக்கிய அம்சங்கள் ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் காருடன் ஒத்துப் போகும் வகையில் காட்சியளிக்கின்றது.

ஹாலிவுட் ஸ்டார் வில் ஸ்மித் சிறந்த நடிகர் மட்டுமல்ல... மிக சிறந்த வாகன காதலரும் ஆவார்! எத்தன கார்கள வச்சிருக்காரு தெரியுமா?

நப்பா லெதர், மரத்தாலான கேபின், மசாஜ் செய்யும் வசதிக் கொண்ட இருக்கைகள், பவர் ஹீட்டட் ரக முன் பக்க இருக்கை என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன. இத்துடன், 6 லிட்டர் வி12 அதி-திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்ட மோட்டார் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹாலிவுட் ஸ்டார் வில் ஸ்மித் சிறந்த நடிகர் மட்டுமல்ல... மிக சிறந்த வாகன காதலரும் ஆவார்! எத்தன கார்கள வச்சிருக்காரு தெரியுமா?

இந்த மோட்டாார் அதிகபட்சமாக 612 பிஎஸ் பவரையும், 1000 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டது. இதன் திறனை இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால், இந்த கார் வெறும் ஐந்து செகண்டுகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டக் கூடியது என சொல்லலாம்.

ஹாலிவுட் ஸ்டார் வில் ஸ்மித் சிறந்த நடிகர் மட்டுமல்ல... மிக சிறந்த வாகன காதலரும் ஆவார்! எத்தன கார்கள வச்சிருக்காரு தெரியுமா?

இத்தகைய திறன் கொண்ட காரையே வில் ஸ்மித் தற்போதும் பயன்படுத்தி வருகின்றார். ஒட்டுமொத்தமாகவே மேபேக் நிறுவனம் 300 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைக்காக உருவாக்கியது. அவற்றில் ஒன்றையே அதிர்ஷ்டவசமாக வில் ஸ்மித் வைத்திருக்கின்றார்.

ஹாலிவுட் ஸ்டார் வில் ஸ்மித் சிறந்த நடிகர் மட்டுமல்ல... மிக சிறந்த வாகன காதலரும் ஆவார்! எத்தன கார்கள வச்சிருக்காரு தெரியுமா?

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls-Royce Ghost)

சொகுசு வசதிகளை மிக தாராளமாக வழங்கக் கூடிய வாகனமாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. அந்தவகையில் நிறுவனத்தின் சூப்பரான சொகுசு வசதிகள் கொண்ட கோஸ்ட் கார் மாடலேயே வில் ஸ்மித் பயன்படுத்தி வருகின்றார். இந்த காரில் 563 பிஎஸ் பவரை வெளியேற்றக் கூடிய 6.75 லிட்டர் வி12 மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹாலிவுட் ஸ்டார் வில் ஸ்மித் சிறந்த நடிகர் மட்டுமல்ல... மிக சிறந்த வாகன காதலரும் ஆவார்! எத்தன கார்கள வச்சிருக்காரு தெரியுமா?

இது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை அதி-திறன் கொண்ட காராக காண்பிக்க உதவுகின்றது. இந்த காரில் மினி ஃபிரிட்ஜ், குளிர்பானங்களை வைப்பதற்கான இடம் மற்றும் பொழுதுபோக்கு திரைகள் என சிறப்பம்சங்கள் பல இடம் பெற்றிருக்கின்றது. இதுபோன்று பன்முக சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கும் காரையே வில் ஸ்மித் வைத்திருக்கின்றார்.

ஹாலிவுட் ஸ்டார் வில் ஸ்மித் சிறந்த நடிகர் மட்டுமல்ல... மிக சிறந்த வாகன காதலரும் ஆவார்! எத்தன கார்கள வச்சிருக்காரு தெரியுமா?

பென்ட்லீ அசுரே (Bentley Azure)

பென்ட்லீ நிறுவனத்தின் இந்த தயாரிப்பும் மிக அதிக சொகுசு வசதிகளை வாரி வழங்கும் வாகனமாக காட்சியளிக்கின்றது. இது ஓர் செடான் ரக கார் மாடலாகும். இந்த கார் மிக த்ரில்லான இயக்க அனுபவத்தை வழங்க உதவுகின்றது. இதற்காக 6.75 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹாலிவுட் ஸ்டார் வில் ஸ்மித் சிறந்த நடிகர் மட்டுமல்ல... மிக சிறந்த வாகன காதலரும் ஆவார்! எத்தன கார்கள வச்சிருக்காரு தெரியுமா?

இது அதிக திறனை வெளியேற்றக் கூடிய எஞ்ஜின் ஆகும். 456 பிஎஸ் பவரை இது வெளியேற்றக் கூடியது. மேலும், 5.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டக் கூடிய திறனையும் இது கொண்டிருக்கின்றது.

