நல்ல கம்பெனி ஆச்சே... அதலபாதாளத்தில் ஹோண்டா கார்களின் விற்பனை... போட்டி அதிகமாயிட்டே போகுது!

இந்தியாவில் ஹோண்டா கார்களின் விற்பனை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நல்ல கம்பெனி ஆச்சே... அதலபாதாளத்தில் ஹோண்டா கார்களின் விற்பனை... போட்டி அதிகமாயிட்டே போகுது!

ஹோண்டா (Honda) நிறுவனம் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் வெறும் 7,187 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் 9,324 கார்களை விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் ஹோண்டா நிறுவனம் கார் விற்பனையில் 22.9 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

நல்ல கம்பெனி ஆச்சே... அதலபாதாளத்தில் ஹோண்டா கார்களின் விற்பனை... போட்டி அதிகமாயிட்டே போகுது!

வருடாந்திர ஒப்பீட்டை போல், மாதாந்திர ரீதியில் ஒப்பிட்டாலும் ஹோண்டா நிறுவனம் கார் விற்பனையில் வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளது. இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் நடப்பாண்டு ஜனவரி மாதம் 10,427 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின் வந்த பிப்ரவரி மாதம் ஹோண்டா நிறுவன கார்களின் விற்பனை 7,187 ஆக குறைந்து விட்டது. இது 31.1 சதவீத வீழ்ச்சியாகும்.

நல்ல கம்பெனி ஆச்சே... அதலபாதாளத்தில் ஹோண்டா கார்களின் விற்பனை... போட்டி அதிகமாயிட்டே போகுது!

இந்தியாவில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் ஹோண்டா நிறுவனத்திற்கு ஏழாவது இடம்தான் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் தடுமாற்றத்தை சந்தித்து வருவதை இந்த புள்ளி விபரங்கள் நமக்கு தெளிவாக எடுத்து காட்டுகின்றன.

நல்ல கம்பெனி ஆச்சே... அதலபாதாளத்தில் ஹோண்டா கார்களின் விற்பனை... போட்டி அதிகமாயிட்டே போகுது!

நடப்பாண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா கார் என்ற பெருமையை ஹோண்டா அமேஸ் (Honda Amaze) பெற்றுள்ளது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் 3,405 அமேஸ் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை 4,939 ஆக இருந்தது. இது 31 சதவீத வீழ்ச்சியாகும்.

நல்ல கம்பெனி ஆச்சே... அதலபாதாளத்தில் ஹோண்டா கார்களின் விற்பனை... போட்டி அதிகமாயிட்டே போகுது!

இந்த பட்டியலில் ஹோண்டா சிட்டி (Honda City) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு ஹோண்டா கார் இதுதான். கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2,524 சிட்டி கார்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை 2,836 ஆக உயர்ந்துள்ளது. இது 12 சதவீத வளர்ச்சியாகும்.

நல்ல கம்பெனி ஆச்சே... அதலபாதாளத்தில் ஹோண்டா கார்களின் விற்பனை... போட்டி அதிகமாயிட்டே போகுது!

ஆனால் இந்திய சந்தையில் ஹோண்டா சிட்டி காருக்கு தற்போது போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது. வெகு சமீபத்தில் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) கார் இங்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஹோண்டா சிட்டி காரின் மிக முக்கியமான போட்டியாளர் ஆகும். இதற்கு அடுத்தபடியாக ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

நல்ல கம்பெனி ஆச்சே... அதலபாதாளத்தில் ஹோண்டா கார்களின் விற்பனை... போட்டி அதிகமாயிட்டே போகுது!

இதுவும் ஹோண்டா சிட்டி காருக்கு போட்டியாகதான் நிலைநிறுத்தப்படவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் வரும் மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கிடையே இந்திய சந்தையில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா கார்களின் பட்டியலில் டபிள்யூஆர்-வி (Honda WR-V) மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

நல்ல கம்பெனி ஆச்சே... அதலபாதாளத்தில் ஹோண்டா கார்களின் விற்பனை... போட்டி அதிகமாயிட்டே போகுது!

கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1,004 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் வெறும் 489 ஆக குறைந்துள்ளது. இது 51 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹோண்டா ஜாஸ் (Honda Jazz) நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 856 ஹோண்டா ஜாஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

நல்ல கம்பெனி ஆச்சே... அதலபாதாளத்தில் ஹோண்டா கார்களின் விற்பனை... போட்டி அதிகமாயிட்டே போகுது!

நடப்பு 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 457 ஆக குறைந்துள்ளது. இது 47 சதவீத வீழ்ச்சியாகும். இந்திய சந்தையில் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஹோண்டா ஜாஸ், மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்சா, டாடா அல்ட்ராஸ் மற்றும் ஹூண்டாய் ஐ20 உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வருகிறது.

நல்ல கம்பெனி ஆச்சே... அதலபாதாளத்தில் ஹோண்டா கார்களின் விற்பனை... போட்டி அதிகமாயிட்டே போகுது!

இதில், மாருதி சுஸுகி பலேனோ மற்றும் டொயோட்டா க்ளான்சா ஆகிய கார்களின் 2022 மாடல்கள் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அத்துடன் டாடா அல்ட்ராஸ் காரின் ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மாருதி சுஸுகி பலேனோ காரின் சிஎன்ஜி மாடல் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. எனவே ஹோண்டா ஜாஸ் காருக்கும் போட்டி அதிகரித்து கொண்டே செல்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 26, 2022, 12:52 [IST]
English summary
Honda february 2022 model wise sales amaze leads chart
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+