காரை இப்ப வாங்குங்க... 2023ல பணம் கட்டுனா போதும்... இன்னும் என்ன யோசனை... இப்பவே கார் வாங்க ஓடுங்க...

ஹோண்டா நிறுவனம் தனது ஹோண்டா சிட்டி மற்றும் அமேஸ் கார்களுக்கு கோடாக் மஹிந்திரா பிரைம் நிறுவனத்துடன் இணைந்து இப்பவே கார் வாங்கி 2023ல் பணம் செலுத்தும் புதிய ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது, இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

காரை இப்ப வாங்குங்க . . . 2023ல பணம் கட்டுனா போதும் . . . இன்னும் என்ன யோசனை . . . இப்பவே கார் வாங்க ஓடுங்க . . .

இன்று பெரும்பாலானோர் கார்களை பைனான்ஸ் அடிப்படையில்தான் வாங்குகின்றனர். அதாவது இன்று காரை கடனுக்கு வாங்கிவிட்டு அதன் பிறகு மாதம் மாதம் இதற்கு இஎம்ஐயை கட்டி வருகின்றனர். இப்படியாக நீங்கள் வாங்க நினைத்தால் உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டமான வாய்ப்பு காத்திருக்கிறது. நீங்கள் இப்பொழுதே முன்பணம் செலுத்தி காரை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் அதற்கான இஎம்ஐயை 2023ல் கட்ட ஆரம்பித்தால் போதும்.

காரை இப்ப வாங்குங்க . . . 2023ல பணம் கட்டுனா போதும் . . . இன்னும் என்ன யோசனை . . . இப்பவே கார் வாங்க ஓடுங்க . . .

இந்த ஆஃபரை கேட்டுகும் போதே சுவாரஸ்யமாக இருக்கிறது அல்லவா? இந்த ஆப்ஷனை ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. தீபாவளி நெருங்குவதை ஒட்டி இந்நிறுவனம் கோடாக் மஹிந்திரா வங்கியுடன் கூட்டு வைத்து இந்த ஆஃபரை அறிவித்துள்ளது. அதன்படி நீங்கள் இந்தியாவில் எந்த ஹோண்டா ஷோரூமில் வேண்டுமானாலும் நீங்கள் இந்த ஆப்ஷனில் காரை வாங்க முடியும். இந்த திட்டத்திற்கு "டிரைவ் இவ் 2022 பே இன் 2023 எனப் பெயர் வைத்துள்ளது. "

காரை இப்ப வாங்குங்க . . . 2023ல பணம் கட்டுனா போதும் . . . இன்னும் என்ன யோசனை . . . இப்பவே கார் வாங்க ஓடுங்க . . .

இந்த திட்டத்தின்படி நீங்கள் கார் வாங்க வேண்டும் என்றால் ஹோண்டா சிட்டி அல்லது ஹோண்டா அமேஸ் இந்த இரண்டில் ஏதாவது ஒரு காரை வாங்கலாம். இந்த காருக்கு கோடாக் மஹிந்திரா ப்ரைம் நிறுவனம்

ஆன்ரோடு விலையில் 85 சதவீதம் வரை கடன் வழங்குகிறது. மீத தொகையை நீங்கள் பணமாகச் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தினால் நீங்கள் உடனடியாக உங்கள் வீட்டிற்கு புதிய காரை எடுத்துச் செல்ல முடியும்.

காரை இப்ப வாங்குங்க . . . 2023ல பணம் கட்டுனா போதும் . . . இன்னும் என்ன யோசனை . . . இப்பவே கார் வாங்க ஓடுங்க . . .

அந்த திட்டத்தின் கீழ் நீங்கள் வாங்கும் காருக்கு முதல் 3 மாதத்திற்கு தவணை கட்ட வேண்டிய தேவையில்லை. அதாவது நீங்கள் இந்த காரை இப்பொழுது வாங்கி பயன்படுத்தலாம். இந்த காருக்கு கோடாக் நிறுவனம் வழங்கிய கடனுக்கான முதல் இஎம்ஐ-யை அந்நிறுவனம் 3 மாதம் கழித்து அதாவது 2023ம் ஆண்டே பிடிக்கத் துவங்கும். இந்த திட்டத்தின் மூலம் ஹோண்டா நிறுவனம் பண்டிகை காலத்தில் தனது விற்பனையை அதிகரிக்கும் என்பதால் இதை அறிவித்துள்ளது. இந்த திட்டம் வரும் அக்டோபர் 31ம் தேதி வரை மட்டுமே இருக்கும். அதற்கும் கார் வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை.