ஹாலிவுட் ஸ்டார் வில் ஸ்மித் சிறந்த நடிகர் மட்டுமல்ல... மிக சிறந்த வாகன காதலரும் ஆவார்! எத்தன கார்கள வச்சிருக்காரு தெரியுமா?

முதல் தலைமுறை டெஸ்லா ரோட்ஸ்டர் (First-gen Tesla Roadster)

அமெரிக்காவை மையமாகக் கொண்டு மின் வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு வருகின்றது டெஸ்லா நிறுவனம். இந்நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக டெஸ்லா ரோட்ஸ்டர் இருக்கின்றது. இந்த கார் மாடலின் முதல் தலைமுறை வெர்ஷனையே வில் ஸ்மித் தற்போது வைத்திருக்கின்றார். இந்த எலெக்ட்ரிக் கார் வெறும் 3.7 செகண்டுகளில் 0-100kmph வேகத்தை எட்டும் திறனைக் கொண்டிருக்கின்றது.

ஹாலிவுட் ஸ்டார் வில் ஸ்மித் சிறந்த நடிகர் மட்டுமல்ல... மிக சிறந்த வாகன காதலரும் ஆவார்! எத்தன கார்கள வச்சிருக்காரு தெரியுமா?

பிஎம்டபிள்யூ ஐ8 (BMW i8)

இது ஓர் பிளக் இன் ஹைபிரிட் வசதிக் கொண்ட காராகும். இந்த காரையும் வில் ஸ்மித் வைத்திருக்கின்றார். ஸ்போர்ட்ஸ் வாகன தோற்றத்தில் காட்சியளிக்கும் இக்காரில் 1.5 லிட்டர் டர்போசார்ஜட் இன்லைன் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், ஓர் மின் மோட்டாரும் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ ஐ8 369 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறனைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹாலிவுட் ஸ்டார் வில் ஸ்மித் சிறந்த நடிகர் மட்டுமல்ல... மிக சிறந்த வாகன காதலரும் ஆவார்! எத்தன கார்கள வச்சிருக்காரு தெரியுமா?

கடில்லாக் எஸ்கலேட் இஎஸ்வி (Cadillac Escalade ESV)

ஹாலிவுட் பிரபலங்கள் பலரிடத்தில் கடில்லாக் நிறுவனத்தின் கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், வில் ஸ்மித் இடத்தில் கடில்லாக் எஸ்கலேட் இஎஸ்வி கார் பயன்பாட்டில் உள்ளது. இது ஓர் எஸ்யூவி ரக வாகனமாகும். இந்த காரில் 5.3 லிட்டர் எல்எம்7 வோர்டக்ஸ் வி8 மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 420 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது.

ஹாலிவுட் ஸ்டார் வில் ஸ்மித் சிறந்த நடிகர் மட்டுமல்ல... மிக சிறந்த வாகன காதலரும் ஆவார்! எத்தன கார்கள வச்சிருக்காரு தெரியுமா?

மேலே பார்த்ததை போல் இன்னும் பல சூப்பரான கார்கள் வில் ஸ்மித்திடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. அவர் மிக சிறந்த நடிகர் மட்டுமல்ல அதீத வாகன பிரியரும்கூட என்பதை வெளிக்காட்டும் வகையில் அவரின் வாகன கலெக்ஷன் இருக்கின்றது. வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை, கிங் ரிச்சர்ட் எனும் திரைப்படத்திற்காக பெற்றார்.

ஹாலிவுட் ஸ்டார் வில் ஸ்மித் சிறந்த நடிகர் மட்டுமல்ல... மிக சிறந்த வாகன காதலரும் ஆவார்! எத்தன கார்கள வச்சிருக்காரு தெரியுமா?

இந்த விருது வழங்கும் மேடையாலேயே அவர் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார். தன்னுடைய மனைவியின் சிகையை வைத்து கிண்டல் செய்த காரணத்தினால், சற்றே உணர்ச்சி வசப்பட்ட அவர், சக நடிகர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் பலார் விட்டார். வில் ஸ்மித்தின் இந்த செயலுக்கு பலர் தங்களின் ஆதரவையும், ஒரு சிலர் தங்களின் கண்டனத்தையும் வழங்கி வருகின்றனர்.

ஹாலிவுட் ஸ்டார் வில் ஸ்மித் சிறந்த நடிகர் மட்டுமல்ல... மிக சிறந்த வாகன காதலரும் ஆவார்! எத்தன கார்கள வச்சிருக்காரு தெரியுமா?

அதேநேரத்தில், வில் ஸ்மித் அவரது மனைவியை இந்தளவிற்கு காதல் செய்து வருகின்றாரா என பலரை இச்செயல் ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது. மேலும், தனது மனைவியை போலவே வாகனங்கள் மீதும் அதிகம் பிரியம் கொண்டவர் அவர் என்பதை வெளிக்காட்டும் வகையில் வில் ஸ்மித்தின் வாகன கலெக்ஷன் இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 30, 2022, 14:31 [IST]
English summary
Hollywood star will smith and his car collection
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+