மாருதி கிராண்ட் விட்டாரா காரின் 27.97 கி.மீ மைலேஜின் ரகசியம் இது தான்... முழு தொழிற்நுட்ப தகவல்கள் இங்கே...

மாருதிசுஸூகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா காரில் உள்ள இன்டலிஜென்ட் ஹைபிரிட் தொழிற்நுட்பம் குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

மற்ற கார்களில் இல்லாத 27.97 கி.மீ மைலேஜ் கிராண்ட் விட்டாரா காருக்கு எப்படிக் கிடைத்தது தெரியுமா ? முழு தொழிற்நுட்ப தகவல்கள் இங்கே . . .

மாருதி சுஸூகி நிறுவனம் சமீபத்தில் தனது விட்டாரா கிராண்ட் காரை அறிமுகப்படுத்தியது. டொயோட்டா மற்றும் மாருதி சுஸூகி நிறுவனம் சேர்ந்து உருவாக்கிய இந்த காரை டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸியர் என்ற பெயரிலும், மாருதி நிறுவனம் கிராண்ட் விட்டாரா என்ற பெயரிலும் விற்பனை செய்துவருகிறது.

மற்ற கார்களில் இல்லாத 27.97 கி.மீ மைலேஜ் கிராண்ட் விட்டாரா காருக்கு எப்படிக் கிடைத்தது தெரியுமா ? முழு தொழிற்நுட்ப தகவல்கள் இங்கே . . .

மக்கள் இந்த கிராண்ட் விட்டாரா காரை அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த கார் வரும் செப்டம்பர் மாதம் முதல் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கார் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது ஒன்று 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் மைல்டு ஹைபிரிட் தொழிற்நுட்பமும், மற்றொரு இன்ஜின் ஆப்ஷனாக 1.5 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் ஸ்டிராங் ஹைபிரிட் தொழிற்நுட்பமும் உள்ளது.

மற்ற கார்களில் இல்லாத 27.97 கி.மீ மைலேஜ் கிராண்ட் விட்டாரா காருக்கு எப்படிக் கிடைத்தது தெரியுமா ? முழு தொழிற்நுட்ப தகவல்கள் இங்கே . . .

இந்நிலையில் இந்த கிராண்ட் விட்டாரா காரில் இண்டலிஜென்ட் ஹைபிரிட் என்ற ஒரு தொழிற்நுட்பம் இருக்கிறது. இந்த ஹைபிரிட் சிஸ்டம் எப்படி வேலை செய்கிறது? என உங்களுக்கு எளிமையாகப் புரியும்படி தெளிவான விளக்கங்களை இங்கே கொடுத்துள்ளோம்.

மற்ற கார்களில் இல்லாத 27.97 கி.மீ மைலேஜ் கிராண்ட் விட்டாரா காருக்கு எப்படிக் கிடைத்தது தெரியுமா ? முழு தொழிற்நுட்ப தகவல்கள் இங்கே . . .

இந்த காரில் 1.5 லிட்டர் கம்பஷன் இன்ஜின் உடன் எலெக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எலெக்டரிக் மோட்டாருக்கு லித்தியம் அயான் பேட்டரி பவருக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்டலிஜெண்ட் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் கார் இங்கும் போது கார் ஸ்டார்ட் ஆவது முழுவதும் எலெக்டரிக்கல் பவரில் தான் இயங்கும்.

மற்ற கார்களில் இல்லாத 27.97 கி.மீ மைலேஜ் கிராண்ட் விட்டாரா காருக்கு எப்படிக் கிடைத்தது தெரியுமா ? முழு தொழிற்நுட்ப தகவல்கள் இங்கே . . .

கார் மெதுவான வேகத்தில் பயணிக்கும் போது முழுவதும் எலெக்ட்ரிக் பேட்டரியில் உள்ள பவரில் தான் இயங்கும் கம்பஷன் இன்ஜினிற்கு இங்கு வேலையில்லை. காருக்கு பவர் அதிகமாகத் தேவைப்படும் போது அதுவே தான கம்பஷன் இன்ஜினை ஸ்டார்ட் செய்து பவரை எடுத்துக்கொள்ளும்.

மற்ற கார்களில் இல்லாத 27.97 கி.மீ மைலேஜ் கிராண்ட் விட்டாரா காருக்கு எப்படிக் கிடைத்தது தெரியுமா ? முழு தொழிற்நுட்ப தகவல்கள் இங்கே . . .

