திடீர் அறிவிப்பை வெளியிட்ட ஹோண்டா! இவங்க இப்படி பண்ணுவாங்கனு யாரும் எதிர்பாக்கல! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா (Honda) நிறுவனம், இந்திய சந்தையில் பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகிறது. ஹோண்டா கார்கள் தரமானவை என்பதால், இந்நிறுவனத்திற்கு இந்தியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்த சூழலில், ஹோண்டா ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஆம், மற்ற நிறுவனங்களை போலவே, ஹோண்டா நிறுவனமும் தனது கார்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்திய சந்தையில் ஹோண்டா கார்களின் விலை 30 ஆயிரம் ரூபாய் வரை உயரவுள்ளது. அத்துடன் 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் எனவும் ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு சில கார்கள் என்றில்லாமல், அனைத்து கார்களின் விலையும் உயரவுள்ளது.

திடீர் அறிவிப்பை வெளியிட்ட ஹோண்டா! இவங்க இப்படி பண்ணுவாங்கனு யாரும் எதிர்பாக்கல! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

ஹோண்டா நிறுவனம் கார்களின் விலைகளை அதிரடியாக உயர்த்துவதற்கு இரண்டு காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கார்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது முதல் காரணம் ஆகும். அதே நேரத்தில் இந்தியாவில் மிகவும் கடுமையான மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. இந்த விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் கார்களை தயாரிக்க வேண்டும். ஹோண்டா கார்களின் விலைகள் உயர்வதற்கு இது இரண்டாவது காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நாட்டின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai), டாடா மோட்டார்ஸ் (Tata Motors), கியா (Kia), ரெனால்ட் (Renault), எம்ஜி மோட்டார் (MG Motor), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) மற்றும் ஆடி (Audi) போன்ற பல்வேறு நிறுவனங்களும் இந்திய சந்தையில் கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளன. எனவே புதிய கார்களை வாங்க திட்டமிட்டுள்ள இந்திய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கிடையே நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், மிகவும் கடுமையான மாசு உமிழ்வு விதிமுறைகள் (பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் இரண்டாவது பகுதி) 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அமலுக்கு வரவுள்ளன. இந்த விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில், வாகனங்களை மேம்படுத்த வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டியுள்ளது. இதனை ஈடுகட்டுவதற்காகவும், கார் உற்பத்தி நிறுவனங்கள் விலையை உயர்த்த தொடங்கியுள்ளன.

இதன் காரணமாக கார்களின் விலைகள் மட்டுமல்லாது, வர்த்தக வாகனங்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இனி புதிய வாகனங்களை வாங்குவதாக இருந்தால், வாடிக்கையாளர்கள் கூடுதல் தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கும். இதன் காரணமாக புதிய வாகனங்களை வாங்கும் முடிவை பலர் தள்ளி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக இந்தியாவில் யூஸ்டு கார்களின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே ஹோண்டா நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்திய சந்தையில் புதிய எஸ்யூவி (SUV) கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தற்போது தயாராகி வருகிறது. 2023ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த புதிய எஸ்யூவி காரை ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் எஸ்யூவி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதையடுத்து, ஹோண்டா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்களும் (Electric Cars) நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. எனவே டாடா மோட்டார்ஸ், எம்ஜி, கியா, ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா (Mahindra) போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி விட்டன. ஆனால் ஹோண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களுக்கு பதிலாக, ஹைப்ரிட் கார்களில் (Hybrid Cars) கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனமும் கிட்டத்தட்ட இதே முடிவைதான் எடுத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 17, 2022, 23:56 [IST]
English summary
Honda to hike car prices from january 2023 details here
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+