Just In
- 4 hrs ago
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- 7 hrs ago
நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!
- 7 hrs ago
5 விதமான ட்ரிம், 40 விதமான வேரியண்ட்... பிரமாண்டமான தேர்வுகளில் விற்பனைக்கு வருகிறது புதிய ஸ்கார்பியோ என்!
- 8 hrs ago
வெச்சு செஞ்சுட்டாங்க... ஹூண்டாய் நிறுவனத்தை கதற விட்ட டாடா... இப்படி ஒரு சம்பவத்தை நம்பவே முடியல!
Don't Miss!
- News
ராணி எலிசபெத் கொடுத்த மது விருந்தை மறுத்தவன் நான்.. அமைச்சர் துரைமுருகன் கலகல பேச்சு
- Movies
ஐக்கிய அரபு அமீரக அமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்.. டிரண்டாகும் போட்டோ!
- Sports
மிரட்டும் மழை.. உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு..? இந்தியாவின் பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Finance
ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. உங்க சகவாசமே வேண்டாம் என வெளியேற திட்டமிடும் சிஸ்கோ!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Lifestyle
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Technology
10 மாதம் ஆற்றில் கிடந்த ஐபோன்: உரிமையாளரை தேடிச் சென்ற அதிசியம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
நெக்ஸான், பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக ஹோண்டாவின்2 புதிய கார்கள்... ஆகஸ்ட் மாதம் காத்திருக்கும் தரமான சம்பவம்..
ஹோண்டா நிறுவனம் வரும் ஆகஸ்ட் மாதம் 2 புதிய கார்களை களம் இறக்கத் தயாராகி வருகிறது. அந்த புதிய கார்கள் எப்படி இருக்கும்? மார்கெட்டில் எந்த இடத்தில் களம் இறங்குகிறது? காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பாளர்களில் முக்கியமான நிறுவனம் ஹோண்டா. இந்நிறுவனம் இருசக்கர வாகன விற்பனையில் ஜொலிக்கும் அளவிற்கு கார் தயாரிப்பில் ஜொலிக்கவில்லை. இதற்கு முக்கியமான காரணம் இந்நிறுவனம் கார்களை தயாரிக்கப்பயன்படுத்தப்படும் திட்டங்கள் தான் எனச் சொல்லப்படுகிறது.

தற்போது இந்தியாவில் 4 மீட்டருக்கு குறைவான எஸ்யூவி கார்களின் விற்பனைதான் அதிகமாக இருந்து வருகிறது. மக்கள் இந்த ரக கார்களை வாங்குவதைத் தான் அதிகம் விரும்புகின்றனர். இதனால் பல நிறுவனங்கள் இந்த செக்மெண்டில் தங்கள் கார்களை களமிறக்கி மார்கெட் பங்கைப் பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.

ஆனால் ஹோண்டா நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு தனது சப்-காம்பேக்ட் எஸ்யூவியான சிஆர்-வி காரை நிறுத்தியது. இதற்கு போதுமான அளவு விற்பனையைப் பெறவில்லை என அந்நிறுவனம் காரணம் சொன்னது. இந்த கார் எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத கார் தான் என்றாலும் இதை விலை மிக அதிகமாக இருந்தது. விற்பனை மந்தப்படுத்தியது.

தற்போது இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் இந்நிறுவனம் WR-V காரை விற்பனை செய்து வருகிறது. ஆனால் இந்த காரை சப்- காம்பேக்ட் எஸ்யூவி எனச் சொல்வதை விட கிராஸ் ஓவர் கார் எனச் சொல்வது தான் சரியாக இருக்கும். அதனாலேயே இந்த கார் பெரிய அளவில் இதே செக்மெண்டில் உள்ள மற்ற நிறுவன கார்களுடன் விற்பனையில் போட்டி போட முடியவில்லை.

இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் தற்போது இந்திய மார்கெட்டில் தனது தடத்தைப் பெரிய அளவில் பதிக்க கார் தயாரிப்பில் தனது வியூகத்தை மாற்றியுள்ளது. இதன்படி தற்போது அந்நிறுவனம் இரண்டு புதிய 4 மீட்டருக்கும் குறைவான சப்- காம்பேக்ட் கார் களம் இறக்கத் தயாராகி வருகிறது.

இந்த இரண்டு கார்களையும் ஹோண்டா நிறுவனம் சி செக்மெண்ட் காராகவே தயாரித்து வருகிறது. இந்த இரண்டு கார்களும் ஹோண்டா நிறுவனம் சிறப்பாக விற்பனை செய்து வரும் அமேஸ் கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்பார்மில் தான் இந்த காரும் உருவாக்கப்படுகிறது. இந்த காரை அந்நிறுவனத்தார் PF2 மற்றும் PF2S எனக் குறிப்பிடுகின்றனர்.