நீங்கள் செல்லும் வேகத்திற்குத் தகுந்தார் போல கம்பஷனில் இயங்க வேண்டுமா? பேட்டரியில் இயங்க வேண்டுமா என காரே முடிவு செய்து கொள்ளும். இது மட்டுமல்ல கம்பஷனில் கார் இயங்கும் போது காரின் பேட்டரி தானாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளும். மேலும் பேட்டரியில் இயங்கும் போது தேவையில்லாமல் பேட்டரி செலவாகுவதைத் தவிர்க்க ரீஜெனரேட்டிவ் பேட்டரி சிஸ்டம் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.

மற்ற கார்களில் இல்லாத 27.97 கி.மீ மைலேஜ் கிராண்ட் விட்டாரா காருக்கு எப்படிக் கிடைத்தது தெரியுமா ? முழு தொழிற்நுட்ப தகவல்கள் இங்கே . . .

இது போக கிராண்ட் விட்டாரா காரில் "இவி மோடு" என்ற ஆப்ஷன் இருக்கிறது. டிரைவர் அந்த ஆப்ஷனை தேர்வு செய்தால் கார் கம்பஷன் இன்ஜினை ஆன் செய்யாமலேயே வெறும் பேட்டரி பவரில் இயங்கும். இந்த இன்டலிஜென்ட் ஹைபிரிட்டில் பெரும்பாலும் பேட்டரியில் இயங்கும் கார் தேவைப்படும் போது மட்டும் கம்பஷன் இன்ஜினை பயன்படுத்தும்.

மற்ற கார்களில் இல்லாத 27.97 கி.மீ மைலேஜ் கிராண்ட் விட்டாரா காருக்கு எப்படிக் கிடைத்தது தெரியுமா ? முழு தொழிற்நுட்ப தகவல்கள் இங்கே . . .

இந்த மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா காரில் எக்கோ, பவர் மற்றும் நார்மல் ஆகிய 3 டிரைவிங் மோட்கள் உள்ளன. பெயருக்கு ஏற்றார் போல அதன் பெர்ஃபாமென்ஸூம் இருக்கும். இன்டலிஜென்ட் ஹைபிரிட் சிஸ்டத்தை பொறுத்தவரை முழுவதுமாக பெட்ரோலில் இயங்க வேண்டுமா அல்லது கம்பஷன் இன்ஜினையும் இயக்க வேண்டுமா என இந்த சிஸ்டமே முடிவு செய்யும்.

மற்ற கார்களில் இல்லாத 27.97 கி.மீ மைலேஜ் கிராண்ட் விட்டாரா காருக்கு எப்படிக் கிடைத்தது தெரியுமா ? முழு தொழிற்நுட்ப தகவல்கள் இங்கே . . .

இந்த காரின் கம்பஷன் இன்ஜினை பொருத்தவரை 92.45 பிஎஸ் பவரை வெளிப்படுத்துகிறது. இதுவே ஹைபிரிட் ஆப்ஷனை பொருத்தவரை 115.6 பிஎஸ் பவர் மற்றும் 122 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். ஸ்டிராங்க் ஹைபிரிட் இன்ஜின் வேரியன்டில் சிங்கிள் ஸ்பீடு சிவிடி கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது பல விதமான கியர் ரேஷியோக்களில் இயங்கும். இது தானாகவேரோடு கண்டிஷன், இன்ஜின் பவர், டிரைவர் இன்புட், வாகனத்தின் வேகம் ஆகியவற்றை கணக்கிட்டு தேவையான ரேஷியோவிற்கு மாறிக்கொள்ளும்,

மற்ற கார்களில் இல்லாத 27.97 கி.மீ மைலேஜ் கிராண்ட் விட்டாரா காருக்கு எப்படிக் கிடைத்தது தெரியுமா ? முழு தொழிற்நுட்ப தகவல்கள் இங்கே . . .

புதிய விட்டாரா கிராண்ட் கார் இன்டலிஜென்ட் எலெக்ட்ரிக் ஹைபிரிட் சிஸ்டம் மூலம் முழு டேங்க் பெட்ரோலில் 1200 கி.மீ வரை இயங்கும். அதாவது லிட்டருக்கு 27.97 கி.மீ என்ற மைலேஜ் கிடைக்கும் என மாருதி சுஸூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Article Published On: Saturday, July 23, 2022, 12:13 [IST]
English summary
How maruti suzuki grand vitaras Intelligent Electric Hybrid system works
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+