7 ஆயிரத்திற்கு சரிந்த இந்தியாவில் ஹோண்டா கார்களின் விற்பனை!! ஆனா ஏற்றுமதி தூள் கிளப்புது!

கொரோனா வைரஸ் பரவலால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகள் தளர்த்தப்பட்டுள்ளதால் தற்சமயம் பயணிகள் கார்களுக்கான தேவை நல்லப்படியாகவே உள்ளது. ஆனால் தேவைக்கு ஏற்ப கார்களை தயாரிக்க முடியாமல் தயாரிப்பு நிறுவனங்கள்தான் பெரிதும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக, குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறையை சொல்லலாம்.

7 ஆயிரத்திற்கு சரிந்த இந்தியாவில் ஹோண்டா கார்களின் விற்பனை!! ஆனா ஏற்றுமதி தூள் கிளப்புது

இதனால் முன்னணி பிராண்ட்களின் விற்பனை கூட சமீப மாதங்களாக வெகுவாக குறைந்து வருகிறது. இந்த வகையில் ஜப்பானை தலைமையிடமாக கொண்ட ஹோண்டாவின் பயணிகள் கார்கள் விற்பனையும் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் மொத்தமாக 7,187 ஹோண்டா கார்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

7 ஆயிரத்திற்கு சரிந்த இந்தியாவில் ஹோண்டா கார்களின் விற்பனை!! ஆனா ஏற்றுமதி தூள் கிளப்புது

அதுவே 2021 பிப்ரவரியில் ஹோண்டா கார்களின் விற்பனை எண்ணிக்கை 9,324 யூனிட்களாக பதிவாகியது. இந்த வகையில் ஹோண்டா கார்களின் விற்பனை இந்தியாவில் 22.92% சரிந்துள்ளது. இந்த வருடம்-வருடம் ஒப்பீடுகையாவது பரவாயில்லை, மாதம்-மாதம் ஒப்பீடுகை இதனை காட்டிலும் அதிக வித்தியாசத்துடன் உள்ளது. ஏனெனில் கடந்த 2022 ஜனவரி மாதத்தில் மொத்தம் 10,427 ஹோண்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

7 ஆயிரத்திற்கு சரிந்த இந்தியாவில் ஹோண்டா கார்களின் விற்பனை!! ஆனா ஏற்றுமதி தூள் கிளப்புது

இதனுடன் ஒப்பீடுகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 3,240 யூனிட் (31.07%) கார்களை ஹோண்டா குறைவாக விற்பனை செய்துள்ளது. இந்தியா, பல ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு உற்பத்தி சந்தையாக உள்ளது. ஏனெனில் நம் நாட்டில் வாகன தயாரிப்பிற்கான செலவும், போக்குவரத்து செலவும் மற்ற நாடுகளுடன் ஒப்பீடுகையில் சற்று குறைவே ஆகும். இதனாலேயே மற்ற நாடுகளுக்கான கார்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

7 ஆயிரத்திற்கு சரிந்த இந்தியாவில் ஹோண்டா கார்களின் விற்பனை!! ஆனா ஏற்றுமதி தூள் கிளப்புது

இந்த வகையில் ஹோண்டாவும் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்களை இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 2,337 ஹோண்டா கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், ஹோண்டா கார்களின் ஏற்றுமதி கடந்த மாதத்தில் நல்லப்படியாகவே இருந்துள்ளது.

Honda Feb-2022 Feb-2021
Domestic 7,187 9,324
Exports 2,337 987
7 ஆயிரத்திற்கு சரிந்த இந்தியாவில் ஹோண்டா கார்களின் விற்பனை!! ஆனா ஏற்றுமதி தூள் கிளப்புது

கடந்த 2022 ஜனவரி மாதத்தில் இதனை காட்டிலும் 35.17% குறைவாக 1,722 ஹோண்டா கார்களும், கடந்த ஆண்டு பிப்ரவரியில் சுமார் 136.78% குறைவாக 987 ஹோண்டா கார்களுமே இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி என இரண்டையும் சேர்த்து கடந்த மாதத்தில் மொத்தமாக 9,524 கார்களை ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

7 ஆயிரத்திற்கு சரிந்த இந்தியாவில் ஹோண்டா கார்களின் விற்பனை!! ஆனா ஏற்றுமதி தூள் கிளப்புது

ஒட்டுமொத்தமாக 10,311 ஹோண்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த 2021 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கை 7.63% குறைவாகும். அதேபோல் முந்தைய 2022 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையிலும் 21.61% குறைவு. ஏனென்றால் கடந்த ஜனவரி மாதத்தில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்திருந்தது.

7 ஆயிரத்திற்கு சரிந்த இந்தியாவில் ஹோண்டா கார்களின் விற்பனை!! ஆனா ஏற்றுமதி தூள் கிளப்புது

இந்த விற்பனை எண்ணிக்கை குறித்து ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை பிரிவின் இயக்குனர் யூச்சி முரடா கருத்து தெரிவிக்கையில், "கோவிட்-நிலைமை சீராகி வருவதால், சந்தைகள் திறக்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் உணர்வில் முன்னேற்றத்தை நாங்கள் காண்கிறோம். இது தொழில்துறைக்கு சாதகமானது. பாகங்கள் விநியோகத்தை பொறுத்தவரையில், குறைக்கடத்தி பற்றாக்குறை 2022 பிப்ரவரியிலும் எங்களது உற்பத்தி மற்றும் டெலிவிரிகளை தொடர்ந்து பாதித்தது.

7 ஆயிரத்திற்கு சரிந்த இந்தியாவில் ஹோண்டா கார்களின் விற்பனை!! ஆனா ஏற்றுமதி தூள் கிளப்புது

எதிர்காலத்தில் இந்த நிலைமை மேம்படும் என்று நம்புகிறோம். இதனால் சந்தை தேவையை இன்னும் திறம்பட சந்திக்க முடியும்." என்றார். யூச்சி முரடாவின் இந்த பேட்டியின் மூலம் கொரோனா வைரஸ் தற்போதைக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு பாதிப்பாக இல்லை என்பதையும், குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறையே பெரும் தலைவலியாக இவற்றிற்கு உள்ளன என்பதையும் அறிய முடிகிறது.

7 ஆயிரத்திற்கு சரிந்த இந்தியாவில் ஹோண்டா கார்களின் விற்பனை!! ஆனா ஏற்றுமதி தூள் கிளப்புது

உண்மையில் ஹோண்டாவின் இந்த விற்பனை எண்ணிக்கைகள் மற்ற முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் பெரிதும் குறைவு ஆகும். இந்திய சந்தையில் இன்னமும் தனக்கான இடத்தை பிடிக்க ஹோண்டா கார்ஸ் நிறுவனம் போராடி கொண்டுதான் இருக்கிறது. ஆதலால், இந்திய சந்தைக்காக அடுத்ததாக என்னென்ன திட்டங்களை ஹோண்டா வைத்துள்ளது என்கிற கேள்வித்தான் நமக்குள் எழுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, March 4, 2022, 7:30 [IST]
English summary
Honda Car Sales Feb 2022.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+