குறைவான விலையில் எதிர்பார்க்கப்படும் ஹாப் ஆக்ஸோ இ-பைக்கின் படங்கள் வெளியீடு! முழு சார்ஜில் 150 கிமீ போகலாம்!

ஹைப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்கின் படங்கள் முதல் முறையாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

குறைவான விலையில் எதிர்பார்க்கப்படும் ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்கின் படங்கள் வெளியீடு! முழு சார்ஜில் 150 கிமீ போகலாம்!

ஹாப் (Hop) எலெக்ட்ரிக் மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் புதுமுக எலெக்ட்ரிக் பைக்கின் படங்களை தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. நிறுவனம் வெகு விரைவில் ஹாப் ஆக்ஸோ (Hop Oxo) எனும் மின்சார மோட்டார்சைக்கிளையே நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதனை அறிமுகம் செய்வதற்கான அனைத்து பணிகளையும் நிறுவனம் துரிதப்படுத்தி வருகின்றது.

குறைவான விலையில் எதிர்பார்க்கப்படும் ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்கின் படங்கள் வெளியீடு! முழு சார்ஜில் 150 கிமீ போகலாம்!

இந்த நிலையிலேயே மின் வாகன பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அப்பைக்கின் படங்களை நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக் மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில் உருவாக்கப்பட்டிருப்பதை தற்போது வெளியாகியிருக்கும் படங்கள் உறுதிப்படுத்துகின்றன.

குறைவான விலையில் எதிர்பார்க்கப்படும் ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்கின் படங்கள் வெளியீடு! முழு சார்ஜில் 150 கிமீ போகலாம்!

கவர்ச்சி மட்டுமின்றி அதிக திறன்கள் கொண்ட வாகனமாகவும் அது விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிக்கு 100 கிமீ வேகம் மற்றும் 150 கிமீ ரேஞ்ஜ் ஆகிய திறன்களுடனேயே ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த நிலையிலேயே பைக்கின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குறைவான விலையில் எதிர்பார்க்கப்படும் ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்கின் படங்கள் வெளியீடு! முழு சார்ஜில் 150 கிமீ போகலாம்!

இதன் வருகையை முன்னிட்டு மேலும் சில சிறப்பான நடவடிக்கைகளையும் ஹாப் நிறுவனம் நாட்டில் மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றது. அதாவது, ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்கின் பீடா டெஸ்டிங் (Beta Testing Program) நிகழ்வை தொடங்கி வைத்திருக்கின்றது. நாட்டில் உள்ள சில முக்கியமான விற்பனையாளர்கள் வாயிலாக இந்த நடவடிக்கையில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

குறைவான விலையில் எதிர்பார்க்கப்படும் ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்கின் படங்கள் வெளியீடு! முழு சார்ஜில் 150 கிமீ போகலாம்!

இந்த பரிசோதனை புரோகிராமை நிறுவனம் விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. புதிய பைக்கின் பக்கம் புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு இப்பணியை தீவிரப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்கில் உள்ள நிறை குறைகளைக் கண்டறிந்து, அவற்றை நீக்கவும் இருக்கின்றது.

குறைவான விலையில் எதிர்பார்க்கப்படும் ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்கின் படங்கள் வெளியீடு! முழு சார்ஜில் 150 கிமீ போகலாம்!

எனவேதான், இந்த செயல் மிக முக்கியமானது என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் கேதன் மேத்தா கூறியுள்ளார். அவர், "ஸ்டுடியோக்கள் மற்றும் ஆய்வகங்கள் வாயிலாக பொறியாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் இந்த வாகனத்தை உருவாக்கியிருந்தாலும், நுகர்வோர் மற்றும் டீலர்களின் கருத்துக்கள் முக்கியமானது" என கூறியிருக்கின்றார்.

குறைவான விலையில் எதிர்பார்க்கப்படும் ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்கின் படங்கள் வெளியீடு! முழு சார்ஜில் 150 கிமீ போகலாம்!

இதனால்தான் விற்பனைக்கு வருவதற்கு முன்னரே இப்பைக்கை பீடா டெஸ்ட்டிற்கு நிறுவனம் வழங்கியிருக்கின்றது. இதுபோன்று ஓர் செயலை இதற்கு முன்னதாக வேறு எந்த நிறுவனமும் நாட்டில் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேநேரத்தில் இந்தியாவின் பல தரமான சாலைகளில் வைத்து இந்த வாகனம் சோதனையோட்டம் செய்யப்பட்டிருக்கின்றது.

குறைவான விலையில் எதிர்பார்க்கப்படும் ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்கின் படங்கள் வெளியீடு! முழு சார்ஜில் 150 கிமீ போகலாம்!

நவீன கால பயன்பாட்டாளர்களுக்காக இவ்வாகனத்தை நிறுவனம் பார்த்து பார்த்து வடிவமைத்து வருகின்றது. ஹாப் நிறுவனம் டெல்லி, ஜெய்ப்பூர், ஜோத்பூர், பாட்னா, கொல்கத்தா, ஹைதராபாத், லூதியானா உள்ளிட்ட மிக முக்கியமான இந்திய நகரங்களில் வைத்தே சோதனையோட்டத்தை செய்திருக்கின்றது. சுமார் 30 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை இந்த சோதனையோட்டம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நிறுவனம் தகவல்கள் தெரிவித்துள்ளது.

குறைவான விலையில் எதிர்பார்க்கப்படும் ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்கின் படங்கள் வெளியீடு! முழு சார்ஜில் 150 கிமீ போகலாம்!

ஹாப் நிறுவனம் ஆண்டுக்கு 1.80 லட்சம் யூனிட் மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட உற்பத்திக் கூடத்தை ஜெய்பூரில் அமைத்திருக்கின்றது. தற்போது நாளுக்கு நூறு யூனிட் மின் வாகன தயாரிப்பு எனும் திறனில் மட்டுமே அது இயங்கிக் கொண்டிருக்கின்றது. இத்தளத்திற்கு ஹாப் மெகாப்ளெக்ஸ் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது.

குறைவான விலையில் எதிர்பார்க்கப்படும் ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்கின் படங்கள் வெளியீடு! முழு சார்ஜில் 150 கிமீ போகலாம்!

இந்த தளத்தின் வாயிலாகவே தற்போது ஹாப் லியோ, ஹாப் லைஃப் உள்ளிட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அறிமுகமாக இருக்கும் ஹாப் ஆக்ஸோவும் இங்கு வைத்தே தயாரிக்கப்பட இருக்கின்றது. இந்த இ-பைக் தற்போது விற்பனையில் இருக்கும் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு போட்யளிக்கும் வகையில் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பு: முதல் ஐந்து படங்களை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை

More from DriveSpark

Article Published On: Saturday, February 26, 2022, 17:44 [IST]
English summary
Hop oxo e bike breaks cover first time ahead of official launch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+