எவ்ளோ பழைய மாடலா இருந்தாலும் வாங்க ரெடி... இன்னைக்கு நாடே ஹோண்டா சிட்டி காரை பத்திதான் பேசுது... ஏன் தெரியுமா?
இந்தியாவில் அனைவருக்கும் பிடித்த ஹோண்டா சிட்டி கார் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார் நிறுவனங்களில் ஒன்று ஹோண்டா (Honda). இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதன் மூலம் ஹோண்டா நிறுவனம் தற்போது புதிய மைல்கல் ஒன்றை வெற்றிகரமாக கடந்துள்ளது. 2 மில்லியன் (20 லட்சம்) 'மேட் இன் இந்தியா' கார்களை உற்பத்தி செய்திருப்பதுதான் அந்த மைல்கல்.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் 20 லட்சமாவது கார், தபுகெரா தொழிற்சாலையில் (Tapukara Plant) உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை ராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்தில் அமைந்துள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் 20 லட்சமாவது 'மேட் இன் இந்தியா' காராக உற்பத்தி செய்யப்பட்டிருப்பது ஹோண்டா சிட்டி (Honda City) ஆகும்.

இது இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருக்கும் செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஹோண்டா நிறுவனம் கடந்த 1997ம் ஆண்டு டிசம்பர் மாதம்தான், இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்ய தொடங்கியது. கிட்டத்தட்ட 25 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இந்தியாவில் 20 லட்சம் கார்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை ஹோண்டா நிறுவனம் தற்போது கடந்துள்ளது.
தற்போதைய நிலையில் ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் சிட்டி, அமேஸ் (Amaze), ஜாஸ் (Jazz) மற்றும் டபிள்யூஆர்-வி (WR-V) உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், ஹோண்டா சிட்டிதான் வாடிக்கையாளர்கள் பலரின் மனம் கவர்ந்த தயாரிப்பாக உள்ளது. ஹோண்டா சிட்டி காரின் பழைய மாடல்களை வாங்குவதற்கு கூட வாடிக்கையாளர்கள் பலர் தற்போதும் தயாராக உள்ளனர்.
அப்படி இருக்கும்போது சிட்டி மூலமாகவே 20 லட்சம் கார்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை ஹோண்டா எட்டியிருப்பது ஒரு முக்கியமான சிறப்பம்சம்தான். இதன் மூலம் ஹோண்டா சிட்டி கார் அனைவர் மத்தியிலும் மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது. ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தபுகெரா தொழிற்சாலை 450 ஏக்கர்கள் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது.
இங்கு ஒரு ஆண்டுக்கு 1.80 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்வதுடன் மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்கும் ஹோண்டா நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது. தற்போதைய நிலையில் சிட்டி மற்றும் அமேஸ் ஆகிய கார்களை உலகின் 16 நாடுகளுக்கு இங்கிருந்து ஹோண்டா நிறுவனம் ஏற்றுமதி செய்து கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








