இந்த மாதிரி ஒரு செல்லத்ததான் ரொம்ப நாளா எதிர்பாத்துட்டு இருக்கோம்... 3 நிமிஷ செலவில் 1,000 கிமீ பயணிக்கலாம்!

3 நிமிஷம் செலவு செய்து ஹைட்ரஜனை ஃபில் செய்யும்பட்சத்தில் ஆயிரம் கிலோமீட்டர் பயணிக்கும் எலெக்ட்ரிக் காரை ஓர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் காணலாம், வாங்க.

இந்த மாதிரி ஒரு செல்லத்ததான் ரொம்ப நாளா எதிர்பாத்துட்டு இருக்கோம்... 3 நிமிஷ செலவில் 1,000 கிமீ பயணிக்கலாம்!

பிரெஞ்சு நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று வெறும் மூன்று நிமிஷ ரீ-ஃபில் நேரத்தில் 1,000 கிமீ பயணிக்கும் கார் மாடல் ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளது. தற்போது 2022 பாரிஸ் மோட்டார்ஸ் ஷோ நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இங்கு உலகளாவிய முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வருங்கால தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தி வருகின்றனர்.

இந்த மாதிரி ஒரு செல்லத்ததான் ரொம்ப நாளா எதிர்பாத்துட்டு இருக்கோம்... 3 நிமிஷ செலவில் 1,000 கிமீ பயணிக்கலாம்!

அந்தவகையில், இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஹோப்பியம் (Hopium) எனும் ஃபிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நிறுவனம், அதன் ஹைட்ரஜனால் இயங்கக் கூடிய புதுமுக மெஷினா விஷன் (Machina Vision) எனும் கார் மாடலை காட்சிப்படுத்தியது. இது ஓர் கான்செப்ட் மாடலாகும். இதனை ஹோப்பியம் நிறுவனத்தின் நிறுவனரும், முன்னாள் ரேஸ்கார் பந்தய வீரர் ஓலிவர் லேம்போர்டு ஆகியோரும் இணைந்து வெளியீடு செய்தனர்.

இந்த மாதிரி ஒரு செல்லத்ததான் ரொம்ப நாளா எதிர்பாத்துட்டு இருக்கோம்... 3 நிமிஷ செலவில் 1,000 கிமீ பயணிக்கலாம்!

இவர்களுடன் பிரெஞ்சு நாட்டின் அதிபரும் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தகுந்தது. வெகு விரைவில் இந்த காரின் உற்பத்தியை ஹோப்பியம் கையில் எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் ஏற்கனவே இக்காருக்கான முன்பதிவுகளைத் தொடங்கிவிட்டது. 656 யூரோக்கள் எனும் முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.

இந்த மாதிரி ஒரு செல்லத்ததான் ரொம்ப நாளா எதிர்பாத்துட்டு இருக்கோம்... 3 நிமிஷ செலவில் 1,000 கிமீ பயணிக்கலாம்!

ஹோப்பியம் நிறுவனம் இந்த காரின் சிறப்புகள் பற்றிய முழு விபரங்களையும் வெளியிடவில்லை. இருப்பினும், சுவாரஷ்யமாக வெறும் மூன்றே நிமிடங்களில் இந்த காரில் ஹைட்ரோஜனை ஃபில் செய்துவிட முடியும் என்றும், அவ்வாறு, செய்யும் பட்சத்தில் சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என்கிற ஆச்சரியமளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்த மாதிரி ஒரு செல்லத்ததான் ரொம்ப நாளா எதிர்பாத்துட்டு இருக்கோம்... 3 நிமிஷ செலவில் 1,000 கிமீ பயணிக்கலாம்!

இதுதவிர, இந்த ஹைட்ரஜன் எலெக்ட்ரிக் காரில் அதிகபட்சமாக 493 எச்பி பவரை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டாரும் இடம் பெற இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த மோட்டார் வெறும் ஐந்தே செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த மாதிரி ஒரு செல்லத்ததான் ரொம்ப நாளா எதிர்பாத்துட்டு இருக்கோம்... 3 நிமிஷ செலவில் 1,000 கிமீ பயணிக்கலாம்!

தொடர்ந்து, அதி நவீன தொழில்நுட்ப கருவிகளையும், லக்சூரி அம்சங்களையும் இந்த காரில் ஹோப்பியம் நிறுவனம் வாரி வழங்கியிருக்கின்றது. போர்ஷே, லூசிட் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் கார்களின் உட்பகுதியை டிசைன் செய்தவரே இந்த காரின் உட்பகுதியையும் டிசைன் செய்திருக்கின்றார். முற்றிலும் தனித்துவமான உட்பகுதியை அவர் ஹோப்பியம் மெஷினா காருக்காக உருவாக்கியிருக்கின்றார்.

இந்த மாதிரி ஒரு செல்லத்ததான் ரொம்ப நாளா எதிர்பாத்துட்டு இருக்கோம்... 3 நிமிஷ செலவில் 1,000 கிமீ பயணிக்கலாம்!

1.20 லட்சம் யூரோக்களுக்கு இக்கார் விற்பனைக்கு வரவிருக்கின்றது. இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம் இது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த விலையில் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் ஏற்படலாம் என நிறுவனம் ஏற்கனவே முன்னெச்சரிக்கை விடுத்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது.

இந்த மாதிரி ஒரு செல்லத்ததான் ரொம்ப நாளா எதிர்பாத்துட்டு இருக்கோம்... 3 நிமிஷ செலவில் 1,000 கிமீ பயணிக்கலாம்!

ஹோப்பியம் நிறுவனம் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த அட்டகாசமான எலெக்ட்ரிக் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகளவில் மின்சார கார்களுக்கு நல்ல டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, மின்சார கார்களிலேயே மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் விற்பனைக்கு வரும் வாகனங்களுக்கு உலகளவில் நல்ல டிமாண்ட் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

இந்த மாதிரி ஒரு செல்லத்ததான் ரொம்ப நாளா எதிர்பாத்துட்டு இருக்கோம்... 3 நிமிஷ செலவில் 1,000 கிமீ பயணிக்கலாம்!

அந்தவகையில், ஹோப்பியம் நிறுவனத்தின் இந்த ஹைட்ரஜன் மின்சார காருக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரில் ஹைட்ரஜனை நிரப்பிக் கொள்ள ஏதுவாக பெரிய சிலிண்டர் இடம் பெற இருக்கின்றது. இந்த சிலிண்டர்கள் நீண்ட தூர தடையில்லா பயணத்தை வழங்க வேண்டும் என்பதற்காக சற்று பெரியளவிலும், அதிக பாதுகாப்பானதாகவும் வழங்கப்பட இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 20, 2022, 14:01 [IST]
English summary
Hopium machina vision concept revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+