காரை இப்ப வாங்குங்க . . . 2023ல பணம் கட்டுனா போதும் . . . இன்னும் என்ன யோசனை . . . இப்பவே கார் வாங்க ஓடுங்க . . .

இது குறித்து ஹோண்டா கார்ஸ் நிறுவனம் மார்கெட்டிங் மற்றும் சேல்ஸ் பிரிவின் துணைத் தலைவர் குர்னால் பெல் கூறும் போது : " கோடாக் மஹிந்திரா பிரைம் நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தம் ஹோண்டா கார் விரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். அவர்கள் ஹோண்டா சிட்டி மற்றும் ஹோண்டா அமேஸ் இந்த இரண்டில் எதை வேண்டுமானாலும் இப்பொழுது வாங்கிவிட்டு 3 மாதத்திற்குப் பிறகு இஎம்ஐயை துவங்கலாம். இதன் மூலம் இந்த பண்டிகை காலத்தில் கார் வாங்க நினைப்பவர்கள் பயன்பெற முடியும்" எனக் கூறினார்.

காரை இப்ப வாங்குங்க . . . 2023ல பணம் கட்டுனா போதும் . . . இன்னும் என்ன யோசனை . . . இப்பவே கார் வாங்க ஓடுங்க . . .

ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி மற்றும் அமேஸ் ஆகிய 2 கார்களுமே பிரபலமான கார்கள் தான். ஹோண்டா அமேஸ் கார் ரூ6.63 லட்சம் முதல் ரூ11.50 லட்சம் வரையில் பல வேரியன்ட்களில் விற்பனையாகிறது. சமீபத்தில் தான் இந்த கார் 5 லட்சம் கார்கள் விற்பனை என்ற இலக்கை தாண்டியது. இந்த கார் 1.2 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஐ-டிடெக் ஆகிய இரண்டு வகையான இன்ஜின் ஆப்ஷனுடன் வருகிறது. இதில் மேனுவல் மற்றும் சிவிடி கியர் ஆப்ஷன்கள் இந்த காரில் உள்ளன.

காரை இப்ப வாங்குங்க . . . 2023ல பணம் கட்டுனா போதும் . . . இன்னும் என்ன யோசனை . . . இப்பவே கார் வாங்க ஓடுங்க . . .

ஹோண்டா சிட்டியைப் பொருத்தவரை பிரிமியம் செடான் கார் இந்த கார் ரூ11.60 லட்சம் முதல் ரூ15.55 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த காரும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனையாகிறது. ஹோண்டா நிறுவனம் இந்த காரின் ஹைபிரிட் வெர்ஷனையும் இந்தாண்டு அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ19.89 லட்சம்.

காரை இப்ப வாங்குங்க . . . 2023ல பணம் கட்டுனா போதும் . . . இன்னும் என்ன யோசனை . . . இப்பவே கார் வாங்க ஓடுங்க . . .

ஹோண்டா கார்ஸ் மற்றும் கோடாக் மஹிந்திரா ப்ரைம் நிறுவனம் இணைந்து வழங்கும் இந்த 3 மாத சலுகை இஎம்ஐ திட்டத்தில் இந்த இரண்டு காரில் எந்த வேரியன்டை வேண்டுமானாலும் வாங்கலாம். அதற்குத் தகுந்தார் போல காருக்கான கடன் வழங்கப்படும். இதற்கு மேலும் என்ன யோசனை உடனே கிளம்புங்க உங்க ஹோண்டா காரை உடனே புக் பண்ணுங்க...

More from DriveSpark

Article Published On: Monday, October 3, 2022, 18:20 [IST]
English summary
Honda announces buy now pay later schemes for amaze and city cars
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+