உங்க காருல இருக்க பிரேக் பெடல் ஒழுங்க வேலை செய்யுதா? இதை எப்படி பரிசோதித்து பார்ப்பது?..

நம் காரில் இருக்கும் பிரேக் பெடல் சிறப்பான இயக்க நிலையில் இருக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது என்பது பற்றியே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

அதிக வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் காரை உடனடியாக நிறுத்த பிரேக்கிங் சிஸ்டம் மிகவும் அவசியமானது. இந்த அம்சம் சரிவர வேலை செய்யவில்லை என்றால் அந்த பயணம் மிகுந்த ஆபத்தானதாக மாறிவிடும்.

பிரேக் பெடல்

இதனால்தான் கார் பராமரிப்பில் பிரேக்கிங் சிஸ்டத்திற்கு மிக அதிக முக்கியத்துவத்தை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. இந்த அம்சம் உங்கள் காரில் சரிவர இயங்குகின்றதா என எப்படி ஆய்வு செய்வது?, கார் இயக்கமற்ற நிலையில், அதாவது, அணைத்து (ஆஃப்) வைக்கப்பட்டிருக்கும்நிலையில் பிரேக் பெடலை மிதிக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும்போது அந்த பெடலை மிதிக்க நீங்கள் கடினமாக உணர்வீர்கள். அப்படிதான் அது இருக்கவும் வேண்டும். இதைத்தொடர்ந்து, உங்கள் காலை தொடர்ச்சியாக பெடலை அழுத்திய வண்ணமே வைத்துக் கொண்டு காரை ஸ்டார்ட் செய்ய வேண்டும். மிகவும் அழுத்தமாக இருந்த அதே பெடல் சட்டென சுலபமாக இயங்கத் தொடங்கும்.

இவ்வாறு உங்கள் காரின் பிரேக் பெடல் நடந்துக் கொள்ளும் என்றால் அதில் எந்த பிரச்னையும் இல்லை என்றே அர்த்தம். அதேநேரத்தில், அனைத்து நேரங்களிலும் உங்கள் பிரேக்கிங் பெடல் மிகவும் அழுத்தமானதாகவே தென்பட்டால் அந்த சிஸ்டத்தில் கோளாறு இருப்பது உறுதி. ஆகையால், எதனால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதை முதலில் கண்டறிய வேண்டும். இதற்கு மெக்கானிக்கின் உதவியை நீங்கள் நாடுவது மிக சிறப்பானது. இந்த விஷயத்தில் அவர்களுக்கு அனுபவம் அதிக என்பதால் உடனடி தீர்வை உங்களால் காண முடியும்.

என்னென்ன காரணங்களால் பிரேக் பெடல் மிகவும் அழுத்தமாக இருக்கும்?

வேக்யூம் பம்ப் அல்லது பவர் ஸ்டியரிங் பம் தோல்வியுறுதல்:

வெவ்வேறு வகையான பிரேக் பூஸ்டர்கள் வாகன நிறுத்தத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. அது மெக்கானிக்கல் பூஸ்டர் அல்லது எலெக்ட்ரிகல் டிரைவன் பம்ப் இரண்டில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சில வாகனங்களில் ஹைட்ராலிக் பிரேக் பூஸ்டர்களும் பிரேக்கிங் சிஸ்டத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சிஸ்டம் எஞ்ஜினின் வேக்யூமிற்கு பதிலாக பவர் ஸ்டியரிங்கிடம் நேரடியாக ஹைட்ராலிக் பிரஷ்ஷரை பெற்று வாகன நிறுத்தத்திற்காக பயன்படுத்தும்.

இந்த சிஸ்டத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலும் கூட பிரேக் பெடல்கள் அதிக இருக்கமானதாக மாறிவிடும். செர்பன்டைன் பெல்ட்டில் ஏற்படும் பிரச்னை, எலெக்ட்ரிக் பம்ப்பில் ஏற்படும் கோளாறு அல்லது குறைவான ஸ்டியரிங் ஃப்ளூட் பவர் ஆகியவற்றின் காரணத்தினாலேயே வேக்யூம் பம்ப், ஹைட்ராலிக் பிரேக் பூஸ்டர்களில்கோளாறுகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதை மிஸ் பண்ணிடாதீங்க: எத வேணும்னாலும் களமிறக்குங்க ஆனா இந்த இன்னோவாவை வீழ்த்துவது சந்தேகம்தான்! டொயோட்டாவை தூக்கி நிறுத்தபோகுது!இதை மிஸ் பண்ணிடாதீங்க: எத வேணும்னாலும் களமிறக்குங்க ஆனா இந்த இன்னோவாவை வீழ்த்துவது சந்தேகம்தான்! டொயோட்டாவை தூக்கி நிறுத்தபோகுது!

மேலே பார்த்த காரணங்கள் மட்டுமில்லைங்க இன்னும் சில காரணங்களாலும் பிரேக் பெடல் அதிக அழுத்தமாக இருக்கலாம். அவை, வேக்யூம் குழாயில் ஏற்படும் பிரச்னை, அதிக இறுக்கமான காலிபர்கள் மற்றும் பிரேக் லைனில் ஏற்படும் கோளாறு உள்ளிட்டவற்றாலும் பிரேக் பெடல் மிகவும் அழுத்தமானதாக மாறுகின்றன. இவற்றில் ஏற்படும் பிரச்னையை சரி செய்ய மெக்கானிக்குகளை நாடுவதே மிக மிக நல்லது.

நானே இதை சரி செய்துவிடுவேன் என கூறி சிலர் சிக்கலை மேலும் பலமடங்காக்கி விடுகின்றனர். இது மிகுந்த ஆபத்தான சூழலை ஏற்படுத்திவிடும். ஆகையால், பிரேக் பெடலில் காணப்படும் அதிக இறுக்கமான தன்மையையும், சிக்கல்களையும் அவ்வளவு எளிதானதாக எடுத்துக் கொள்ளாமல், அதன் மீது உடனடி அக்கறையைக் காண்பித்திட வேண்டும். இதன் வாயிலாக மிக சிறப்பான ரைடிங் அனுபவத்தை நம்மால் பெற முடியும்.

Most Read Articles

English summary
How to check your brake booster condition
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X