இந்தோனேசியாவிலிருந்து இந்த கார் குறித்து வந்த தகவலின் படி இந்நிறுவனம் 2022 GIIAS - ல் வெளியிட்ட RS எஸ்யூவி கான்செப்ட் காரை புரேடெக்ஷன் செய்யத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளது. இதன் படி இந்த காரில் அந்நிறுவனம் 1.5 லிட்டர் I-VTEC பெட்ரோல் இன்ஜினை பொருத்துகிறது. அதாவது ஹோண்டா சிட்டி, மற்றும் பிஆர்வி கார்களில் உள்ள அதே இன்ஜினை இதிலும் பொருத்துகிறது.

முதலில் இப்படியாக ஹோண்டா மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை தயாரிக்கும் பணியைத் துவங்கவுள்ளதாக வெளியான செய்தியின் போது இந்த கார்கள் ஹோண்டா சிட்டியின் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாறாக அமேஸ் பிளாட்ஃபார்மிலேயே இந்த கார்கள் தயாரிக்கப்படுகிறது. ஆனால் அமேஸ் பிளாட்ஃபார்ம் தற்போது கிட்டத்தட்ட ஹோண்டா சிட்டியின் பிளாட்பார்மை ஒத்தே அமைந்திருக்கிறது.

இந்த புதிய சப்- காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் டிசைனை பொருத்தவரை ஹோண்டா இந்தியா மற்றும் ஜப்பானில் உள்ள தலைமை நிறுவனம் இணைந்து உருவாக்குகிறது. இது பெரும்பாலும் அந்நிறுவனம் உருவாக்கிய 3US என்ற கோடு பெயருடன் கூடிய காரையே உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார் மார்கெட்டிற்கு வந்தால் மார்கெட்டில் ஏற்கனவே பலத்த போட்டியில் இருக்கும் டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய காருக்கு போட்டியாக இருக்கும் ஏற்கனவே இந்நிறுவனத்தின் WR-V கார் இந்த செக்மெண்டில் இருப்பதால் புதிய கார் இதிலிருந்து மாறுபட்ட அம்சங்களும் வரும் என எதிர்பார்க்கலாம்.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை ஹோண்டா அமேஸ் காரின் இன்ஜினே இதிலும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேஸ் காரை பொருத்தவரை 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு i-vtec பெட்ரோல் இன்ஜினும், 1.5 லிட்டர் டீசல் இன்ஜினும் ஆப் ஷாக இருக்கிறது. இதில் பெட்ரோல் இன்ஜன் 89 பிஎச்பி பவர்,110 என் எம் டார்க் திறனை வெளிப்படுத்தும், டீசல் இன்ஜின் 99 பிஎச்பி பவர்200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். புதிதாகத் தயாரிக்கப்படும் காரில் ஹைபிரிட் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதம் 6200 கார்கள் வரை விற்பனை செய்யும் திறனுடன் இந்த காரை வெளியிட இந்நிறுவனம் தயாராகி வருகிறது.

புதிதாக வரும் இரண்டாவது காரை பொருத்தவரை சி செக்மெண்டில் பெரிய சைஸ் காராக அறிமுகமாகிறது. இது நேரடியாக ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டாஸ், ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது. இந்த கார்கள் 4.3 மீட்டர் நீளத்திற்கு வடிவமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜினை 5வது தலைமுறை ஹோண்டா சிட்டி காரில் உள்ள இன்ஜின் மற்றும் அதில் உள்ள பவர் டெரைனை பெரும் என எதிர்பார்க்கலாம். மாதம் 4100 கார்களை தயாரிக்கும் கேப்பாசிட்டியுடன் இந்த கார் தயாரிக்கப்படலாம்.

இது போக ஹோண்டா நிறுவனம் 3 வரிசை சீட்கள் கொண்ட 6 அல்லது 7 சீட்டர் கார் ஒன்றை வடிவமைக்கும் பணியிலும் இறங்கியுள்ளது. இது மட்டுமல்லாமல் முழுமையாக எலெக்டரிக்கில் இயங்கும் காரையும் வடிவமைத்து வருகிறது.
-
கூரையை பிச்சுகிட்டு புக்கிங் கொட்டுது! அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா? படம் காட்டும் ஹூண்டாய் கார்!
-
சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் மின்சார கார்! அட இந்த காருக்கா இப்படி ஒருநிலைமை ஆகியிருக்கு?
-
தீப்பிடிப்பு பிரச்சனைகளுக்கு மத்தியில்... புதிய மெகா தொழிற்சாலையை நிறுவும் ஒகினவா!!